View Single Post
Old 01-05-2012, 04:00 PM   #2
nabsgood

Join Date
Oct 2005
Posts
385
Senior Member
Default
அது போலவே குளித்தலை அருகே ," அய்யர் மலை" என்ற ஊர் உள்ளது. இந்த ஊர் குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ளது.

இந்த மலை மீது குலோத்துங்க சோழன் கட்டியதாக கூறப்படும் இரத்தினபுரீஸ்வரர் ஆலயம் மலை மீது உள்ளது.அந்த மலைக்கு பெயரே ரத்தின மலை.

சுமார் 1200 படிகளை ஏறித்தான் மலை மீது உள்ள இறைவனை தரிசிக்க முடியும்.

நால்வரில் ஒருவர் (அப்பர்,சுந்தரர்,திருநாவுக்குஅரசர்,மானிக்கவாசக ர் இவர்களில் ஒருவர்...., எனக்கு பெயர் நினைவில்லை) ஒருநாள் மலை மீதுள்ள இறைவனை தரிசிக்க அய்யர் மலை வந்தாராம்.

நடந்து வந்த களைப்பும்,கை கால் வலியும் மலையை பார்த்து மலைப்பும் சேர்ந்து கொள்ளவே அடியார் அவர்களால் மலை ஏற முடியவில்லை.

கீழே இருந்துகொண்டு இறைவனை பாடினாராம்.இறைவன் அவரை மலை ஏறி வர சொன்னாராம்.

தன்னால் களைப்பின் காரணமாக வர முடியவில்லை என்று அடியார் கூறினாராம்.

உடனே மலை மீது குடி கொண்ட இறைவன் கீழிறங்கி வந்து அடியார்க்கு தரிசனம் கொடுத்தானாம்.

இந்த இறைவனை ஒரு முறை தரிசிப்பவர்க்கு " ஒருவன் ஆயுள் முழுவதும் த்ரிசிக்கும் சிவாலயங்க்ளுக்கு கிடைக்கும் பலன் ஒரு முறை இந்த இறைவனை தரிசித்தால் கிடைக்கும்.
nabsgood is offline


 

All times are GMT +1. The time now is 07:26 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity