Thread
:
'MAANAADA MAYILAADA' (Kalaingar TV) PART - 2
View Single Post
03-10-2008, 07:00 PM
#
4
softy54534
Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
அறிமுகச்சுற்று... (09.03.2008)
அறிமுகச்சுற்று என்றதும், ஏதோ புதிய போட்டியாளர்களை மேடையில் ஆடவைத்து அறிமுகம் செய்வார்களோ என்று எண்ணியிருந்தோம். அப்படியில்லை. ஒரு கலகலப்பான கலந்துரையாடல் போல அறிமுகம் செய்தனர். பழைய போட்டியாளர்களில் சத்தீஷ், ஜெயஷ்ரீ, ஜார்ஜ், ராஜ்காந்த் ஆகியோரும் வந்திருந்தனர். கூடவே காம்பியர் கீர்த்தி. (சஞ்சீவ் மிஸ்ஸிங். அடுத்த ரவுண்ட் வருவாரா அல்லது அவரையும் மாற்றி விட்டார்களா தெரியவில்லை). பழைய ஜோடிகளில் ஜோடியாக வந்திருந்தவர்கள் சதீஷ் ஜெயஷ்ரீ மட்டுமே. இறுதிப்போட்டி பங்கேற்பாளர்களில் ராஜ்காந்த், ஜார்ஜ் தனியாக வந்திருந்தனர். ராகவ் ப்ரீத்தா வரவில்லை. (காரணம்... உள்ளங்கை நெல்லிக்கனி).
'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் பங்கேற்கும் போட்டியாளர்களில் நிறைய தெரிந்த முகங்கள். நாம் நிறைய சீரியல்களிலும், மற்றும் பல்வேறு நிகழ்ச்சியிலும் பார்த்து பழகிப்போன முகங்கள். அவர்கள் இப்போது ஆடப்போகிறார்கள் என்றதும் நம் மனதில் கூடுதல் எதிர்பார்ப்பு.
1) ஏற்கெனவே சன் டிவியின் 'சூப்பர் 10' நிகழ்ச்சியில் கலக்கோ கலக்கு என்று கலக்கிய கணேஷ் மற்றும் ஆர்த்தி. இவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் நடித்து வருபவர்கள். அதிலும் ஆர்த்தி நகைச்சுவை நடிகையா வேகமாக வளர்ந்து வருபவர். கணேஷ், உலகத்திலேயே அதிகப்படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமைபெற்ற மறைந்த வி.கே.ராமசாமியின் மகன்.
2) கோகுல்நாத் (இவர் ஜோடி யாருன்னு கவனிக்கலையே). இவர் விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் எலெக்ட்ரானிக் ஸ்பெஷலிஸ்ட். ஆம் பல்வேறு வித்தியாசமான சவுண்ட்களோடு நிகழ்ச்சி வழங்குபவர்.
3) பாலாஜி மற்றும் பிரியதர்ஷினி. பிரியதர்ஷிணி பற்றி எல்லோருக்கும் தெரியும். சன் டிவியின் காம்பியராக பணியாற்றியவர். கோலங்கள் சீரியலில் நளினியின் மகளாக நடித்து வருபவர். இடையிடையே வானிலைச்செய்திகளில் தலைகாட்டுவார்.
4) சக்தி சரவணன் - யோகினி.
5) ஆகாஷ் - ஸ்ருதி
6) ரஞ்சித் - ஐஸ்வர்யா
7) கார்த்திக் - நீபா
8) சுரேஷ்வர் - மது. இவர்களில் சுரேஷ்வரை நிறைய சீரியலில் பார்த்திருக்கிறோம். அண்ணாமலையில் தீபாவெங்கட் ஜோடியாகவும், மலர்களில் சினேகா நம்பியார் ஜோடியாகவும் நடித்தவர்.
9) மதன் - பிரியங்கா. இருவரும் சீரியல்கள் மூலம் நன்கு அறிமுகமானவர்கள். கோலங்கள் சீரியலில் காதில் கடுக்கன் போட்டுகொண்டு, தீபாவெங்கட்டை மிரட்டி மலையில் இருந்து விழுந்து செத்துப்போகும் 'மேடி'யை மரந்திருக்க முடியாது. இவரது ஜோடியாய வரும் பிரியங்கா அண்ணாமலை, அரசி உள்பட ஏராளமான சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்திருப்பவர். அரசியில் கங்காவின் மனைவியாக (?) வருபவர்.
10) சாய்பிரசாத் - ஸ்வேதா (ஆமாங்க, முதல் பாகத்தில் நிதிஷுடன் ஆடிய அதே ஸ்வேதாதான்). சாய்பிரசாத் என்றாலே அண்ணாமலை வில்லன்தான் நினைவுக்கு வரும். அதுக்கு நேர்மாறாக, செல்வியில் ஜி.ஜே.யின் தம்பியாக சாந்தசொரூபியாக வந்து பாதியிலேயே காணாமல் போனவர்.
11) லோகேஷ் - சுசிபாலா (பழைய சுசிபாலாதான்)
நிகழ்ச்சியின் கடைசியில் வந்த கலா மாஸ்டர், பழைய பெண் போட்டியாளர்களில் யாராவது இரண்டு பேருக்கு மீண்டும் வாய்ப்பளிப்ப்தாகவும், அதில் முதல் பரிசு பெற்றிருந்த ஜெயஷ்ரீ தவிர, மற்ற ஏழுபேரின் பெயர்களை சீட்டுகுலுக்கிப்போட்டு எடுப்பதாகவும் சொல்லி சீட்டு குலுக்கிப் போட்டதில் தேர்வானவர்கள்தான் ஸ்வேதாவும் சுசிபாலாவும். குலுக்கிப்போட்ட சீட்டுகளில் ப்ரீத்தாவின் பெயர் இருந்ததா..? தெரியாது. இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ஒருவேளை அவர் பெயர் வந்துவிட்டால், அவர் ராகவ் தவிர்த்து வேறு ஒருவருடன் ஆட மாட்டார் என்பது ஒரு காரணம். முந்தைய போட்டியின்போது ஏற்பட்ட மனக்காயம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட வாய்ப்பில்லை என்பது மற்றொரு காரணம்.
(நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த என் கணவர் அடித்த கமெண்ட்: "அது சரி சாரூ..., ஸ்வேதா, ஆர்த்தி ஆகியோர் ஆட இருப்பதால் நல்ல இரும்பு மேடையாக அல்லவா அமைக்க வேண்டும்").
பழைய போட்டியாளர்களான ஜார்ஜ், சதீஷ், ராஜ்காந்த ஆகியோர் ரொம்ப ரிலாக்ஸ்டாக, புதியவர்களைப் பார்த்து நிறைய ஜாலி கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.
'நாங்க நன்றாக ஆடி பேரைக்காப்பாத்துவோம்' என்று ஆர்த்தி சொல்ல, அதுக்கு சதீஷ், 'பேரை காப்பாத்துவது இருக்கட்டும். ஏ.வி.எம்.ஃப்ளோரைக் காப்பாத்துங்க'. (ஆர்த்தியின் உடல்வாகுதான் நமக்கு தெரியுமே).
அதுபோல இன்னொரு கட்டத்தில் ஜார்ஜ், 'இந்தமுறை ஸ்பெஷல் ஐட்டமாக மழை டான்ஸ் கிடையாதாம். அதுக்கு பதிலாக போட்டியாளர்கள் எல்லோரும் தீ மிதிக்க வேண்டுமாம்' என்று கமெண்ட் அடிக்க ஒரே கலாட்டா.
புதிய போட்டியாளர்கள், பழையவர்களின் நிகழ்ச்சிகளில் எந்தெந்த ஜோடிகளின் எந்தெந்த நிகழ்ச்சிகள் பிடித்தன என்று சொல்லப்போக அவை மீண்டும் மலரும் நினவுகளாக ஒளிபரப்பப் பட்டன. அருமையாக இருந்ததுடன், அடேயப்பா என்னென்ன மாதிரி சுற்றுக்களெல்லாம் நடந்துள்ளன என்று மலைக்க வைத்தன.
அடுத்த வாரம் பார்ப்போம்.....
Quote
softy54534
View Public Profile
Find More Posts by softy54534
All times are GMT +1. The time now is
10:21 PM
.