என் பார்வையில், 3) ஒரு கலைப் படைப்பின் இலக்கு மக்கள் யார் யார்? அது அந்த இலக்கு மக்களிடம் எந்த விதமாக வரவேற்பைப் பெறுகிறது? இதைக் கணக்கிலெடுத்துக்கொண்டு விமர்சிக்கத் தெரியணும். 4) தன்னோட திறனின் எல்லைக்கோடுகள் என்ன என்பதை புரிந்து செயல்படுதல் அவசியம். உதராணம் : பாப் இசையை பற்றி ஒருவர் குறைந்த மதிப்பீடு வைத்திருந்தால், அவர் வாழ்நாள் முழுவதும் அந்த இசையை விமர்சிக்கவே கூடாது. அது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம். 5) எப்படி கலைக்கு ஒரு இலக்கு மக்கள் இருக்கிறார்களோ, அப்படியே விமர்சனங்களுக்கும் அதற்கான இலக்கு மக்கள் இருக்கிறார்கள். வெகுஜன மக்களுக்கு சென்றடையும் விமர்சகன் என்றைக்கும் மேதாவித் தனத்தோடு, இசை விற்பன்னர்கள் மாதிரி புலமையோடு விமர்சிக்கக் கூடாது. அவன் வெகுஜன மக்களுக்கு எளியும் புரியும் வண்ணம் விமர்சன மொழியில் எழுத வேண்டும்.