Thread
:
Celebrity Rajini's Next Legendary Trip - RAANA
View Single Post
05-25-2013, 10:09 PM
#
1
pfcwlkxav
Join Date
Nov 2005
Posts
463
Senior Member
Celebrity Rajini's Next Legendary Trip - RAANA
ராணாவுக்கும் ஹராவுக்கும் சம்பந்தமில்லை! கே எஸ் ரவிக்குமார் சிறப்புப் பேட்டி
சர்வதேசத் தரத்தில் ஒரு சரித்திரப் படம் ராணா! கே எஸ் ரவிக்குமார் பேட்டி
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இதை விட மகிழ்ச்சியான செய்தி வேறேதும் இருக்காது 'ரஜினியின் அடுத்த படமான ராணா ஒரு சரித்திரப் படம் இந்தப் படம் இதற்கு முன் வந்திராத புத்தம் புதிய ஸ்கிரிப்ட் ஹராவுக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தமில்லை'! -இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அளித்த சிறப்புப் பேட்டி இது. ராணா அறிவிப்பு வெளியான உடன், வழக்கம் போல படம் குறித்து பல்வேறு யூகங்கள், கணிப்புகள், எதிர்மறைச் செய்திகளை உலவவிட்டனர், உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்திகளை 'உருவாக்கும்' மீடியா ஆசாமிகள் சிலர். சுல்தான் படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகளை எடுத்து இணைக்கப் போகிறார்கள். அதைத்தான் ராணாவாக வெளியிடப்போகிறார்கள் என்று கூற ஆரம்பித்தனர். ஆனால், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ராணா தொழில்நுட்ப இயக்குநருமான சௌந்தர்யா ரஜினி, 'ராணா புத்தம் புதிய ஸ்கிரிப்ட். ஹராவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை' என்று சனிக்கிழமை கூறியிருந்தார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழும், 'ராணா வேறு படம். ராணாவுக்குப் பிறகு ஹரா வெளியாகக் கூடும்' என்றே நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் இந்த செய்திகளும் பேட்டிகளும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன. நம்மிடமும் பலர் இரண்டும் ஒரே படமா வெவ்வேறு படமா? என கேட்டவண்ணம் இருந்தனர். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரிடமே கேட்டுவிட முடிவு செய்தோம். இன்று ஞாயிற்றுக்கிழமை அவரைத் தொடர்பு கொண்டு ராணா தொடர்பான குழப்பங்களைத் தெரிவித்தோம். 'காலைலருந்து இதப் பத்தி விசாரிக்கிற பத்தாவது நபர் நீங்க', என்று சொன்னபடி ரஜினி பாணியில் ஒரு சிரிப்பை உதிர்த்த இயக்குநர், '
ரசிகர்கள் தெளிவா இருக்கணும் என்பதற்காக இந்தத் தகவலைச் சொல்கிறேன் ராணா புதிய படம். பக்கா ரஜினி சார் படம் இது. 3 வேடமும் 'லைவ்' ரஜினிதான். அனிமேஷன் கிடையாது
', என்றார்.
அப்படின்னா ஹராவின் இன்னொரு பகுதியை நீங்கள் இயக்குவதாக வந்த தகவல்?
அதுபற்றி நிறைய பேசியது உண்மைதான். ஆனால் இந்தக் கதை சரியா அமைஞ்சிடுச்சி. இது ஒரு பீரியட் படம் சர்வதேசத் தரத்தில் ஒரு சரித்திரப் படம்னு சொல்லலாம். ரஜினி சாருக்கு ரொம்ப கச்சிதமா அமைஞ்ச ஸ்கிரிப்ட்.
அப்ப ஹரா?
'அது வேறு படம். அதுபற்றி நான் எதுவும் சொல்ல முடியாது'!
ராணாவின் நாயகிகள் பற்றி?
'அனுஷ்கா மற்றும் தீபிகா படுகோனிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். முடிவானதும் சொல்கிறேன்.' சொல்லிவிட்டு, 'அவ்வளவுதானே வேறொன்னும் டவுட் இல்லையே'! என்றார் ரவிக்குமார் நம்மிடம். நோ டவுட் இப்ப எல்லாமே க்ளியர்!!
Quote
pfcwlkxav
View Public Profile
Find More Posts by pfcwlkxav
All times are GMT +1. The time now is
06:42 AM
.