View Single Post
Old 01-12-2010, 04:21 AM   #8
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
" கலாம் யுவன் இளமை கூட்டணி ! "

அதிரடி இசைக்கு எதிர் மறையானது யுவனின் இயல்பு. அமைதியென்றால் அப்படியொரு அமைதி. நான்கு வரி கேள்வியாக இருந்தாலும், ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் மனிதர். பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில், முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் " SONG OF YOUTH" பாடலுக்கு இசையமைத்து ஆல்பமாக்கும் வேலையில் தீவிரமாகியிருக்கிறார் யுவன்.

கலாம் சந்திப்பு பற்றிக் கேட்டால் உற்சாகமாகப் பேசுகிறார். "இந்தியாவோட உயர் பீடத்தை அலங்கரிச்ச மனிதர் அவர். என்ன எளிமை ! உறவினர் மாதிரி அவ்வளவு அன்னியோன்யமா பழகினார். அப்பாவை ரொம்பவே விசாரிச்சார். ஆல்பம் வேலைகள் எப்படி போகுதுன்னு அக்கறையா கேட்டார். அவரை நினைச்சாலே மனசுக்குள் உற்சாகம் வந்திடுது. நாலைஞ்சு நாள் அவரோட நினைப்பில இருந்து விடுபட முடியல. அவரோட தேசப்பற்று, வேகம் எல்லாமே இளைஞர்களுக்கு முன்மாதிரிதான்.

சிலாகித்துப் பேசும் யுவனிடம் ஆல்பம் பற்றிக் கேட்டால் இன்னும் உற்சாகமாகிறார்.

"இந்த ஆல்பத்தை 'மின்வெளி மீடியா ஒர்க்ஸ், எஸ்.ஆர்.எம் குழுமத்தோட 'ஜெனரே ஷன் நவ் மீடியா' - இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கிறாங்க. இந்தியாவோட மொத்த மக்கள் தொகையில் 50% பேர் 25 வயதுக்குள்ள இருக்கிற இளைஞர்கள். இதுமாதிரி இளமை வளம் எந்த நாட்லயும் இல்ல. இது இளைஞர்களின் தேசம். இப்போ இந்திய இளைஞர்களோட குரல் உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்குது. 30-40 வருஷத்துக்கு நம்மை யாராலும் அசைக்க முடியாது. "

"இந்திய இளைஞர்களைக் கொண்டாடவும், அவங்களுக்கு ஊக்கமளிக்கவும்தான் இந்த ஆல்பம். அவங்க கனவோட அடையாளமாகவும் லட்சியத்தோட கலங்கரை விளக்கமாகவும் இது இருக்கும். ரஹ்மான் சாரோட 'வந்தேமாதரம்' எப்படி புதுசா இருந்ததோ, அதைப்போல அடுத்த 10 வருஷத்துக்கான பாடலா இது இருக்கும்...." என்கிறார் யுவன்.

இதன் இசையமைப்பில் சினிமாவில் செய்யாத சில புதுமைகளையும் செய்திருக்கிறார் யுவன். "ஹூரோ, சிச்சுவே ஷன்னு சினிமாவில் ஆயிரம் இருக்கு. அதைத் தாண்டி எதுவும் செய்ய முடியாது பாஸ். சுதந்திரம் கம்மி. ஆனா, இங்க நிறைய சுதந்திரம் இருக்கு. சில முன் முயற்சிகளைத் தொட்டிருக்கேன். நிச்சயம் இந்த ஆல்பம் இளைஞர்களைச் சென்றடையும்" என்கிறார் யுவன்.

" வளமான நாடாக்குவோம்...
இள உள்ளங்களை பொறியேற்றியே..."

என்று தொடங்குகிற பாடலை யுவனே பாடி, திரையிலும் கலக்குகிறார்.

"டோனி,சானியா மிர்சா, நரேன் கார்த்திகேயன் போல இந்தியாவின் இளமை அடையாளங்கள் பலரையும் பங்கேற்க வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. புகழ்பெற்ற இசைமேதைகள், எழுதாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களும் முகம்காட்டுகிறார்கள். திருமலை நாயக்கர் மஹால், தாஜ்மஹால், இந்தியா கேட் என இந்தியா முழுவதும் உள்ள பாரம்பரியமும் சரித்திர முக்கியத்துவம் கொண்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களின் கலாசார்ங்களைச் சொல்லும் கலைகள் காட்சியாகின்றன." என்கிற தனபால் இந்த ஆல்பத்தை இயக்குகிறார், ஏற்கனவே அப்துல்கலாமின் வாழ்க்கையை ' a little dream ' என்ற ஆவணப்படமாக்கியவர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி எனமூன்றூ மொழிகளில் வெளிவரவுள்ள இந்த ஆல்பத்துக்கு, யுவனின் பேவரைட் அரவிந்த் கிருஷ்ணாவே ஒளிப்பதிவு. இந்த இளமைப் பட்டாளத்தோடு ஓய்வறியாத 71 வயது இளைஞர் கலாமும் கை கோர்க்கிறார்.

பிப்ரவரி தொடக்கத்தில் இந்தியாவின் பட்டி, தொட்டியெங்கும் இருக்கும் இளைஞர்களை ஈர்க்க வருகிறது இசைக் கனவு.

கொண்டாடத் தயாராகுங்கள் இளைஞர்களே !!!

நன்றி : குங்குமம்,
NeroASERCH is offline


 

All times are GMT +1. The time now is 08:26 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity