View Single Post
Old 10-06-2006, 08:00 AM   #4
ivandiadser

Join Date
Nov 2005
Posts
480
Senior Member
Default
டியர் வாசுதேவன் சார்,

நமது நடிகர் திலகம் திரியின் பத்தாவது பாகத்தை தங்களது அன்புக்கரங்களால் மிகமிக மங்களகரமாக ஆரம்பித்து வைத்திருக்கும் தங்களுக்கு,

எனது பாசமான பாராட்டுக்கள் ! வளமான வாழ்த்துக்கள் !! நெஞ்சார்ந்த நன்றிகள் !!!

செவ்வாயன்று [12.6.2012] இரவு தங்களுடன் கைபேசியில் உரையாடும் போது 'நமது திரியின் இந்தப் பாகம் 400 பக்கங்களை நெருங்குவதால் அடுத்த பாகம் துவங்க மாடரேட்டர்கள் முடிவு செய்யக்கூடும் என்றும், அப்படிப் புதிய பாகம் தொடங்க முடிவெடுக்கப்பட்டால், தாங்களே அடுத்த பாகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும்' தங்களுக்கு அடியேன் அன்பு வேண்டுகோள் விடுத்தது நினைவிருக்கும்..!

இதே கருத்தை இங்குள்ள நமது அன்புள்ளங்கள் அனைவரும் வலியுறுத்தி உள்ளனர் என்பதைக் காணும்போது கண்கள் ஆனந்தத்தால் பனிக்கிறது.

பத்து ஆண்டு திருத்தொண்டினை பத்து மாதங்களில் ஆற்றியிருக்கும் தங்களை விட பத்தாவது பாகத்தை துவக்கிவைக்க பொருத்தமானவர் யார்..?!

நமது திரியில் ஒவ்வொருவரும் நல்ல பங்களிப்புகளை நல்கி, வாசிக்கின்றனர். ஆனால் தாங்களோ சிறந்த பங்களிப்புகளை நல்கி வாசிப்பதோடு மட்டுமல்லாமல், திரியை சுவாசிப்பவரும் ஆயிற்றே..!

ஆரம்பப் பதிவுகளையே மிகமிக அட்டகாசமாக வழங்கியுள்ளீர்கள்..!

"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என எடுத்தியம்பும் 'அன்னை இல்ல'ப் புகைப்படம்,

"காலத்தை வென்ற கலை தெய்வம்" என்ற தலைப்பில் 'வாசுகி' இதழில் வெளிவந்த அருமையான கட்டுரை,

எனத் தங்கள் பதிவுகள் மூலம் எங்களுக்கு ஒரே திருவிழா கொண்டாட்டம்தான்..!

பொலிவோடு தொடரட்டும் தங்களின் திருப்பணியாகிய திரிப்பணி..!

தங்களுக்கு மீண்டும் எனது கோடானுகோடி நல்வாழ்த்துக்கள்..!


பாசத்துடன்,
பம்மலார்.
ivandiadser is offline


 

All times are GMT +1. The time now is 04:30 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity