Thread
:
Let's Talk About Theme Songs
View Single Post
05-14-2010, 02:32 AM
#
40
brraverishhh
Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
பாடல்: மழைவிழும் கொடியென
திரைப்படம்: தூங்காத கண்ணின்று ஒன்று
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
மழைவிழும் கொடியென நதி விழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது
கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இள மனம் சிறகினை விரிக்குது
வசந்தமும் இங்கு வந்தது இன்று
மங்கல வாழ்க்கை மலரட்டும் என்று
தகதக தகதக தகதக தஜ்ஜம்
தகதக தகதக தகதக தஜ்ஜம்
மழைவிழும் கொடியென நதி விழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது
கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இள மனம் சிறகினை விரிக்குது
மங்கையின் குங்குமம் மன்னவன் என்னுடன்
சங்கமம் ஆவது எப்பொழுது
உன் சந்தன இதழால் கவியெழுது
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆஆ
மங்கையின் குங்குமம் மன்னவன் என்னுடன்
சங்கமம் ஆவது எப்பொழுது
உன் சந்தன இதழால் கவியெழுது
செங்கயல் விழிகளில் அஞ்சனம் கரைந்திட
தினம் தினம் மன்மத கதை படிப்போம்
செவ்விதழ் ஓரத்தில் தேனெடுப்போம்
ஆஆ...ஆஆ...ஆஆஆ
செங்கயல் விழிகளில் அஞ்சனம் கரைந்திட
தினம் தினம் மன்மத கதை படிப்போம்
செவ்விதழ் ஓரத்தில் தேனெடுப்போம்
வசந்தமும் இங்கு வந்தது இன்று
மங்கல வாழ்க்கை மலரட்டும் என்று
தகதக தகதக தகதக தஜ்ஜம்
தகதக தகதக தகதக தஜ்ஜம்
மழைவிழும் கொடியென நதி விழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது
கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இள மனம் சிறகினை விரிக்குது
ராகமும் தாளமும் சேர்ந்தது போல்
இரு மேகமும் மேகமும் சேர்ந்ததம்மா
தேகமும் தேகமும் மயங்குதம்மா
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆஆ
ராகமும் தாளமும் சேர்ந்தது போல்
இரு மேகமும் மேகமும் சேர்ந்ததம்மா
தேகமும் தேகமும் மயங்குதம்மா
பொன்நிற மின்னலின் புது ஒளி கண்டதும்
பூமியில் மலர்ந்தது தாழை மடல்
பொங்குது பொங்குது காதல் கடல்
ஆஆ...ஆஆ...ஆஆஆ
பொன்நிற மின்னலின் புது ஒளி கண்டதும்
பூமியில் மலர்ந்தது தாழை மடல்
பொங்குது பொங்குது காதல் கடல்
வசந்தமும் இங்கு வந்தது இன்று
மங்கல வாழ்க்கை மலரட்டும் என்று
தகதக தகதக தகதக தஜ்ஜம்
தகதக தகதக தகதக தஜ்ஜம்
மழைவிழும் கொடியென நதி விழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது
கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இள மனம் சிறகினை விரிக்குது
Quote
brraverishhh
View Public Profile
Find More Posts by brraverishhh
All times are GMT +1. The time now is
09:07 AM
.