View Single Post
Old 10-31-2005, 06:10 PM   #10
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
இந்து சமயத்தில் வேதம் சார்ந்த சமய வழிபாடு, வேதம் சாராத சமய வழிபாடு என இருவித வழிபாடுகள் காணப்படுகின்றன. வேதம் சார்ந்தது ஆரியர்களுக்கும் வேதம் சாராதது திராவிடர்களுக்கும் உரியது என்கிறார்கள். வேதம் சார்ந்த வேள்விச் சடங்குகளை உள்ளடக்கிய வழிபாடு நிகமம் என்றும் வேதம் சாராத புூசை வழிபாடு ஆகமம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

தற்போது இந்து - சைவக் கோயில்களில் நிகமம் ஆகமம் இரண்டையும் ஒன்றாக இணைத்து புூசையையும் வேள்விச் சடங்குகளையும் ஒன்றாகச் செய்கின்றனர்.

அடிப்படையில் இந்து சமயம் ஆரியருடைய வேத சமயமேயாகும். சைவசமயத்தைப் பொறுத்தளவில் அதில் பேரளவு ஆரிய வேத சமயக் கூறுகளும் சிற்றளவு திராவிடக் கூறுகளும் காணப்படுகின்றன. நீரும் புூவும் கொண்டு செய்யப்படும் திருமால் வழிபாடும் முருக வழிபாடும் திராவிடக் கூறுகளாக எடுத்துக்கொள்ளலாம்.

பிற்காலத்தில் திருமால் வழிபாடும் முருக வழிபாடும் முறையே ஆரியரது காத்தல் கடவுள் விஷ்ணுவோடும் போர்க் கடவுள் ஸ்கந்தனோடும் இணைக்கப்பட்டன.

கந்தசுவாமிக்கு வள்ளி - தெய்வானை என்ற இரு தேவியர் வாய்த்ததற்கு இந்த இணைப்பே காரணமாகும்.


வேதங்களும் ஆகமங்களும் தாமே தோன்றியவை, அதாவது மனிதனால் இயற்றப்படாமல் சிவபெருமானால் வெளிப்படுத்தப்பட்டவை என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. அதனைத் திருமுறைகள் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளன.

சைவ சிந்தாத்துக்கு முதல் நு}ல் மெய்கண்ட தேவர் எழுதிய சிவஞானபோதம் ஆகும். ஆனால் இந்த நு}ல் வடமொழியில் உள்ள இரௌவ ஆகமத்தில் பாவ விமோசனப் படலத்தில் சிவஞான போதத்தில் காணப்படும் சூத்திரங்களுக்கு நேரிடையான வடமொழிச் சூத்திரங்கள் காணப்படுகின்றன.

இதில் எது முந்தியது எது பிந்தியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. தமிழில் மெய்கண்ட தேவர் எழுதிய சிவஞான போதத்தைத்தான் வடமொழியில் மொழிபெயர்ச்துச் சேர்த்து விட்டார்கள் என்பது சைவ சித்தாந்திகளது மதமாகும்.

தமிழிலுள்ள சைவ சித்தாந்த சாத்திரங்கள், வடமொழிச் சொற்கள். கருத்துக்கள், தத்துவங்கள் நிறைய எடுத்துக் கையாளப்பட்டுள்ளன. சிவஞானபோதம் என்ற சொல்லில் காணப்படும் சிவன், ஞானம், போதம் வடமொழி சொற்களாகும். இத்தியாதி காரணங்களால் சைவ சித்தாத்தமும் ஏனைய, இந்திய தத்துவ முறைகள் போல வடமொழி மூலமுடைய போலும் என்ற கருத்து அறிஞர்களிடையே காணப்படுகிறது. (தமிழர் சமய வரலாறு- பக்கம் 205-206)

மெய்கண்டரின் குருவாக விளங்கிய சகலாகம பண்டிதரே (திருத்துறையுூர் சதாசிவ சிவாசாரியார்) பின் அவரது மாணாக்கராகிறார். அதன் பின் அவரது பெயர் அருணந்தி சிவாசாரியார் ஆயிற்று. இவரே சிவஞானசித்தி, இருபா இருபஃதும் என்ற இரண்டு சைவ சித்தாந்த தத்துவ நூல்களை இயற்றியவர்.

அருணந்தி சிவாசாரியாரின் மாணவர் மறைஞானசம்பந்தர், அவருடைய மாணவர் உமாபதி சிவாசாரியார். இவர் பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களில் 8 சாத்திரங்களை எழுதியவர். இவரே சிவஞான போதத்திற்கு உரை செய்தவர் ஆவார். 'வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்" என்று கூறி வேதத்துக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறார். உமாபதி சிவாசாரியார் தில்லை தீட்சகர்களில் ஒருவர். சைவத்துக்கும் இந்து சமயத்துக்கும் அதிக வேறுபாடு இல்லையென்பதையும் முன்னது பின்னதில் இருந்து தோற்றம் பெற்றதை எடுத்துக்காட்டவே மேலே உள்ள தரவுகளை எடுத்துச் சொன்னேன்.

சென்ற நு}ற்றாண்டில் சைவம் தமிழர்களுடைய சமயம் என மறைமலை அடிகளார் நிறுவ எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. அவருக்குப் பின்னர் குன்றக்குடி அடிகளார் எடுத்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.

ஒரு நாள் உமாபதி சிவாசாரியார் கோயில் புூசையை முடித்துக் கொண்டு பல்லக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அரசன் அளித்திருந்த அதிகாரப்படி குடை, கொடி, சாமரம், தீவட்டி போன்றவற்றை ஏந்தி அவர் பின்னால் பணியாட்கள் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ~பட்ட கட்டையில் பகற்குருடு ஏகுது பாரீர்| என்றொரு குருல் கேட்டது. தாம் பல்லக்கில் ஏறிச் செல்வதையும் முன்னால் தீவட்டி ஏந்திச் செல்வதைப் பார்த்தே அவ்வாறு கூறப்பட்டதை உமாபதி உணர்ந்தார். உடனே பல்லக்கை விட்டு இறங்கி அக்குரலுக்குரியவரைத் தேடிச் சென்றார். அவ்வாறு கூறியவர் மறைஞான சம்பந்தர் ஆவார்.

உமாபதியைச் சோதிக்க எண்ணிய சம்பந்தர் நெசவாளிகள் வாழ்ந்து வந்த ஒரு தெருவில் புகுந்து பாவுக்கு வார்க்கும் கஞ்சியைக் கையில் ஏந்திக் குடித்தார். உமாபதி சிறிதும் தயங்காமல் அவருடைய முழங்கை வழியே ஒழுகிய கஞ்சியைத் தம் கையால்வாங்கிப் பருகினார். சம்பந்தர் அவரைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.

இதனை அறிந்த தில்லை மூவாயிரவர் உமாபதியைப் பிராமண சமூகத்தில் இருந்தும் ஊரினின்றும் விலக்கி வைத்தனர்.

நாயன்மார்களில் ஒருவரான பெத்தான் சாம்பன் உமாபதி நடத்தி வந்த திருமடத்துக்கு விறகு வெட்டிக் கொண்டு வந்து கொடுத்தவன். அவனுக்கு உமாபதி நிர்வாண தீட்சை செய்ய அவன் உடனே முக்தி பெற்றான்.

உமாபதி அவனைக் கொன்றுவிட்டதாக அரசனுக்கு முறையிடப்பட்டது. அரசன் அந்த அற்புதத்தை மீண்டும் செய்து காட்டுமாறு உமாபதிக்குக் கட்டளையிட்டான்.

முக்திக்குத் தகுந்தவர் யாரும் அங்கு இல்லாமையால் ஒரு முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்து அதை மறையச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இன்றும் சாதி பாராட்டுவதில் தில்லைத் தீட்சதர்கள் விடாப்பிடியாக நிற்கின்றனர். நாயன்மார்களுக்குப் புூசை செய்யவும் பாராயணம் பண்ணவும் வழிபாடியற்றவும் மறுத்த தில்லைத் தீட்சகர்கள் நாவலரின் கடும் கண்டனத்துக்கு ஆளானார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'இக்காலத்தார் தங்கள் தங்கள் கருத்துக்கிசைய நடந்த பிராமணர்கள் எத்துணைப் பாதகர்களாயினும் அவர்களையே மேன்மக்களென்று பிரதிட்டை புூசை திருவரிழா முதலியன செயய நியோகிக்கிறார்கள.; நமது சைவசமயிகள் ஒற்றுமையுடையர்களாய்த் திரண்டு, தேவாலயங்களெங்கும் சைவாகமங்களில் விதித்த இலக்கணங்களமைந்த பிராமணர்களைக் கொண்டே பிரதிட்டம் புூசை திருவிழா முதலியவற்றை வழுவாது இயற்றுவித்தலும்????"

நாவலரைப் பழி தீர்த்துக் கொள்ள இராமலிங்க அடிகளாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையில் நடந்த அருட்பா - மருட்பா சொற்போரில் தில்லைத் தீட்சகர்கள் அடிகளார் பக்கம் நின்று நாவலரை வாய்க்கு வந்தபடி வைதார்கள்.
LottiFurmann is offline


 

All times are GMT +1. The time now is 12:03 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity