பாலா படத்தை பார்க்க ஆவலா இருக்கேன். அவருதான் ஒவ்வொரு படத்தையும் ரிலீஸ் பண்ண லேட் பண்ணிகிட்டு இருக்காரு... படவுலகின் பிதாமகன் கே.பாலசந்தரே இப்படி பாராட்டிக் கொண்டிருக்கிறார் அவரை. ஆனால் பாலாவின் ஸ்பீடு வழக்கம் போல ஆமை வேகத்தில்! அவன் இவன் படத்தின் ஷ§ட்டிங் 18 நாட்கள் மட்டுமே நடந்திருக்கிறது. எடுத்தவரை படத்தை போட்டு பார்த்த பாலா, எனக்கு திருப்தியா இல்ல. அதனால் ஷ§ட்டிங்கை இன்னும் இரண்டு மாசம் கழிச்சு பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டாராம். பாலாவின் இந்த அதிரடி பதிலால் ஆடிப்போயிருக்கிறது பட வட்டாரம். அதைவிட ஆடிப்போயிருப்பது விஷால்தானாம். பெரிய பெரிய கனவுகளோடு பாலா படத்தில் நடிக்கப் போனவருக்கு இந்த திடீர் பிரேக், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சரி, பாலாவை சந்திச்சு பேசலாமே என்று முயற்சித்தாராம். ஆனால் அவரால் கூட ரீச் பண்ண முடியாத தனிமையில் இருக்கிறாராம் பாலா. புறான்னு நினைச்சு பழகுறதா? சுறான்னு நினைச்சு ஒதுங்கறதா? கஷ்டம்தான் விஷாலுக்கு!