Thread
:
Destiny
View Single Post
08-24-2009, 05:01 PM
#
4
constanyiskancho
Join Date
Oct 2005
Posts
402
Senior Member
"
கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற்
கன்மங் கடவுளோ வுந்தீபற
கன்மஞ் சடமதா லுந்தீபற
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
வீடுதரலிலை யுந்தீபற
கருத்தனுக் காக்குநிட் காமிய கன்மங்
கருத்தைத் திருத்தி யக்து வுந்தீபற
கதிவழி காண்பிக்கு முந்தீபற
"
........................................உபதேச
உந்தியார்
ஜீவர்களால் செயப்படும் கர்மங்கள் அதனுடைய பலனைத்
திருப்பித்தரக் கூடியதானது கடவுளின் ஆணைப்படியே நிகழும் . செய்கின்ற கர்மமே பலனைத் தருகின்ற கடவுளாக இருக்கமுடியுமோ ? ஏன் எனில் கர்மமானனது தானே இயங்கக்கூடிய சக்திவுடயது அல்ல . அது ஜடமானது .
கர்மங்களை தன்னிச்சைப்படி செய்யும் சுதந்திரத்தை ஜீவர்களுக்கு கொடுத்த இறைவன் , ஜீவர்களின் இச்சைப்படி கர்ம பலனைப் பெறுவதற்குத் தடைவிதித்தான் . அவன் செய்த
கருமத்திற்கான பலன் தருவதை இறைவன் விதித்த ஆணைப்படி நடக்கும்படி அதாவது தனது ஆணைக்குள் இருக்கும்படிக்கு செய்தான் . இல்லையேல் நிலைமை மோசமாகிவிடும் . இது இறைவனின் எலையில்லா கருணை ஆகும் .
ஜீவன் செய்கின்ற எந்த ஒரு செயலும் பலன் தராது போகாது . அவன் செய்த கருமத்திற்கு ஏற்றவாறு பலன் கொடுக்கும் . இது இறைவனின் நியதி . ஆனால் ஒருவன் செய்யும் செயலுக்கான
பலன் செய்பவனின் இச்சைப்படி நடக்காது . இறைவன் இச்சைப்படிதான் நடக்கும்
.ஆனால் ஜீவன் தான் செய்யும் செயலுக்கு தான் விரும்பும் பலனை அடைய எண்ணுகிறான் .
இவற்றிற்கு விதிவிலக்காக நடந்தவை ... மார்கண்டேயனின் சரித்திரம் .தான் இட்ட கட்டளையை இறைவன் தானே மீறும்படி ஆனது
மார்கண்டேயனின் அதீத பக்தியால்
.
ஒரு கர்மத்தை செய்த ஜீவன் அந்த கர்ம பலனை அனுபவித்த பிறகு மீண்டும் அதில் பிரவிருத்திக்காமல்
விடுதலை அடைவதற்குரிய முக்தியை பெறமுடிவதில்லை .
காரணம் கர்மத்தின் பலன் மட்டுமே அனுபவித்ததால் அழிந்ததே அன்றி அதன் வாசனை அழியவில்லை . இந்த வாசனையானது ஜீவனை விடுதலை அடையமுடியாமல்
கர்ம பந்தத்தில் பிணைத்து பிறவிக்கடலில் ஆழ்த்துகிறது . முக்தி அடைய விடுவதில்லை .
பலனில் இச்சையின்றி ஈஸ்வரார்ப்பணமாக செய்யும் நிட்காமிய கர்மங்கள் மனத்தின் அழுக்கை நீக்கி வாசனைகள் அற்று சித்த சுத்தியை கொடுத்து மோக்ஷ வீட்டை அடைய , பிறவிகள் அற்ற வழியை உணரும்படி காண்பிக்கும் .
நான் எனது என்ற உணர்வுகள் அற்று பலன் கருதாது இறைவனுக்கு அர்ப்பணித்து எல்லாம் அவன் செயல் என்று கர்மங்கள் செய்தல் உத்தமம் .
எல்லாம் விதிப்படி நடக்கும் என்றாலும் , நம்மை இறைவனிடம் முற்றிலுமாக ஒப்படைத்து ---நான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செயல்கள் செய்யாது --
பக்தியினால் சரண் அடைவதால் விடுதலை கிடைக்கும் . இதற்கு பிறவிகளுக்கு முழு சுதந்திரம் உண்டு
.-
Quote
constanyiskancho
View Public Profile
Find More Posts by constanyiskancho
All times are GMT +1. The time now is
11:36 PM
.