Thread: Sivasakthi
View Single Post
Old 06-15-2006, 07:00 AM   #1
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
சின்னத்திரையில் இப்போதெல்லாம் ரிச்னெஸ் விஷயங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. ஒரு அறை அதில் கதாபாத்திரங்கள் பேசுவது என்று ஆரம்பித்த சீரியல்கள் இப்போது வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்கிற அளவுக்கு வளர்ந்திருக்கின்றன.

காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் கதை முழுக்க சிங்கப்பூரில் நடக்கிற மாதிரி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கல்லூரிக்காலம் தொடரிலோ பாடல்காட்சியை மட்டும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் போட்டு எடுத்திருந்தார்கள். மானாட மயிலாட நிகழ்ச்சிக்கெனவே ஏவி.எம் ஸ்டூடியோவில் அருவி பின்னணியில் ஒரு நிரந்தர செட் போட்டு காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்..

இந்த ரிச்னெஸ் விஷயம் இப்போது பிரமிப்பின் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது. சன் டிவியில் வரவிருக்கும் சிவசக்தி தொடருக்கென போடப்பட்டிருக்கும் பிரமாண்ட செட்டுக்கள் பற்றித்தான் இப்போது சின்னத்திரை, பெரியதிரை வட்டாரங்களில் பேச்சு. சென்னை நந்தம்பாக்கம் பர்மா காலனியில் கிராமப்புற பின்னணியில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் இப்படி எத்தனைவகை கிராமிய நடனங்கள் உண்டோ அத்தனையையும் ஒன்றாகக் கூட்டிச்சேர்த்து தொடருக்காக பாடல்காட்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். `சந்தோஷம்தானே வாழ்க்கையில் எல்லாரும் தேடறது', என்று தொடங்கும் இந்தப் பாடல்காட்சியில் கிராமிய நடனக்கலைஞர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் நடனக்கலைஞர்களும் இணைந்து ஆடினார்கள்.

இந்தக்காட்சி படமாக்கப்பட்ட பகுதி முழுக்க கிராமத்து மக்கள் வாழும் பகுதி என்பதால், படப்பிடிப்பை பார்க்க ஒட்டு மொத்தக் கிராமமே திரண்டு வந்திருந்தது.

"டிவி தொடருக்கு இப்படியொரு பிரமாண்டம் அதுவும் பாடல் காட்சிக்கே இப்படி என்பது சீரியலுக்கு சரிவருமா?'' சிவசக்தி தொடரின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரிடம் இந்த கேள்வியை வைத்தோம். அவர் சொன்னார்: "இப்போது ரசிகர்களிடம் புதுமையை விரும்பும் மனநிலை ஏற்பட்டு இருக்கிறது. நல்ல கதையாக இருந்தாலும் அதிலும் அவர்கள் ரசனைக்கேற்ற விஷயங்கள் இருக்கிறதா என்பதையும் கவனிக்கிறார்கள். இதனால் தொடர்களிலும் ரிச்னெஸ் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.''
MannoFr is offline


 

All times are GMT +1. The time now is 04:03 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity