View Single Post
Old 01-24-2007, 10:30 PM   #16
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
"வாலி"

கவிஞர் வாலியே....
வாளி வாளியாய் கவிதைகளை அள்ளித்தரும்
கவிதை வள்ளலே

நீ என்றைக்குத் தோற்றாய்... இன்றைக்கு வெல்வதற்கு
என்றைக்கு வந்தாயோ அன்று முதல் இன்று வரை
வென்றுகொண்டே இருக்கிறாய்...!!.

உன் பகழ்க்கொடி உயர உயர
பறந்துகொண்டே இருக்கிறது
எவரெஸ்டில் நின்று கொண்டு
அதை விட உயரம் எங்கே என்று தேடுகிறாய்.

'தரைமேல் பிறக்க வைத்தான்' என்று எழுத
தலை குனிந்த உன் எழுதுகோல்
இன்னும் தலை நிமிரவில்லை
அன்றைக்கு நிமிர்ந்த உன் தலை
இன்னும் குனியவில்லை... என்றும் குனியாது

அன்று கண்ணதாசனோடும் போட்டிக்களத்தில் நின்றாய்
இன்றைக்கும் நிற்கின்றாய்... சும்மா நிற்கவில்லை
வென்றுகொண்டே நிற்கின்றாய்
இன்றைய இளம் கவிஞர்களின் பேரன்களோடு
நாளைய போட்டிக்களத்திலும் நிற்பாய்.. வெல்வாய்

கவியுலக மார்க்கண்டேயா
உன் புகழை அண்ணாந்து பார்க்கிறேன்
தங்கையின் கழுத்து வலிக்கிறது.
HedgeYourBets is offline


 

All times are GMT +1. The time now is 06:17 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity