Thread
:
TAMIL W0RD DEVELOPMENT
View Single Post
08-27-2006, 03:33 AM
#
18
LottiFurmann
Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
வாரியார் தரும் விளக்கம்:
"எழுத்துக்கள் எல்லாம் "அ" முதலாகக் கொண்டு விளங்குவது போன்று உயிர்களாகிய நாமும் ஆண்டவனை முதலாகக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். கல்வி கற்பதன் பயன் கடவுளை (வாலறிவன்) வணங்குவதே என்பது "கற்றதனாலாய பயன்" என்ற குறளுக்கு அவர்தரும் குறிப்பு." -- (வாரியார்)
சிவம் (=செம்மையாகிய கடவுள்) பழந்தமிழர் ஆண்டவனுக்கு வழங்கிய பெயர். வேறு மதங்கள் தமிழரிடைப் பரவாத காலத்துச் சொல் " சிவம்" என்பது. எனவே சிவம் என்பதும் ஆண்டவன் என்பதும் ஒன்றே. ஆனால் இன்று சிவம் இந்துக்கடவுள் என்ற நிலையில் பொருள் குறுகிவிட்டது. ஒரே சொல்லை யாவரும் வழங்கியிருந்தால் இங்ஙனம் பொருள் குறுக்கமடையாது. அல்லா என்பது உலகைப்படைத்த கடவுள் என்று நபி நாதர் அறிவித்துவிட்டபோதும், அது "முஸ்லீம்" கடவுள் என்று உலகில் பலர் கருதுவதுபோல.. சொல்லின் உட்பொருள் வேறு; அது பயன்பாட்டில் அடையும் குறுக்கப்பொருள் வேறாம்.
Quote
LottiFurmann
View Public Profile
Find More Posts by LottiFurmann
All times are GMT +1. The time now is
12:29 AM
.