கோ ' படம் கொடுத்த வரவேற்பை அடுத்து ஜீவா நடிப்பில் 'ரெளத்திரம்', 'வந்தான் வென்றான்', 'நண்பன்' என படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. இப்படங்களை அடுத்து மிஷ்கினின் இயக்கத்தில் 'முகமூடி' என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார் ஜீவா. மிஷ்கினின் கனவு படம் 'முகமூடி'. முதலில் இப்படத்தில் நடிக்க இருந்தது சூர்யா. சூர்யாவை அடுத்து ஆர்யா, விஷால் என பல பேரிடம் மாறி இப்போது ஜீவா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை ஒரு மும்பை தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'முகமூடி' படம் ஒரு சூப்பர் ஹீரோ சம்பந்தப்பட்ட கதையாகும். சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்கும் கதையாம் 'முகமூடி'. இப்படம் ஒரு ஆக்ஷன் கதை என்பதால் இப்படத்தில் சண்டைக் காட்சிகளை அமைக்க ஹாங்காங்கில் இருக்கும் ஒரு ஸ்டண்ட் இயக்குனரை ஒப்பந்தம் செய்து இருக்கிறாராம் மிஷ்கின். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும், 2012ல் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63