Thread
:
S.J surya’s Isai
View Single Post
05-25-2012, 09:42 PM
#
9
Hoijdxvh
Join Date
Oct 2005
Posts
438
Senior Member
25isai.jpg
ஸ்டார்ட் ம்யூசிக்!
ஒரு இயக்குனராக அஜீத் மற்றும் விஜய் இருவருக்குமே வரவேற்பைப் பெற்ற படங்களைத் தந்தவர் எஸ்.ஜே.சூர்யா. 2005ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த 'அன்பே ஆருயிரே' படத்தினை அடுத்து தமிழில் வேறு படங்கள் எதுவும் இவர் இயக்கவில்லை.
நடிப்பில் பிஸியாகிவிட்ட எஸ்.ஜே. சூர்யா, அதன் பின்னர் இயக்கத்தில் கவனம் செலுத்தவில்லை.
தெலுங்கில் 2010ம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் 'புலி' என்னும் படத்தினை இயக்கினார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே வெளிவந்த 'புலி' பாக்ஸ் ஆபிஸில் படுத்துக் கொண்டது.
7 ஆண்டுகள் கழித்து தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக மீண்டும் திரும்பி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நாயகனாகவும் இவரே நடிக்க இருக்கிறார். புதுமுக நாயகி சாவித்திரி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
படத்தின் தலைப்பு 'இசை'.
நடிப்பு, இயக்கம் என்பதையும் தாண்டி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் எஸ்.ஜே.சூர்யா.
'இசை' ஒரு இசை த்ரில்லர் படமாம். இம்மாத இறுதி முதல் இதற்கான படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. -
http://cinema.vikatan.com
Quote
Hoijdxvh
View Public Profile
Find More Posts by Hoijdxvh
All times are GMT +1. The time now is
04:33 PM
.