View Single Post
Old 03-10-2010, 12:39 AM   #22
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
திடீர் கேன்சல்... திரும்பி வந்தார் பாலா

ஒரே ஷெட்யூல். நாற்பந்தைந்து நாட்களில் முக்கால்வாசி படத்தை முடிப்பேன் என்று சவால் விடாத குறையாக தென்காசி போன பாலா, போன வேகத்தில் பேக்கப் சொல்லிவிட்டு சென்னை திரும்பிவிட்டார். மொத்தம் 18 நாட்கள்தான் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அதற்குள் பாலா பேக்கப் சொன்னதற்கு காரணம் என்னவாக இருக்கும்? தலையை பிய்த்துக் கொள்கிறார்கள் யூனிட்டில்

படத்தில் நடிக்கும் முக்கிய ஆர்ட்டிஸ்டுகளுக்கு கூட காரணம் புரியவில்லையாம். ஆனால் 'அவன் இவன்' தரப்பிலிருந்து கசிகிற தகவல் இதுதான். ஆர்யா வரவில்லை. அதனால்தான் இந்த பேக்கப்! உண்மை அதுதானா, அல்லது வேறு ஏதாவதா என்பதெல்லாம் நமக்கெதற்கு? இந்த படத்தில் விஷாலின் கெட்டப் நந்தா சூர்யாவை ஞாபகப்படுத்தும்படி அமைந்திருக்கிறது.

ஒட்ட வெட்டிய முடி. கிட்டதட்ட மொட்டை தலை எபெஃக்ட்! அடர்த்தியான தாடி என்று பார்ப்பதற்கே படு பிரமாதமாக இருக்கிறார் விஷால். கண்களில் கான்டாக்ட் லென்ஸ் இல்லையே தவிர, சற்றே உயரமான சூர்யாவாகவே மாறியிருக்கிறார் விஷால். இந்த படம் முடியும் வரை கெட்டப் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும் என்பதற்காகவே எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று இவருக்கு தடை போட்டிருக்கிறாராம் பாலா.
Lt_Apple is offline


 

All times are GMT +1. The time now is 07:48 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity