View Single Post
Old 09-23-2010, 06:51 AM   #5
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default Who is qualified to be called a "TFM critic"?
'தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்' என்ற வழக்கு போல ஆகி விட்டிருக்கிறது தமிழ்த்திரை இசை விமர்சனம்.

முறையான விமர்சனத்தளங்கள் ஒரு காலத்திலும் இல்லாதிருந்ததே முக்கியக்காரணம். மெல்ல மெல்ல இப்போது 'எனக்கு இசையே தெரியாது ஆனாலும் என்னை இசை விமரிசகன் என்று விழா எடுக்கலாம்' என்னும் வரை இது நீண்டிருக்கிறது. வந்து வந்து இப்போது "பரப்பிசை" என்றெல்லாம் இதற்குப்பெயர் சூட்டு விழாவும் தொடங்கியாயிற்று சில அறிவுஜீவிகள்

என்றாலும், tfmpage / hub இணையதளம் தொடக்க முதலே திரை இசை ஆய்வுகளுக்கு ஒரு நல்ல அடித்தளமாக ஆகியிருந்திருக்கிறது. இசைத்தட்டு விமரிசனங்களும் / இசை விற்பன்னர்கள் பற்றிய ஆய்வுகளும் பல ஆண்டுகளாக இங்கு தனித்தரத்தில் நடப்பதும் கண்கூடு.

என்றாலும் 'இசை விமர்சகர்' என்றால் யார் என்று தெளிவான வரையறைகள் இங்கு செய்யப்பட்டிருக்கிறதா என நினைவில்லை. அதைச்செய்ய ஒரு சிறு முயற்சி தான் இந்த இழை
Raj_Copi_Jin is offline


 

All times are GMT +1. The time now is 07:02 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity