View Single Post
Old 04-28-2009, 07:18 AM   #37
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
Originally Posted by bis_mala Originally Posted by sar Originally Posted by bis_mala ஆதிபகவன்:
----------------

முதல் குறளில் இடம்பெற்றுள்ள "ஆதிபகவன்" என்ற கூட்டுச்சொல், ஆதியுடன் கூடிய பகவனை -- அதாவது அம்மனுடன் ஒரு பகுதியாய் நிற்கும் இறைவனாகிய சிவபெருமானைக் குறிப்பதாகும்.

இது பகவான் என்ற வடசொற் கூட்டன்று; பகவான் வேறு; பகவன் வேறு. இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்புதல் கூடாது.
பகவத் கீதை என்னும் வட மொழிச் சொல்லில் பகவன் + கீதை என்பதின் புணர்ச்சியாய்த்தானே இருக்க வேண்டும்? தமிழ் இலக்கண முறைப்படியான புணர்ச்சியாயின், பகவன்+ கீதை என்பது பகவத்கீதை என்று வருமாறில்லை.
இஃது சங்கதமொழிச் சந்தி யாகும்.
சரி...அப்படியெனின் வடமொழியில் உள்ளதோ பகவான் + கீதையே அன்றி பகவன் என்ற செந்தமிழ்ச் சொல்லுக்கும் பகவத்கீதைக்கும் சம்பந்தம் இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக சொல்கிறீர்களா?
(தமிழில் பகவற்கீதை என்றே புணரும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.. ஏன் இப்படி கேட்கிறேன் என்றால் வடமொழியில் உள்ள 'த்' பல இடங்களில் தமிழில் ற் என்று மாறுவதைக் கண்டிருக்கிறேன். ex: உத்சவம் - உற்சவம்)) <font color="blue">

குறிப்பிட்ட சங்கதச் சொற்களுக்கு பக்(பஜ்) (bhag) என்பதே அடிச்சொல் என்பர். இதற்கும் பகுத்தல் என்பதே பொருள். இதிலிருந்து: பக (பகுத்தளிப்போன்) என்றாகும். பகதேவ என்ற சொல்லும் இதனடியாய் அமைந்த ஒன்று.

வத் என்பது வச் என்றும் தோன்றும்.

பகவச் > "பகவச்சரணாரவிந்ததியான"
பகவச் > பகவச்சாஸ்த்ர

என்பன எடுத்துக்காட்டுகள்.

இனி:

பகவத் > பகவதானந்த
பகவத் > பகவதாரதன
பகவத் > பகவதர்ச்சன
பகவத் > பகவதாஸ்ரயபூத

மற்றும்:

பகவத் > பகவத்பக்தி
பகவத் > பகவதபாஸ்கர
பகவத் > பகவத்பட்ட(ர்)
பகவத் > பகவத்பாவக
பகவத் > பகவத்தாஸ
பகவத் > பகவத்தர்மவர்ணன

என்றிப்படிப் புணர்மொழிகள் பல. இவற்றை ஆய்ந்து நோக்குக.

The rules differ in Sanskrit.
( அதாவது: பகவத் +கீதா என்பதில், "த்" தோன்றுவது, "ன்்" என்பதன் சந்தித் ் திரிபாக அன்று. மேலும் "ன்" (
brraverishhh is offline


 

All times are GMT +1. The time now is 12:52 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity