Thread
:
SUNTV
View Single Post
05-07-2006, 07:00 AM
#
3
Drugmachine
Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
சன் டிவியில் ஒளிபரப்பான சூர்யா தொடரைத் தொடர்ந்து `மகள்' என்னும் புதிய மெகா தொடரை தயாரித்திருக்கிறது, நிம்பஸ் டெலிவிஷன் நிறுவனம்.
இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.
வரும் திங்கட்கிழமை தொடங்கும் இந்தத் தொடரின் கதைச்சுருக்கம்:-
ஒவ்வொரு குடும்பத்திலும் மகள் எனப்படுபவள் எவ்வளவு முக்கியமானவள்; குடும்பத்தின் பெருமையையும், கவுரவத்தையும் மகள் எப்படி காப்பாற்றுகிறாள்... குடும்பத்தின் குத்துவிளக்காக போற்றப்படும் இந்த மகள், தன் உறவுகளுக்காக எத்தனை தியாகங்கள் செய்கிறாள்? எவ்வளவோ சுமைகளை சுமந்து, முடிவில் அவள் அடைந்த சுகம்தான் என்ன? இதுவே கதையின் கரு.
அம்மன் படத்தில் வில்லனாக நடித்த ராமி ரெட்டி இத்தொடரில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் சின்னத்திரையில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை.
மற்றும் நடிகர் - நடிகைகள்: மீனாகுமாரி, வரலட்சுமி, சுலக்ஷனா, காவ்யா, சந்தானம், ரிஷி, ஸ்வேதா, ஸ்ரீதர், கோவை பாபு, தியாகராஜன், பிந்து மாதவி, சுந்தரி, முரளி, அர்விந்த், கவுசல்யா, செந்தாமரை, அமிர்தகடேசன், பக்தவச்சலம், தனலட்சுமி, மாஸ்டர் அபிலாஷ்.
பாடல்: பழனி பாரதி. பாடல் இசை: ராஜேஷ் வைத்யா. திரைக்கதை: ஜோதி அருணாச்சலம். வசனம்: எம்.கே.மணி. இயக்கம்: பிரான்சிஸ் பாப்பு. கிரியேட்டிவ் டைரக்டர்: ஆர்.நாராயணன், கே.ஆர்.சுப்புரத்தினம். ஒளிப்பதிவு: ஆர்.பி.எஸ்.சூரியன், எடிட்டிங்: பிஜ×. தயாரிப்பு மேற்பார்வை: ஆர்.ஐயப்பன். தயாரிப்பு: ஆகாஷ் குரானா.
Quote
Drugmachine
View Public Profile
Find More Posts by Drugmachine
All times are GMT +1. The time now is
08:18 PM
.