View Single Post
Old 06-18-2006, 07:52 PM   #9
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
//நல்ல திரி.
சமீபகால பத்திரிக்கைகளிலும்,பிற இலக்கியவாதிகளும் நிறைய மரபுப்பிழைகளை செய்கிறார்கள்.அவற்றுள் 'கோவை' எனும் சொல்லை 'கோர்வை' என எழுதுவது முதன்மையானதாகவும்,repeated-ஆகவும் உள்ளமை காண்க.
தொன்மையான செய்யுட்களில் கோவை என்ற சொல் இடம்பெறுகிறது.anthology என்பதன் தமிழ்ப்பதம்.
உதாரணம்:நித்திலக்கோவை,மும்மணிக்கோவை.//
உண்மைதான்.

"கோர்வை, முயற்சிப்பது" என்பவெல்லாம் பிழைகள் என்பதில் ஐயமில்லை.
தாளிகைத் துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொல்கிறார்: கோவை என்று எழுதினால் மக்களுக்குப் புரியாது, முயலுதல் என்றால் முயலைப்பற்றிய எண்ணம் வந்துவிடுகிறது என்று! -- சொல்லிப் புன்னகை வேறு புரிந்தார். அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் போலிருக்கின்றது. நாம் நல்லதமிழ் பயில்வோம்[/quote]
Lt_Apple is offline


 

All times are GMT +1. The time now is 12:07 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity