Thread
:
Nadigar Thilagam Sivaji Ganesan Part 10
View Single Post
06-15-2012, 02:50 PM
#
31
Cwvnyfsj
Join Date
Oct 2005
Posts
477
Senior Member
அன்பு பம்மலார் சார்,
அசத்தல் என்றால் இதுதான் அசத்தல். தாய் கூடகுழந்தை அழுதால்தான் உணவளிப்பாள். ஆனால் எங்கள் பம்மலாரோ நாங்கள் கேட்காமலேயே தலைவாழை விருந்தளிப்பவர். விரும்பிக் கேட்டு விட்டால்.... ராகுல்ராம் அவர்கள் ஜீவபூமியை கேட்டவுடன் பத்திரம் எழுதி எல்லோருக்கும் ஜீவபூமியை பதிவு செய்து சொந்தமாக்கி தந்து விட்டீர்கள். தலைவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வீரனாக நிற்கும் அந்த அற்புத விளம்பரத்தை பதிவு செய்து தூக்கத்தைக் கெடுத்து விட்டீர்கள். பதிவும் படு நேர்த்தி. என்ன ஒரு குறை! கைக்கு எட்டிய உணவு வாய்க்கு எட்டவில்லையே!
'கலைத்தோட்டம்' இதழின் கௌரவ ஆசிரியர், பிரபல கதாசிரியர், வசனகர்த்தா திரு.ஏ.எல்.நாராயணன் அவர்களின் கருத்துரை நிஜமாகவே அனலைக் கக்குகிறது. கலைத்தெய்வத்தை ஒரு காலத்தில் இகழ்ந்த கூட்டம் பிற்காலத்தில் காலத்தின் கட்டாயத்தால் அவரை புகழத் தொடங்கியது என்று திரு ஏ.எல், நாராயணன் கூறியிருப்பது முற்றிலும் உண்மை! தன் மீது கொண்ட பகைமையை, வெறியை தன்னை வைத்தே சிலர் தீர்த்துக் கொள்ள நினைத்தால், தன் அபார நடிப்பின் மூலம் எதிரிகளின் சூதுவாதுகளைத் தவிடு பொடியாக்கி உண்மையான திறமையால் உயர்ந்த உன்னத புருஷரல்லவோ நடிகர் திலகம். சுவையான சூடு பறக்கும் கட்டுரையை வழங்கிய தங்களுக்கு என் குளிர்ச்சியான நன்றிகள்.
'தீர்ப்பு' விளம்பரங்கள் உயிர்ப்பு.
"கட்டபொம்மன்" காவியம் குறித்து 'வெள்ளையத் தேவன்' ஜெமினி கணேசன் கூறியுள்ள கருத்துக்கள் படத்தின் மீது இருந்த அவருடைய முழு ஈடுபாட்டைக் காட்டுகிறது.
அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்கள் மற்றொரு திரையுலக ஜாம்பவானான பந்துலு அவர்களின் திரைக்காவியத்திற்கு கருத்துரை வழகியிருப்பது பெருமைப் படவேண்டிய விஷயம். கட்டபொம்மனைப் பற்றி நாடும், ஏடும் பாராட்டுவதை அவர் குறிப்பிட்டுள்ளதை படிக்கையில் மெய் சிலிர்க்கிறது.
மலையாள சூப்பர் ஸ்டார் நசீர் நரம்பெல்லாம் துடிக்க நம் கட்டபொம்மனின் நடிப்பை ரசித்ததாக எழுதியிருப்பது அருமை. ஒரு மாபெரும் நடிகரின் நரம்பே நடிகர் திலகத்தின் நடிப்பைக் கண்டு துடிக்கிறது என்றல் நமக்கெல்லாம்... கூறவும் வேண்டுமோ!
எவ்வளவு அரிய தகவல்கள்! அற்புதக் கட்டுரைகள்! இவ்வளவையும் இடம், பொருள், ஏவல் என்பதற்கேற்ப மிகச் சரியான பதிவுகளை மிகச் சரியான தருணத்தில் தந்து எங்கள் எல்லோர் அகங்களையும் குளிர்விக்கும் பதிவுச் சாரலாகிய தங்களுக்கு என் யுகம் கடந்த நன்றிகள்.
Quote
Cwvnyfsj
View Public Profile
Find More Posts by Cwvnyfsj
All times are GMT +1. The time now is
04:15 PM
.