ஒரு , ஓர் பயன்பாடு ------------ இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான் ( ஒருமைப் பெயர்ச்சொல்லைக் குறிப்பிடப் பயன்படுவது) ஓர் எனும் சொல் உயிரெழுத்தில் துவங்கும் ஒருமைப் பெயர்ச்சொல்லைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஓர் அரசன் ஓர் ஈட்டி ஓர் உலகம் ஓர் ஓடம் ஒரு எனும் சொல் உயிர்மெய்யில் துவங்கும் ஒருமைப் பெயர்ச்சொல்லைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கடிதம் ஒரு வண்ணத்துப்பூச்சி ஒரு பூ தற்காலத் தமிழ்க் கவிகள் பாடலின் சந்தத்திற்காக இரண்டையும் (ஓர், ஒரு) ஒன்றாகப் பாவித்தெழுதி பயன்பாட்டுக் குழப்பத்தினை உருவாக்கிவிட்டார்கள். // ஆங்கிலத்தைத் துணைக்கழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஓர் - an ஒரு - a //