Thread
:
1000 songs to hear before you die.
View Single Post
10-08-2010, 05:39 AM
#
40
Fegasderty
Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
கடுமையான ராசா பிரியரையும் இறுக்கமாக வசீகரிக்கும் ஆற்றலுள்ள சில எம் எஸ் வி பாடல்களைக்கீழே தருகிறேன்.
என் கருத்துப்படி, இவற்றைத்தள்ளுபடி செய்து தமிழ்ப்பாடல் பட்டியல் உண்டாக்குவது பருப்பு இல்லாமல் சாம்பார் செய்வது போன்ற வேலை :
1. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது (வறுமையின் நிறம் சிவப்பு, எஸ்பிபி, ஜானகி, திரையில் ரெண்டு வசீகரங்கள், பாலச்சந்தர்).
வீணையும் தபலாவும் மற்றும் கிடார் கார்ட்ஸும் வைத்துக்கொண்டு மெலடியில் மாயம் செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர்! கவிஞர் பெரிய உதவி. நாயகி ஹம் செய்ய அதற்கு நாயகன் கவிதை எழுதும் அழகு இந்தப்பாடலின் தனித்துவம். (கொசுறு : மற்றுமொரு ரஹ்மான் சர்டிபிகேட்)
2. விடிய விடிய சொல்லித்தருவேன் - போக்கிரி ராஜா, எஸ்பிபி / சுசீலா, இனிமையோ இனிமை, மீண்டும் வீணையின் மென்மை இசை, திரையில் ரெண்டு காந்தங்கள்.
3. அந்த மானைப்பாருங்கள் அழகு (யேசுதாஸ், வாணி ஜெயராம் / அந்தமான் காதலி)
பாடலின் துவக்கத்தில் வரும் இசையில் இதற்கு இணையாக நிற்பன வெகு சில பாடல்களே என்பது என் உறுதியான கருத்து. மெட்டும் அதே போல. இனிமையோ இனிமை!
4. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் (டி எம் எஸ் / சுசீலா / அன்பே வா) தொடக்க ஹம்மிங் முதல் முடியும் வரை நம்மை ஆட்கொள்ளும் பாடல்! தமிழ்த்திரையில் தோன்றியவற்றுள் மிக மிக அழகிய காட்சிகள் என்றால் இந்தப்பாடலின் தொடக்கத்தில் வரும் ரத சவாரி கண்டிப்பாய் இருக்கும். தொடக்க இசையும் அதே போல. உலகின் மிகச்சிறந்த இசைத்துளிகளில் ஒன்று இது என அடித்துச்சொல்லுவேன்!
5. விழியே கதை எழுது (யேசுதாஸ் / சுசீலா / உரிமைக்குரல்) விழி இழையில் அதிகம் இது பற்றி எழுதியாச்சு
...இன்னும் எம் எஸ் வி பாட்டுகள் இருக்கு, வரும்...
Quote
Fegasderty
View Public Profile
Find More Posts by Fegasderty
All times are GMT +1. The time now is
07:52 PM
.