View Single Post
Old 05-05-2012, 08:24 AM   #34
BundEnhamma

Join Date
Oct 2005
Posts
448
Senior Member
Default
1) 'கான் சாகிப்' தூக்கிலிடப்பட்டது அக்டோபர் 16, 1764-இல், சரியாக கட்டபொம்மன் தூக்கிலிடப்படுவதற்கு 35 ஆண்டுகட்கு முன்பு

2) நெற்கெட்டும்செவல் பூலித்தேவனுக்கும் - மருதநாயகம் / கான் சாகிப்புக்கும் இடையிலான உறவு/பகை பற்றிய குறிப்புகள் அதிகமில்லாவிட்டாலும், மருதநாயகத்தில் - கமல் வைத்திருக்கும் முக்கியமான காட்சி - பிரிட்டீஷ்காரர்களின் தளபதியாக இருந்த கான் சாகிப்பை 'விடுதலை' குறித்து சிந்திக்கத் தூண்டியது - பூலித்தேவன்/ஒண்டிவீரன் இருவரில் ஒருவர்.

3) கான் சாகிப்பை ஒரு சமயம் அடித்து வீழ்த்தி அவர் நெஞ்சில் தன் கால் வைத்து - அவருக்கு ஆங்கிலேயரின் அடிமைகளாக இருப்பதன் மூடத்தனத்தை பூலித்தவன் (அல்லது ஒண்டி வீரன்) உணர்த்தியதாக ஒரு மறைமுகக் குறிப்பைப் படித்த நினைவு. But these are disputed references.
இது போல் கான் சாகிப்பின் மார்பில் கால் வைத்துத் தள்ளி அவருக்கு அறிவுரை சொல்லும் வேடத்தில் நடிக்க கமல் அழைத்தது - வைரமுத்துவை; கமல் நெஞ்சில் கால் வைத்து நடிப்பதா? முடியாது - என்று தான் மறுத்து விட்டதாக வைரமுத்துவின் பேட்டி ஒன்று உண்டு.

4) மிக மிக மோசமான வர்ணக் கொடூரங்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் - தென் தமிழகத்தில் வாழ்ந்த மருதநாயகம், முகமது யூசுஃப் கான் -ஆக மாறியது புரிந்து கொள்ளக் கூடிய சம்பவம். 'அவாள்'களுக்கு எத்தனை அடி தூரத்தில் சூத்திரன் நிற்க வேண்டும், எந்தச் சாதிக்காரனைப் புகழ எத்தனை அடி - பா வகை என்ன - என்று இலக்கியத்திலும் தீண்டாமை அருளிய கொடூரக் காலமது.

திருவிதாங்கூர், மலபார் கும்பல்கள் - பார்த்தாலே தீட்டு என்று அரிய கண்டுபிடிப்புக்களை எல்லாம் வழங்கிக் கொண்டிருந்த காலகட்டம். கமல் மருத நாயகத்தை எடுத்து விட்டால் - வர்ணத்தால் வரலாற்று சவுகர்யங்களை அடைந்துவிட்டு - உருத்திராட்சப் பூனைகளாய் வலம்வர நினைக்கும் அன்பர்களுக்கு கசப்பு மிட்டாயாகத்தான் இருக்கும். "caste made some men untouchable; karma made it acceptable...."
BundEnhamma is offline


 

All times are GMT +1. The time now is 10:39 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity