View Single Post
Old 05-13-2010, 02:35 PM   #35
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
பாடல்: கொட்டும் மழைதனிலே
திரைப்படம்: காதல் சாட்சியாக
இசை: சௌந்தர்யன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஸ்வர்ணலதா

கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
இன்பம் தொட்டு இழுக்கிறதே
அட ஆயிரம் ஆயிரம் மோக மின்னல் தொட
தேகம் சிலிர்க்கிறதே இடி வந்து இடிக்கிறதே
இமை மூடிய போதிலும்
பேரின்ப நாடகம் எங்கும் தெரிகிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே

இரவின் மடியில் பூத்த இரு இளசுகள் தான்
புது உறவின் மடியைத்தேடி இங்கு தவிப்பதும் ஏன்
சிந்தடி மலரே முத்தம் தந்திட சொர்க்க கதவு திறக்கும்
சிப்பியின் உள்ளே முத்து சிதறி தெறிக்க இதழ்கள் சிவக்கும்
உறங்க மறந்து இங்கொரு விருந்து முடிய
விடிந்த பொழுதை வரச்சொல்லி
இளமை மீண்டும் கடிதம் எழுத

கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
இன்பம் தொட்டு இழுக்கிறதே

கண்ணில் இருப்பதென்ன இழுக்கும் காந்தமடி
உன் அழகு இடையில் நெளிவுகள் கடல் அலைகளடி
தலையணை எதற்கு என் மார்பினில் நீ சாய்ந்துவிட்டால்
விலையில்லை அதற்கு சுகம் கோடியே ஒன்று சேர்ந்துவிட்டால்
பருக பருக சுகம் அது பெருகும் பெருகும்
பாதை ஒன்றில் இரு உடல்
பதிந்து தானே உருகும் உருகும்

கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
இன்பம் தொட்டு இழுக்கிறதே
அட ஆயிரம் ஆயிரம் மோக மின்னல் தொட
தேகம் சிலிர்க்கிறதே இடி வந்து இடிக்கிறதே
இமை மூடிய போதிலும்
பேரின்ப நாடகம் எங்கும் தெரிகிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
இன்பம் தொட்டு இழுக்கிறதே
doctorzlo is offline


 

All times are GMT +1. The time now is 09:43 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity