View Single Post
Old 05-27-2009, 05:33 AM   #40
PhillipHer

Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
Default


ஆனாலும் இன்னும் நீங்கள் ஒன்று விளக்க வேண்டி உள்ளது... முழுமை அடைய...

பகவன்- ஆண்பால் பகவதி - பெண்பால்- கடவுளைக் குறிக்கும் இவை தமிழில் பகு(divide) என்பதோடு தொடர்புடையது இல்லை.

அதே போல் பகவான், பாகவதம், பகவத், பகவச் போன்ற சொற்களை மட்டும் ஏன் divide என்பதோடு சம்பந்தப் படுத்த வேண்டும் என்பதற்கு தயவு கூர்ந்து விளக்க வேண்டும்..
அதாவது: சொல்லாராய்ச்சி வல்லுநர் இங்ஙனம் கூறியுள்ளனர் என்று சொன்னால், இப்பதில் தங்களுக்கு மன நிறைவு அளிக்குமோ என்னவோ என்று யோசிக்கிறேன்,

இதை இன்னும் கொஞ்சம் விளக்க வேண்டுமானால் :

இறைவனைப் "படியளப்பவன்" என்று மக்கள் நினைத்தனர் அல்லது நம்பினர். பரமசிவனும் பார்வதியும் படியளப்பதாகப் பாட்டிமார் பேரப்பிள்ளைகளுக்குப் போதிப்பதுண்டு. குவியலாக உள்ள நற்பொருள்களை, ஒவ்வொருவருக்கும் ஏற்புடையவாறு பகிர்ந்தளிப்பவர் என்பது பொருள். பகிர்தல் என்ற சொல்கூட "பகு> பகிர்" என்று அமைந்ததுதான். divide பண்ணாமல் distribute செய்ய இயலாது. இறைவனுடைய இத்தகைய உலகைப் பராமரிக்கும் செயலுக்குப் "பகுத்தல்" என்பதே அடிப்படையாகும்.
எல்லாம் வல்ல அவனே பகுத்தளிப்பவன் என்ற பொருளில்தான், இங்கு குறிப்பிட்ட சொற்கள் அமைந்துள்ளன. இன்னும் சொல்லப்போனால் "இது பாவம்" என்றும் "இது புண்ணியம்" என்றும் அவனே பகுத்து, பவநோய் தணித்து, மாயை அகற்றி, கடைத்தேறச் செய்கின்றான். பிறப்புக்குத் தகுந்த குணங்களையும் அவனே பகுத்துரைத்ததாய்ச் சொல்வதும் அறிந்திருப்பீர்கள். படைத்தல், காத்தல், அழித்தல், முதலாக அருளல் ஈறாகத் தன் தொழில்களை அவனே பகுத்துக்கொண்டு உலகை நிறுவி நடாத்திக்கொண்டிருக்கின்றான். ஆகவே இறைவனை the great divider (the benevolent distributor) என்று முன்னோர் நினைத்து, இச்சொற்களை அமைத்த அவர்தம் நுண்மதியை நாம் போற்றத்தான் வேண்டும்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஒரு சொல்லின் சொல்லமைப்புப் பொருள் (etymological meaning) வேறாகவும்; அதன் பெறப்பட்ட (derived meaning ) வேறாகவும் இருக்கலாம்.
எடுத்துகாட்டாக: நல் என்ற அடியிலிருந்து நாற்றம் என்ற சொல் ஏற்பட்டது. ஆனால் நாற்றம் என்ற சொல்லுக்கு: இன்று நன்மை அல்லது நல்ல வாசனை என்ற பொருள் இல்லை. இந்தச்சொல் பொருள் மாறிவிட்டது: இதற்கு "இழிபு" (degradation) எனலாம். இதேபோல் பொருள் உயர்பும் உண்டு. (elevation) என்று சொல்லலாம். இவற்றுக்கு வேறு பெயர்களும் கூறப்படுவதுண்டு. இதேபோல், பகவான் முதலிய சொற்கள் பொருள் உயர்பு அல்லது விரிவு அடைந்துள்ளன. இன்னொரு எடுத்துக்காட்டு: அல்லா என்ற அரபுச் சொல்லுக்கு தொடக்கப்பொருள் யாது? இப்போதுள்ள பொருள் யாது? நாம் கவனத்தில் கொள்வதுடன் விட்டுவிடலாம். அங்ஙனமே Christ என்றால் நெய்யணிந்த பெருமான் என்பது முன்னைப் பொருள். இன்று "மீட்பர்" ("இரட்சகர்") saviour என்பதே பொருள். நாளடைவில் சொல்லமைப்புப் பொருள் மாறுகிறது; மறு வரையறவு (redifinition) செய்யப்பட்டு விளக்கப்படுகிறது, அறிஞர் பெருமக்களால்.. இதுவே இயல்பு ஆகும்.

பகவான் என்ற சொல்லும் எப்போதும் ஒரே பொருள் தருவதன்று. "பகவான் ராம கிருஷ்ணர்" "பகவான் ஷிருதிபாபா" என்ற தொடர்களில் இச்சொல் தெய்வத்தன்மை பெற்ற மனிதர்களையே குறித்தது. இங்கு: சொல்லியல் (etymological meaning) பொருளும் இல்லை; கீதை கூறும் (acquired religious) பொருளும் இல்லை. Words take on meaning according to usage too. In specific disciplines, words may be used variously from the etymological as well as derived normal meanings.

பகு என்ற தமிழ் அடிச்சொல்லுக்கும் bhaj, bhag என்ற சங்கத மூலச்சொல்லுக்கும் பகுத்தல் என்பதே பொருளாயிருப்பதால், அதிற்பிறந்த "bhagavan" என்பதற்கு "supreme" என்று பொருள்கூறுவது "உயர்பு" அல்லது "ஏற்றுரை" ஆகும். தவறு என்று சொல்லவில்லை; அது ஒரு மறுவிளக்கம், அந்த இடத்துக்கு அது பொருத்தம் ஆகும்.

பகம் - ஐசுவரியம் முதலிய ஆறு அடைவுகள்; பகம்+ ஆன் = பக+ஆன் = பகவான், அவ்வாறையுமடைந்தவன் என்று பொருள் கூறுவதுமுண்டு!!

Also see: bhaga `" dispenser "' , gracious lord , patron (applied to gods , esp. to Savitr2i) RigVeda. Atharvana Veda. (bestowing wealth and presiding over love and marriage) ,

bhagavan from bhaga: also dispenser (divider or distributor)

பகவன் என்பதற்குப் பொண்பால் வடிவம் " பகவதி" என்று இருப்பதனால், "பகு" என்ற மூலச்சொல்லுக்கு உள்ள தொடர்பு அறுந்துபோய்விடாது. அப்பன் பகுத்து அருள் பாலிப்பதுபோலவே, அம்மையும் செய்வதற்குத் தடையேதுமில்லை.

அட்மிரல் என்ற ஆங்கிலச்சொல், அரபு "அமீர்" என்ற சொல்லில் இருந்து வந்தது என்பர். முழுத் தொடருக்கும் பொருளை நோக்கினால், chief of transport என்று பொருள்படுமாம். இப்போது அட்மிரலுக்கும் அமீருக்கும் உள்ள பொருட்பொருத்தத்தைவிட, "பகு" - பகவன் முதலியவற்றின் பொருத்தம் நன்றாகவே உள்ளதென்று சொல்லலாம்.

பகவாந் could be same or atleast similar as our தமிழ் word (ஆதி) பகவன் இல்லையா? பகவானுக்கும் ஆதிபகவனுக்கும் ஒருபோன்மை (similarity) இல்லை என்று நான் சொல்லவில்லை. கூட்டிக்கழித்துப் பார்த்தால் கடவுள் ஒன்றுதான். பகவான் வேறு, ஆதிபகவன் வேறு என்று வாதிடுவதற்கில்லை. பகவானுக்கும் "பகு" என்பதன் இனமான bhag என்பதே மூலம். ஆதிபகவன் என்பதிலுள்ள பகவு+அன் என்பதற்கும் "பகு" என்பதே மூலம். அடிமூலம் ஒன்றாயினும் சொல்லமைப்பிலும், பொருண்மையிலும் பயன்பாட்டிலும் அவை வேறு. ஆதிபகவன் = அம்மையின் பகுதியானவன் என்று பொருள் கூறினேன். ஆதிபகவு + அன் என்று பிரித்தோம். Bhagavan = bhaga+van. Therefore it is analysed differently. .The purport too is not same. ஆதிபகவன் என்ற சொற்றொடர் திருக்குறளில் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. So it must have been used with some special significance not found in any other treatise. Here ThiruvaLLuvar has coined a similar sounding word ushering in a different meaning.

இதுவரை சொன்னதில் ஏதும் நிறைவளிக்காதது இருந்தால் சொல்லுங்கள். பின்னர் மேலே உரையாடலாம்..
PhillipHer is offline


 

All times are GMT +1. The time now is 12:52 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity