Thread
:
Kalaignar TV?
View Single Post
04-19-2008, 11:52 PM
#
19
9mm_fan
Join Date
May 2007
Age
54
Posts
5,191
Senior Member
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30க்கு (முன்பு 8.30) டாட்டா இண்டிகாமின் "ஆட்டம் பாட்டம்" என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரபாகிறது. சென்ர வாரம் வரை அதில் நடுவர்களாக வந்த நடிகை பூஜா, டான்ஸ் மாஸ்ட்டர் பிரசன்னா இருவரும் மாற்றப்பட்டு, தற்போது நடிகர் அப்பாஸ், மற்றும் நடிகை காயத்ரி நடுவர்களாக இருந்து ஸ்கோர் வழங்குகிறார்கள். (இந்த நிகழ்ச்சிக்கென்று தனி த்ரெட் இல்லாததால் இங்கு போஸ்ட் பண்ணியிருக்கிறேன்).
பூஜாவும் பிரசன்னாவும் இருந்தபோது ஓரளவுக்கு சரியான முறையில் மதிப்பிட்டு மார்க் வழங்கி வந்தனர். அதிலும் பிரசன்னா, ஆடுபவர்களின் நடனத்தில் உள்ள நிறை, குறைகளை (குறிப்பாக குறைகளை) சரியான முறையில் சுட்டிக்காட்டுவார். ஆனால் இப்போது அப்பாஸ் மற்றும் காயத்ரி வந்தபின்னர் மதிப்பீடு என்பது கேலிக்கூத்தாகி விட்டது. சும்மா சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்தபடி (கைக்கு வந்தபடி..?) ஒன்பது, பத்து என்று அள்ளி வழங்குகின்றனர். உண்மையில் நன்றாக ஆடியவர்களுக்கு வழங்கினால் பரவாயில்லை. ஆனல் நிலைமை அப்படியில்லையே..!.
சரியான ஆட்டத்துக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறதென்றால் அதைக்கண்டு மகிழ்ச்சியடைபவள் நான்தான். அதே சமயம் பல்வேறு டான்ஸ் மாஸ்டர்கள் கட்டிக்காத்த அரங்கில் தவறான ஆட்டத்துக்கு முழு மதிப்பெண் வழங்கப்படுமானால் அதைக்கண்டு வருத்தம் அடைபவளும் நான்தான். (நான் சங்க காலத்து நக்கீரனின் கொள்ளுப்பேத்தி).
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக ஒன்றைச்சொல்லலாம் என்று நினைக்கிறேன். இப்போது ரீமிக்ஸ் ரவுண்ட் நடந்து வருகிறது. அதில் முதலில் பழைய பாடலையும், பின்னர் பாதிக்குமேல், அந்தப்பாடலின் தற்காலத்திய கெடுக்கப்பட்ட வடிவத்தையும் ஒலிபரப்பி அதற்கு தகுந்தாற்போல ஆடுகின்றனர். முந்தாநாள் ஒரு போட்டியாளர், இளையராஜாவின் அன்றைய பாடலான 'வாடி என் கப்பக்கிழங்கே' பாடலுக்கும் அதன் தற்போதைய வடிவத்துக்கும் ஆடினார். பின்னர் ஆடிய பகுதியில் கொஞ்சமே கொஞ்சம் டான்ஸ் இருந்தது. முதல் பகுதியில் அறவே ஆட்டமில்லை. சும்மா அங்கே இங்கே நின்றாரே தவிர எந்த டான்ஸ் மூவ்மெண்ட்டும் கொடுக்கவில்லை. அதுக்கு இருவரும் பத்துக்கு பத்து (மொத்தம் 20) கொடுத்தனர். அது மட்டுமல்லாது, காயத்ரி ஏதோ காணாததைக் கண்டதுபோல அந்த பெர்ஃபாமென்ஸுக்கு (??) புகழ்மழை பொழிந்தார். அப்பாஸுக்கு சரியாக த்மிழ் பேச வரவில்லை. திக்கித்திணறி பேசுகிறார். ஏதோ சொல்ல நினைக்கிறார். அதை சரியான வார்த்தைகளால் அவரால் சொல்ல முடியவில்லை.
ஒருசில போட்டியாளர்கள் நிஜமாகவே ரொம்ப நல்லா பண்றாங்க. ஆனால் மதிப்பீட்டில் உள்ள குளறுபடிகள் காரணமாக பின்னுக்குப்போய் விடுகிறார்கள்.
Quote
9mm_fan
View Public Profile
Find More Posts by 9mm_fan
All times are GMT +1. The time now is
11:08 AM
.