Thread
:
~~Song of Youth~~ - Dr. Abdul Kalam - Yuvan - Arvind Krishna
View Single Post
01-11-2010, 02:54 AM
#
6
brraverishhh
Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
இளைஞர்களின் இதயத்தில்நிறைந்திருப்பவர் அப்துல்கலாம் என்றால், இளசுகளின் நரம்புகளில்ஊடுருவியிருப்பது யுவனின் இசை. கலாமின் கவிதையும் யுவனின் கீபோர்டும் கைகோர்த்தால்அதன் கலவை எப்படியிருக்கும்? நினைத்து பார்க்கவேஉற்சாகம் பொங்கும்போது அது உண்மையாகினால் கொண்டாட்டம்தானே!
இந்திய இளைஞர்களின்வேகத்தை இன்னமும் துடிப்பாக்க அதனை சாத்தியமாக்கியுள்ளார் இயக்குநர் தனபால் பத்மநாபன்.அப்துல் கலாம் எழுதிய ' song of youth' என்ற புகழ்பெற்றபாடல்தான், பிரமாண்டமான மியூசிக் ஆல்பமாகத்தயாராகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த ஆல்பத்தை தன் இன்னிசையால்மெருகேற்றியுள்ளார்ர் யுவன்ஷங்கர் ராஜா.
இந்த இளைஞர் எழுச்சிகீதம் குறித்து யுவனிடம் கேட்டபோது,’’நான் எத்தனையோசினிமா பாடல்களு’கு இசையமைத்தபோதுகிடைக்காத பேரானந்தமும், திருப்தியும் கலாமின்பாடலுக்கு இசையமைத்தபோது கிடைத்திருக்கிறது. இது எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகவும்பெருமையாகவும் கருதுகிறேன். இந்திய இளைஞர்களுக்கு புதிய எழுச்சியையும் உத்வேகத்தையும்அளிக்கும் இதுபோன்ற பாடல்களுக்கு எத்தனை தடவைவேண்டுமானாலும் இசைக்கலாம்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.
http://www.thenaali.com/thenaali.aspx?A=1571
Quote
brraverishhh
View Public Profile
Find More Posts by brraverishhh
All times are GMT +1. The time now is
12:15 AM
.