Thread
:
சிவ தொண்டு செய்வதன் பலன்....
View Single Post
02-10-2012, 02:24 AM
#
4
Alice_Medichi34
Join Date
Oct 2005
Posts
606
Senior Member
தொடர்சி.....
ஜோதிடர் தொடர்ந்தார்....
பேரரசே... உங்கள் அன்புக்கு என்றும் நான் அடிமை. உங்கள் ஜாதகத்தை பார்த்த உடனேயே உங்கள் ஆயுள் ஒரு வாரத்தில் முடிய போகிறது என்று எனக்கு தெரியும்.
அதை தாங்களிடம் எவ்வாறு சோல்வது என்று தயங்கியதால் தான் தாங்களை ஒரு வாரம் கழித்து வரசொன்னேன்.
தங்களை உயிரோடு பார்த்த உடனேயே, எனக்கே எனக்கு எனது ஜோதிடத்தில் இருந்த நம்பிக்கை போய்விட்டது. தாங்கள் எவ்வாறு உயிரோடு வந்தீர்கள்..... என்ன நடந்தது? என்று வினவினார்...
நந்திவர்மன் சிவாலயத்தில் நடந்தவைகளை விவரித்தான்.
கனவில் சிவாலயம் கட்டியதற்க்கே சாவிலிருந்து விடுதலை அளித்தார் சிவபிரான்.அப்படியேன்றால் வெகு விறைவில் உங்களுக்கு இழந்த அறியணை கிடைக்கும். கிடைத்தபின் தங்கள் கனவுப்படியே அந்த சிவாலய திருப்பணியை தாங்கள் தொடர்வீர்களாக... என்று ஆசி வழங்கினார் ஜோதிடர்.
அதேபோன்று மன்னனுக்கு அறியணை காத்துக்கொண்டிருந்தது...மீண்டும் பேரரசனானான். தனது கனவுப்படியே அந்த சிவாலயத்தை சீரோடும் சிறப்போடும் கட்டி முடித்தான்....
இந்த கதையை, நான் இந்த இணையதளத்தில், இந்த தருணத்தில் குறிப்பிடுவதன் நோக்கம் என்னவேன்றால்
பெங்களுர் ,ஒயிட்ஃபீல்ட்,ரயில்நிலையம் அருகில்,காடுகுடி என்ற சிற்றூர் உள்ளது.
அங்கு அருள் மிகு காசி விஸ்வேஷ்வர சுவாமி சமேத விசாலாஷி அம்மன் ஆலயம் திருப்பணி நடைபெற்று வருகிறது.
அந்த ஆலயம் குலொதுங்க சோழன் பேரரசனால் கட்டப்பட்டது. அருகாமையில் இருக்கும் ஒரு மிகப் பெரிய ஆலமர வேரால் மிகப்பெரிய விரிசல் அடைந்து 80% கட்டுமானம் பலமிழந்து காணப்பட்டது.
பல உள்ளுர் முக்கியஸ்த்தர்கள் முயற்சித்தும்கூட அதன் புனரமைப்பு பனிகளை மேற்கொள்ள முடியவில்லை.
இறுதியாக,எனது நண்பர் திரு டி.விஜயகுமார் ரெட்டி ( தலைவர்,பெங்களுர் மாநகர விஸ்வ ஹிந்து பரிஷத் ) அவர்கள் பெரு முயர்ச்சியால் அரசிடம் போராடி அனுமதி பெற்று கடந்த 8 மாதங்களாக சீரோடும்,சிறப்போடும் நடைபெற்று வருகிறது. அதன் படங்களை எனது ப்ரோபைலில் இணைதுள்ளேன்.
தற்போது சற்று நிதி பற்றாக்குறையில் உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் திரு ரெட்டி அவர்களை அவரது மொபைலில் தொடர்புகொண்டு ( 098867-40977 ) தங்களால் இயன்ற பொருள் உதவி அளித்து ரசீது பெற்றுக் கொள்ளவும்.
மறக்காமல் எனது பெயரையும், தமிழ் பிறாமின்ஸ் இணையதளத்தின் அடையாளத்தையும் குறிப்பிடவும்...
ஓம் நம சிவாய.... தென்னாடுடய சிவனே போற்றி..... என் நாட்டவற்கும் இறைவா போற்றி.....
Quote
Alice_Medichi34
View Public Profile
Find More Posts by Alice_Medichi34
All times are GMT +1. The time now is
12:58 AM
.