Thread
:
SUNTV
View Single Post
10-09-2006, 07:00 AM
#
12
doctorzlo
Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
ராணி மகா ராணி
சன் டி.வி.யில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் `கேம்ஷோ' `ராணி மகாராணி' முழுக்க முழுக்க பெண்களே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி, ஓர் சுவாரஸ்யமான அதிர்ஷ்ட விளையாட்டை மையமாக கொண்டது. திரையில் மறைந்திருக்கும் பிரபலம் யார்? என்பதே இந்த விளையாட்டின் பிரதானம். கொடுக்கப்பட்ட நாலு வாய்ப்புகளில் முதல் வாய்ப்பிலேயே அந்த பிரபலம் யார் என்று சரியாகச் சொன்னால் 1 லட்சம் பரிசு.
இரண்டாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 50 ஆயிரம் பரிசு, மூன்றாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 25 ஆயிரம், நாலாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 12,500. இத்தோடு வார்த்தை விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக காத்திருக்கிறது.
நடன நிகழ்ச்சி வரிசையில் `ராணி மகாராணி' நிகழ்ச்சியும் மக்களின் வரவேற்பை பெறும் என்று சரிகம நிறுவனத்தின் பி.ஆர்.விஜயலட்சுமி தெரிவித்தார். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார், மமதி அஞ்சன். ஒளிப்பதிவு- உதயசங்கர். இசை: பால்ராஜ், இயக்கம்: பிரின்ஸ்- வெங்கட்.ஜி.
Quote
doctorzlo
View Public Profile
Find More Posts by doctorzlo
All times are GMT +1. The time now is
12:00 AM
.