Thread
:
Cho-vin "EngE BraahmNan"? Jaya tv
View Single Post
02-07-2009, 12:30 PM
#
6
Beerinkol
Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
எங்கே பிராமணன்'
நடிகரும் எழுத்தாளருமான சோ எழுத்தில் வெளிவந்த `எங்கே பிராமணன்' நாவல், சின்னத்திரை தொடராக ஜெயா டிவியில் வருகிறது.
பிரபல தொழில் அதிபர் நாதன்-வசுமதி தம்பதியரின் ஒரே வாரிசு அசோக் விரக்தியின் விளிம்பில் நின்று `தான் யார்?' என்ற ஆன்மிகத் தேடலில் ஈடுபடுகிறான். சந்தேக நிவாரணியாக கை கொடுக்கும் மாங்காடு பாகவதர், சாஸ்திரத்தில் துளியும் நம்பிக்கையற்ற நாதனின் உறவுக்காரர் நீலகண்டய்யர், பல வைதீகர்களை காண்ட்ராக்டில் கையடக்கி வைக்கும் வேம்பு, செல்வந்தரானாலும் வைதீக பிராமணர்களை மதித்து போற்றும் நீதிபதி ஜகன்னாதய்யர் இவ்வாறு பல பாத்திரங்கள் கதையை ஆளுகின்றன.
தன்னை யார் என தெரிந்து கொள்ள பாடுபடும் அசோக்கிற்கு பிரம்மோபதேசம் செய்து வைத்தால், நிவாரணம் ஏற்படும் என்கிறார் பாகவதர். யார் உண்மையான பிராமணன் என்ற சர்ச்சை தீர, வசிஷ்டரை பூமியில் மானுடனாக (அசோக்) பிறப்பித்த விஷயத்தை கூறுகிறான் ஈசன். `யார் பிராமணன்' என்ற கேள்விக்கு விடை காணாத வசிஷ்டர் பிரம்மோபதேசம் நிறைவேறியதும் விடை காண்பார் என சிவபெருமான் கூறுகிறார். ஆனால் அவ்வாறு விடை கிடைக்காமல் போகவே, சிவனை அணுகி கேட்க அவர் `பூணூல் நடைபெற்றது. ஆனால் பிரம்மோபதேசம் இன்னும் நடைபெறவில்லை' என்கிறார்.
சிவபெருமான் குறிப்பிட்ட `அந்த' பிரம்மோபதேசம் அசோக்கிற்கு வையாபுரி என்ற அரசியல்வாதியின் கையாள் சிங்காரம் என்கிற பிராமணன் அல்லாத மனிதன் மூலம் சித்திக்கின்றது! குலத்தால் அல்ல, குணத்தாலே பிராமணியம் அறியப்படும்என்ற பேருண்மை விளங்குகிறது.
வசிஷ்டர் தேடிய `பிராமணன்' கிடைக்கிறான்.
டெல்லிகுமார், நளினி, குயிலி, கோபி, கோல்டன் சுரேஷ், வரலட்சுமி, ஸ்ரீவித்யா, விஜயகிருஷ்ணராஜ் நடிக்கிறார்கள். திரைக்கதை வசனம் எழுதி தொடரை இயக்குபவர்: வெங்கட்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு தொடர் ஒளிபரப்பாகிறது.
Quote
Beerinkol
View Public Profile
Find More Posts by Beerinkol
All times are GMT +1. The time now is
08:09 PM
.