View Single Post
Old 11-01-2005, 02:08 PM   #1
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default Temple and Tamil - Tamil as the language of worship......
சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது!

இடைக்காலத்தில் இருவேறு கருத்துக்கள் தோன்றி வளரலாயின. ஒன்று ஒருவன் அறிஞனாக இருந்தால் அவன் பார்ப்பன குலத்தவனாக இருக்க வேண்டும். மற்றொன்று தமிழில் நு}ல் செய்தால், அது வடமொழியில் இருந்து மொழிபெயர்த்ததாகவோ அல்லது தழுவலாகவோ இருக்கவேண்டும்.

தொல்காப்பியம் எமக்கு இன்று கிடைத்துள்ள நு}ல்களில் காலத்தால் முந்தியது என்பதை எல்லாத் தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுமட்டும் அல்லாது தொல்காப்பியம் நீர்மையும் தண்மையும் வண்மையும் தொன்மையும் நிறைந்த தமிழ்மொழியின் எழுத்துச் சொல் இலக்கணத்தையும் தமிழ்மக்களின் வாழ்வியல் இலண்கணத்தையும் (பொருள்) விளக்கும் சிறந்த நு}ல் ஆகும். மொழி, வாழ்வு இரண்டையும் இணைத்து இலக்கணம் சொன்ன சிறப்பு தொல்காப்பியத்துக்கு மட்டுமே உண்டு.

எழுத்ததிகாரம் ஒலி அளவு, உயிர், மெய் என்ற பிரிவுகள், குறில், நெடில். வல்லினம், மெல்லினம், இடையினம், குற்றியலுகரம், குற்றியலிகரம், மொழிமரபு, புணரியல் போன்றவற்றுக்கு இலக்கணம் சொல்கிறது.

சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொல்லின் சிறப்பும் திணை பால் முதலிய உயிர்ப்புகுப்பு உயிரியல் பகுப்பு முறையும் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்துக் காரணத்தோடு அமைக்கப்பட்டுள்ளன என்பவற்றை விளக்கிக் கூறுகிறது.

பொருளதிகாரம் நிலம் பொழுது, கருப்பொருள், உரிப்பொருள், அகத்திணை, புறத்திணை, களவியல், கற்பியல், பாவின் பண்பு, மெய்ப்பாடு, உவமயியல், மரபியல் பற்றிச் சொல்கிறது.

இவ்வளவு சீரும் சிறப்பும் நிறைந்த நு}லைத் தமிழ்ப் புலவர் ஒருவர் இயற்றி இருப்பாரா? ஒருக்காலும் இருக்காதே! இருக்க முடியாதே! பின் தொல்காப்பியர் எழுதாவிட்டால் யார் அதனை இயற்றி இருப்பார்?
தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் அன்று, அதை எழுதியவர் திரணதூமாக்கினி என்பவர், அவரது தந்தையார் பெயர் சமதக்கினி. அதாவது நூலாசிரியர் ஒரு ஆரிய முனிவர்! வடமொழியில் பாணினி எழுதிய பாணினியமே தொல்காப்பியத்துக்கு வழி நூல்.!

தொல்காப்பியர் வரலாறு போலவே திருக்குறளை எழுதிய திருவள்ளுவரது புகழைக் கண்டு மனம் புழுங்கியவர்கள் முதல் குறளில் உள்ள ஆதிபகவன் என்னும் தொடரைப் பயன்படுத்தி திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தவராகவும் காட்டல் வேண்டிக் கட்டுக் கதைகள் கட்டிவிட்டனர்.

திருவள்ளுவர் யாளிதத்தன் என்ற பிராமணனுக்கும் சண்டாளப் பெண்ணுக்கும் பிறந்ததாக ஞானாமிர்தம் (6 ஆம் நூற்றாண்டு) தெரிவிக்கிறது. அதற்குப் பிந்திய கபிலர் அகவல் 'அருந்தவ முனியும் பகவற்குப் பருவுூர்ப் பெரும் பதிக்கட் பெரும்புலைச்சி ஆதி வயிற்றினில்" பிறந்தார் என்றும் அவரது பெற்றோர் தங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளைப் பிறந்த இடத்திலேயே விட்டு விட்டுப் போய்விடுவதால் 'தொண்டை மண்டலத்தில் வண்தமி;ழ் மயிலைப் பறையரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தார்" எனக் கூறுகிறது.

மேலும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் இழித்துப் பழிக்கும் முகமாக திருக்குறள் அறத்துப் பால் இராமாயணம், மகாபாரதம், பராசர சம்கிதை, பாகவதம், இருக்கு வேதம், மனு ஸ்மிருதி போன்ற சாத்திரங்களைத் தழுவியது என்றும் பொருட்பால் சாணக்கியன் இயற்றிய அர்த்த சாஸ்திரம், காமந்தக நீதி, சுக்கிர நீதி, போதாயன ஸ்மிருதி ஆகியவற்றில் இருந்து கடன் வாங்கப்பட்டதென்றும் காமத்துப்பால் வாத்ஸ்யாயனார் வடமொழியில் இயற்றிய காமசூத்திரத்தின் தழுவல் என்றும் வடமொழிப் பற்றாளர்கள் பகர்கிறார்கள்.

வாதஸ்யாயனார் கூறும் பிறன்மனை நயத்தலை திருவள்ளுவர் அறத்துப் பாலில் கண்டிக்கிறார். அப்படியிருக்க வள்ளுவரின் காமப் பால் காமசூத்திரத்தில் இருந்து எப்படி வந்திருக்க முடியும்?

திருக்குறளில் வலியுறுத்தப்படும் அறம் என்ற சொல்லுக்கு விளக்கம் கூற வந்த பரிமேலழகர் தனது உரைப் பாயிரத்தில் 'அவற்றுள் அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியது ஒழித்தலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

அவற்றுள், ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்ற, அவற்றிற்கு ஓதிய அறங்களில் வழுவாது ஒழுகுதல்" எனப் பாலில் நஞ்சு கலப்பது போன்று ஆரிய நச்சுக் கருத்துக்களை முதலும் இடையும் முடிவுமாகப் புகுத்தி தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு விளைவித்துள்ளார். திருக்குறளை ஊன்றிப் படிப்பவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.

இவ்வாறு தமிழில் ஒன்றுமில்லை அது சூத்திராள் பேசும் நீச பாஷை வடமொழியே நிலத் தேவர் பேசும் தேவ பாஷை என்பது 'அவாள்" மத்தியில் நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. இலக்கணம் என்ற சொல் லஷணத்தில் இருந்து வந்தது என்று சொல்லாடல் புரிவதற்கு இந்தத் திமிர்ப்போக்கே முக்கிய காரணி ஆகும்.

'காஞ்சிகாமகோடி பீடாதிபதியாக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த ஆதீனங்களை ஒன்றுபடுத்தி ஒரு பொதுவான சமய அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டார். திருவாவடுதுறை ஆதீனத்துக்கு ஏகப்பட்ட சொத்துகள் இருந்தது. அது போலவே மற்ற ஆதீனங்களுக்கும் வருவாய் இனங்கள் உண்டு. ஆதீனங்களின் வருவாயில் 5 விழுக்காட்டைப் பயன்படுத்தி ஆன்மீகப் பரப்புரை செய்ய வேண்டும் என்பது திட்டம்.

சொன்னபடி மடங்கள் தங்களது வருவாயில் 5 விழுக்காடு பங்கைக் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் கூட்டம் மட்டும் நடந்தபடி இருந்தது. அதில் மதுரை பெரிய ஆதீனம் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்.

'கோவில்களைக் கட்டியது தமிழ் மன்னர்கள், அதற்கு உதவி செய்தது, உழைப்புக் கொடுத்தது, வியர்வை கொடுத்தது, வீர்யம் கொடுத்தது, கல் சுமந்தது, மண் சுமந்தது எல்லாம் பிராமணர்களா? கல்சுமந்து மண் சுமந்து கோவில் கட்டியவனுக்குச் சாமியைச் சுமக்க, பூசை செய்யத் தடையா?

வடநாட்டில், குறிப்பாக காசியில், கோயிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் அவரவர் பூசை செய்து போகிறார்கள். அதுபோல இங்கேயும் அனைவரும் பூசை செய்யவேண்டும். மடங்களுக்கான அமைப்பு அதற்கு முன் முயற்சி எடுக்கவேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெறவேண்டும் அதற்கு இந்த அமைப்பு உதவவேண்டும்" என்றெல்லாம் மதுரை ஆதீனம் புதிய கருத்துக்களைப் பேசினார்.


சொன்னதோடு இல்லாமல், தஞ்சாவூர் ஜில்லாவில், கும்பகோணம் சுவாமிமலை இடையே இருக்கிற திருப்புறம்பியம் கோயிலில் குடி கொண்டுள்ள சிவனைப் போலவே வேறொரு விக்ரகத்தைக் கோயிலுக்கு வெளியே வைத்து அதை அனைவரும் பூசிக்க ஏற்பாடும் செய்தார்.

இது மடங்களுக்கான அமைப்பில் சலசலப்பை உண்டு பண்ணியது. ஏற்கெனவே நிதியாதாரம் இல்லாமல் நடைபோட்ட அமைப்பில் மதுரை ஆதீனத்தின் கருத்தை மகாபெரியவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

'சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது" என்றார் மகா பெரியவர். (அக்னிகோத்திரம் ராமனுஜதாத்தாச்சாரியார் எழுதும் 'இந்து மதம் எங்கே போகிறது?" - நக்கீரன் 30-03-2005)

இந்தச் சூத்திராள் வெறுப்பும் தமிழ் வெறுப்பும் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க, புூதபரம்பரை பொலிய" வந்துதித்த ஞானசம்பந்தர், நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவைகலந்து, ஊன்கலந்து, உயிர்கலந்து தித்திக்கும் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் போன்ற பிராமணர்கள் மீதும் உமிழப்பட்டது.

மன்னார்குடியில் காஞ்சி சங்கராச்சாரியாரின் து}ண்டுதலின் பெயரில் பாவை (திருவெம்பாவை, திருப்பாவை) மாநாடு நடத்தப்பட்டது. வைணவத்தையும் சைவத்தையும் இணைப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். மாநாடு மேடையில் ஆண்டாள் மாணிக்கவாசகர் சிலைகள் பக்கம் பக்கமாகப் போடப்பட்டிருந்தன. வைணவமும், சைவமும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பதைப் பார்த்து சிலரது கண்கள் அனல் கக்கின. அந்த அனலை அடக்க முடியாமல் மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர் அக்னிகோத்திரம் ராமனுஜதாத்தாச்சாரியாரிடம் ஓடினார்.

'ஸ்வாமி.. என்ன இப்படிப் பண்ணிட்டேள்?" என மொட்டையாக ஆரம்பித்தார்.

'எதை எப்படிப் பண்ணிட்டேன்? விவரமா சொல்லுங்கோ" என நான் பதில் உரைத்தேன்.

'தெரிஞ்சுண்டே கேக்கறேளா?" மறுபடியும் மொட்டை மொழிகளையே பேசினார் ராஜகோபால் தீட்சிதர்.

'தீட்சிதரே.. என்ன சொல்றீர்? நீர் கேக்கறது எனக்கு முன்கூட்டியே தெரியறதுக்கு நான் என்ன பகவானா?"

தீட்சிதர் அப்போதுதான் தன் உள்ளக் கிடக்கையை உடைத்தார்.

பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே... ஆண்டாள் யாரு? மாணிக்கவாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகன் இருக்கலாமா? இது பகவானுக்கே பாவம் பண்ற மாதிரி ஆகாதா? அந்தச் சங்கராச்சாரி சொன்னா நீர் கேக்கணுமா? '(இந்துமதம் எங்கே போகிறது?"- அதிகாரம் 27)

ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகர் இருக்கலாமா? என தீட்சகர் ஏன் எரிந்து விழ வேண்டும்? அதன் பின்புலத்தில் ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது.

ஞானசம்பந்தர் சீர்காழியில் கவுணிய கோத்திரத்தில் பிறந்த பிராமணர். தமிழ்நாட்டில் பவுத்தத்தையும் சமணத்தையும் அழித்தொழித்தவர். அதற்கு அவர் கையில் ஏந்திய ஆயுதம் தமிழ் ஆகும்.

சைவத்தோடு தமிழை இணைத்துக் கொண்ட சம்பந்தர் தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன், முத்தமிழ் ஞானசம்பந்தன், செந்தமிழ்வல்ல ஞானசம்பந்தன், சீரார்தமிழ் ஞானசம்பந்தன், தமிழ்விரகன், தமிழ்கெழு விரகினன், என்று பலவாறு பலமுறை கூறிக் கொண்டார்.

ஞானசம்பந்தர் பாடிய 383 பதிகங்கள் ஒவ்வொன்றிலும் 11 பாடல்கள் இருக்கும். இந்தப் பாடல்கள் பெரும்பாலும் ஒரு சீரான வரிசையில் இருக்கும். எட்டாவது பாடல் கயிலைமலை எடுத்த வாளரக்கன் (இராவணன்) பற்றியதாக இருக்கும். ஒன்பதாவது பாடல் பிரமனும் விட்டுணுவும் தேடியும் அடிமுடி காணாத சிவனைப் போற்றிப் பாடியதாக இருக்கும்.

பத்தாவது பாடல் புறச் சமயங்களான பவுத்தம் (பொதியர்கள்) சமணம் (பிண்டியர்கள்) இரண்டையும் சாடுவதாக இருக்கும். கடைசிப் பாடல் சம்பந்தரே தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன், முத்தமிழ் ஞானசம்பந்தன், நான்மறை ஞானசம்பந்தன், முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன், மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் என அழைத்துத் தன் தமிழ்செய் மாலை செப்பவல்லார்கள் அறவன் கழல் சேர்வார், பாவம் கெடும், நற்கதி அடைவார்கள் எனப் பாடுவார்.

தமிழ்மொழிக்கு சங்கத்தமிழ், சங்கமலித் தமிழ் என நு}ற்றுக்கணக்கான அடைகளைத் தமது தேவாரப் பதிகங்களில் பதிவு செய்துள்ளார்.

சமயகுரவர்களில் ஒருவரான சுந்தரர் 'நாளும் இன்னிசையால் தமி;ழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்குலகவர் முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் தன்மை யாளனை" என சம்பந்தரைச் சிறப்பிக்கிறார். தமிழிசை கேட்கும் ஆவலால் சிவன் ஞானசம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்தான் என்கிறார்.

பிற்காலச் சான்றோர்களும் மூவர் தமிழைப் பாராட்டி இருக்கிறார்கள்.

'தேவரெல்லாம் தொழச்சிவந்த செந்தாள் முக்கண்
செங்கரும்பே! மொழிக்குமொழி தித்திப்பாக
மூவர்சொலும் தமிழ்கேட்கும் திருச்செவிக்கே
மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோதான்"

எனத் தாயுமானவர் பாடுகிறார்.

பிராமணரான ஞானசம்பந்தன் நீச பாசையான தமிழைப் புகழலாமோ? போற்றலாமோ? கூடாதே, அடாதே, பாவமாச்சே என ஞானசம்பந்தருக்கு எதிராகப் பிராமணர்கள் போர்க்கொடி தூக்கினார்கள

to be continued....
doctorzlo is offline


 

All times are GMT +1. The time now is 10:08 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity