Thread
:
Thamizh Peachu - Vijay TV
View Single Post
08-03-2008, 12:32 AM
#
19
Ifroham4
Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
The links given here for the 'kaipEsi' poetry didnt work. Stumbled across another link while googling for some lyrics.
Thurai Saravanan at his best - in the ethugai mOnai round of Vijay's thamiz pEchu engaL moochu.
It's more gripping when you listen to the poetry with visuals. He's got an interesting style.
http://www.bollywoodsargam.com/video...ter_video.html
வடக்கே திருச்சி மலைக்கோட்டை
தெற்கே திருமையம் புகழ்கோட்டை
நடுவிலே திகழும் கலைக்கோட்டை
நாடே புகழும் புதுக்கோட்டை
என்னுடைய ஊர்
என் ஊருக்கு முதல் வணக்கம்
என்னைப்பார்த்து கவிதை எழுதச் சொன்னார்கள்
கவிதை எனும் பேரரசி வரவுக்காக - நான்
கைய்யினிலே கோல் பிடித்து காத்திருந்த நேரமது
மக்கள் எல்லாம் மாக்கள் ஆனார்
எதனாலே? இரண்டாலே
ஒன்று விலைவாசி
மற்றொன்று கைபேசி
கைபேசி...
அதற்கு மேதினியில்
மேன்மைதரும் சிறப்பு - நான்
கைகொள்ளும் மேன்மைதரும்
அதுவே என் தலைப்பு
கைபேசி என்னிடம் பேசிய கதை சொல்கிறேன்
எல்லா திசைகளும் எனக்குள் அடக்கம்
எல்லோர்க்கும் என்மீதே இன்றைய மயக்கம்
வடிவத்தில் சிறியவன் நான்
வாமன அவதாரம் நான்
அடியெடுத்து நான் அளந்தால்
அண்டமெல்லாம் சிறிதாகும்
கையளவு இதயத்தின்
கடலளவு ஆசைகளை
கடல்கடந்து இருந்தாலும்
கச்சிதமாய் எடுத்துரைப்பேன்
மூர்த்தியிலே சிறியவன் நான்
மும்மடங்கு பொழிகின்ற
கீர்த்தியிலே உயர்ந்தவன் நான்
கேள்வி ஞானம் உடையவன் நான்
சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் எல்லோரின்
காதோரம் பேசுகின்றேன்
கைக்குள்ளே வாழுகின்றேன்
கன்னியர்க்கும் காளையர்க்கும்
கைப்பேசி இல்லையெனில்
அன்னையற்ற பிள்ளையென
அனாதையாய் திரிந்திடுவார்
தானாலெ பேசினாலே - தனியாக
சிரித்தபடி போனாலே
பைத்தியம்தான் போகுதென்பார் அந்நாளில்
வீதியிலே இன்றைக்கோ
வாகன நெரிசலிலும்
பாதிபேர் சிரித்தபடி
பைத்தியம்போல் உளருகின்றார்
காரணம்தான் தெரிகிறதா
கைபேசி என்னிடம்தான்
ஊர்கதைகள் அளக்கின்றார்
உலகையே மறக்கின்றார்
மன்னனுக்கும் புலவனுக்கும்
மதிகாணா நட்பு அன்று
கன்னியர்க்கும் காளையர்க்கும்
கைப்பேசி காதல் இன்று
பொத்தானை மறந்தாலும்
புத்தகத்தை மறந்தாலும்
புசித்திடவே மறந்தாலும்
பெற்றோரை அத்தானை
யாரைத்தான் மறந்தாலும் - மனிதன்
விவேக கைப்பேசியென்னை
வித்தகனை மறப்பதில்லை
காதலனும் நோக்கியா
காதலியும் நோக்கியா - இதில்
பேதையான பெற்றோரும்
பின்னொரு நாள் நோக்கியா
நோக்கமெல்லாம் மனிதருக்கு
நோக்கியாவின் பக்கம்தான்
ஏக்கமெல்லாம் மனிதருக்கு (நோக்கியாவின்)
என்வரிசை கைபேசிதான்
சோற்றுக்கு வழியில்லை - உனக்கு
சோனி எரிக்சன் அவசியமா
ஏரோட்டும் பிழைப்பிருக்கு - உனக்கு
எதிர்த்தாப்பில் ஏர்செல் கடை எதற்கு
நோயில்லா வாழ்வுபோதும்
நோக்கியா தேவையில்லை
என்று நான் சொன்னாலும்
என் கேள்விக்கு பதில் இல்லை
என்னையே புகழ்கின்றார்
எருமைபோல் விழிக்கின்றார்
“என காதலியே
உன் காதல் வார்த்தை பட்டால்
கல்லும் இனிதாகும் கனியாகும்
உன் காதல் வார்த்தை வாங்கிதரும்
என் கைப்பேசி இனிதாகும்”
என்று சொல்வோன் சிலர்
“பலருக்கோ நிமிஷமும் இனிக்கும்
பிழைப்பில்லை
எனக்கோ என் காதலியிடமிருந்து
கைபேசியிலே அழைப்பில்லை”
என்று என்னால் ஏங்குவோர் சிலருண்டு
என்றாலும் தினம் காலை - நான்
எழுப்புவோர் பலருண்டு
தலையான கைபேசி - என்னை
தவமிருந்து கண்டெடுங்கால்
கொலைக்காரன் கைய்யில் நான்
குத்துயிராய் கிடைக்கின்றேன்
கைப்பேசி திரையினிலே
காந்திபடம் இருப்பதில்லை
மைப்பூசும் நடிகையரின்
மார்பளவு படமிருக்கும்
இருக்குமிடம் தெரியாமல்
பித்தனைப்போல் பிதற்றுவோனுக்கு
கைபேசி நஞ்சாகும்
கல்லறைக்கு வழியாகும்
அஞ்சுதற்கும் அஞ்சாமல்
அறிவிலிபோல் நடந்துகொண்டால்
கைபேசி கொலைக்கருவி
கல்லறைக்கு வழிகாட்டி
கனத்தினிலே...
கைபேசி காதலினால் சாலையிலே
பிணமானோர் எண்ணிக்கை - நான்
பேசத்தான் அடங்கிடுமா
கைபேசி காத்திருக்க
கவனமெல்லாம் அதிலிருக்க
மெய்பேசி சென்றவன்மேல்
மோதியதே பேருந்து
இரு சக்கர வாகனத்தில்
விரைவாக செல்கையிலும்
பெருமை பல பேசுகின்றார்
பெரு விபத்தில சாகின்றார்
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்
மூலையெல்லாம் பேச்சிருக்கும்
வானளக்கும் எஸ் எம் எஸ்
வளர்கொடுமை என் சொல்வேன்
அங்கிங்கெனாதபடி
ஆனந்த கைபேசி
எங்கெங்கும் நிறைந்திருக்கும்
இவ்வுலக புதுமைக் கடவுள்
ஊர் உலகே மிக விரும்பி
உறவாடும் என்னை ஏன்
தேர்தலிலே இன்னும் - தேரந்த
சின்னமாக வைக்கவில்லை
இருந்தாலும் எனக்குள்ள
ஏற்றத்தை சொல்லிவிட்டேன்
வரும்நாளில் சின்னமென
வைக்கட்டும் தேர்தலிலே
Quote
Ifroham4
View Public Profile
Find More Posts by Ifroham4
All times are GMT +1. The time now is
08:31 PM
.