View Single Post
Old 08-27-2006, 04:52 AM   #19
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
[tscii][color=indigo]Sivamaalaa wrote:

PostPosted: Tue Jan 31, 2006 2:20 am Post subject: puthiya urai. Reply with quote Edit/Delete this post Report Post

PostPosted: Tue Jan 31, 2006 2:20 am Post subject: puthiya urai. Reply with quote Edit/Delete this post Report Post
திருக்குறள் புதிய உரை, பேராசிரியர்: Dr நவராஜ் செல்லையா, M.A., D.Ltt., D. Ed. எழுதியது. இதன்படி:

அந்தணன் = ?

அறவாழி அந்தணன்: (குறள் 8) கட்டளை இடுகிற வல்லமை பெற்ற குரு.

அந்தணர் என்போர் அறவோர்: (குறள்: 30). அழகிய தீபமாக ஒளிர்(பவர்). ++
பழைய உரைகள்: முனிவர்.

இவர் உரை அறத்துப்பாலுக்கு மட்டுமே வெளிவந்துள்ளதுபோல் (Nov.2000) தோன்றுகிறது. (ராஜ்மோகன் பதிப்பகம், 8, போலிஸ் குவர்ட்டர்ஸ்ரோடு, T.நகர், சென்னை, 600017, தொலைபேசி: 4342232).


PostPosted: Thu Feb 02, 2006 9:09 pm Post subject: aathi pakavan Reply with quote Edit/Delete this post Report Post
ஆதிபகவன் என்பது சூரிய பகவனைக் (பகவானைக்) குறிப்பது என்பது முனைவர் நவராஜ் செல்லையா அவர்களின் விளக்கம்.

*ஆ >ஆகு > ஆக்கம் (ஆகு +அம்)
ஆ > ஆதி (ஆ+தி). தி என்பது suffix பின்னொட்டு அல்லது விகுதி.

எனவே ஆதி என்பது தமிழேயாகும் என்பது இவர் கருத்து எனலாம்.

ஆக்கமே தொடக்கம். ஆதியே தொடக்கம்.

இந்தச் சொல் தமிழ்ச் சொல்லாக்க முறைகளின்படியமைந்த சொல்லாகும்.

ஆதம் என்ற சொல்லையும் "ஆ" என்ற முதனிலையோடு இவர் தொடர்பு படுத்துவதுபோல் தெரிகிறது.

பகவு + அன் = பகவன் என்று பிரித்துள்ளார்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், புலவர் குழந்தை ஆகியோர் போல், இவரும் இச்சொல்லை அடையாளம் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dr செல்லையா மும்முறை இந்திய தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

குறிப்பு: *ஆகு> ஆக்கு (பிறவினை)>ஆக்கம் (ஆக்கு+அம்) என்பதுமாம்.

++அழகிய தீபமாக ஒளிர்(பவர்) என்பதால் அம்+தணல்+அர் என்று கண்டறிந்து, தணலர் என்பது தணர் என்று இடைக்குறைந்தது என்பார் போலும்
Lt_Apple is offline


 

All times are GMT +1. The time now is 12:31 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity