LOGO
Reply to Thread New Thread
Old 06-05-2012, 03:29 AM   #21
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
Let us be not harsh on the purohits. When they are shown more respect and the other side too follow the rituals with shradda, purohits will also rise to the occasion. Most of the professionals in any field have only a working knowledge in their area of work.

Let us respect them more and offer a fair sambhavanai.
HedgeYourBets is offline


Old 06-05-2012, 04:25 AM   #22
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
மந்கிரங்கள சொல்லும்போது பொருளை விளக்கிச் சொல்லியிருந்தால், எப்பொழுதும் இல்லாவிட்டாலும், எப்பொழுதாவது மணமக்களுக்கு இந்த ஞானோதயம் வரும். தன்னைச் சோதனை செய்து கொள்ள வாய்ப்பு உண்டு. மந்திரங்கள் புனிதமானவை, அவற்றிற்கு அர்த்தம் பார்க்கக்கூடாது என்று சொல்லி, கடமைக்கு மம்போ-ஜம்போ என்று உளறிவிட்டுப் போகிறார் புரோகிதர்.

அவர் சரியாகச் சொல்கிறாரா என்பது கூட நமக்குத் தெரியாது. நான் பார்த்த ஒரு அப்பிராமணக் கல்யாணத்தில் புரோகிதர் ஒரு ஐந்து மந்திரங்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவை நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்த மந்திரங்கள். அவை என்ன வென்றால்
1த்ரயம்பகம் யஜாமஹே
2ஸர்வ மங்கள மாங்கல்யே
3 தாம் ம ஆவஹ ஜாதவேதோ
4 கணானாம் த்வா
5 ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம்
இவற்றை வைத்துக் கொண்டே முக்கால் மணிநேரத்தை ஓட்டினார். ஐயரு நெறைய மந்திரம் சொல்லி நல்லா செஞ்சு வெச்சாரு என்று சொல்லி பேசியதை விட அதிகமாகத் தட்சிணை கொடுத்தார் என் நண்பர், பெண்ணின் தகப்பனார். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.
நம் நிலையும் அதுவே தான்.

ஸாஸ்திரிகள் வைத்துச் செய்தால் தான் கல்யாணம் அங்கீகாரம் பெறும் இல்லாவிட்டால் ஜாதிப்ரஷடம் ஆகிவிடுவோம் என்று நினைத்துக் கொண்டு பெற்றோர் அவர் ஏதாவது சொல்லி விட்டுப் போகட்டும். தாலி மட்டும் கட்டிவிட்டால் போதும் என்று நினைக்கின்றனர்.

ஏன் இந்த மனுஷன் புகையில் நம்மைத் திக்குமுக்காட வைத்து ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் எப்பொழுது நம்மை விடுதலை செய்வார், எப்பொழுது நாம் தனிமையில் சந்தித்துப் பேச முடியும் என்பதே எண்ணமாக இருக்கின்றனர் மணமக்கள்.

எவருக்கும் நம்பிக்கை இல்லை. சமூக அங்கீகாரம் இல்லாமல் போகுமோ என்ற பயம் தான் நம் சடங்குகளின் அஸ்திவாரம்.

போலித்தனத்தை விட்டெறிந்து மந்திரங்களைத் தமிழில் சொல்வது என்று வைத்துக் கொள்வோம். ஸாஸ்திரிகள் தேவை இல்லை. நம்மில் வயதான, விவரம் தெரிந்த ஒருவரைத் தலைமை தாங்கி நடத்தித் தரச் சொல்வோம். ஸாஸ்திரிகளின் மிதமிஞ்சிய தட்சிணைக்குக் கடிவாளம் போடப்படும்.

ஒரு உறுத்தல் என்னவென்றால், வரும்படி மிகுதியாக வருவதால் தான் பலர் வேத அத்தியயனத்துக்கு வருகின்றனர். வேதம் உயிர் பிழைத்து இருக்கிறது. வரும்படி இல்லை என்றால் எவரும் வேதம் கற்க மாடாடர்கள். வேதம் கற்பார் இன்றி அழியும். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வாய் மொழியாகக் காப்பாற்றப்பட்டு வந்த வேதம் புத்தகத்துள் முடங்கிவிடும்.
""எவருக்கும் நம்பிக்கை இல்லை. சமூக அங்கீகாரம் இல்லாமல் போகுமோ என்ற பயம் தான் நம் சடங்குகளின் அஸ்திவாரம்""...


ஒரு உண்மையான, யதார்த்தமான ஒப்புதல்...


ஒப்புக்கொள்வோமா நாம்....??


ஒருவரை ஒருவர் சாடுவது...


ஒருவரின் குறை காண்பது....


ஒன்றுபட்ட இனமாய் வாழ்வது எப்போது....?

Tvk
tgs is offline


Old 06-05-2012, 05:36 AM   #23
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default
நேற்று ஒரு உபநயனத்துக்குப் போனேன். மேடை மேல் உபநயனப் பையன் மாலை அணிந்து கொண்டு நான்கு புறமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அணிந்திருக்கும் செயின் போட்டோவில் விழவேண்டுமே என்ற கவலையில் அவனுடைய தாய் அடிக்கடி குனிந்து அதை எடுத்து மாலை மேல் நெளிய விட்டுக் கொண்டிருநதாள். ஸாஸ்திரிகள் புத்தகத்தைப் பார்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். வீடியோக்காரர் அவருக்கு வெளிச்சம் காட்டிக் கொண்டிருந்தார். வேத மந்திரங்கள் மகா புனிதமானவை, அதைக் காதால் கேட்டாலே புண்ணியம். அதை வாயால் வேறு சொல்வானேன் என்ற எண்ணத்தில் பையனின் தகப்பனார் மந்திரத்தைச் சொல்லாமல் வாசல் பக்கம் பார்ப்பதும் வருவோர்களைக் கை கூப்பி வரவேற்பதுமாக இருந்தார். அவரது ஓவர்சைஸ் தொப்பையும் பஞ்சகச்சமும் பொருந்தாத் திருமணம் புரிந்த தம்பதிகள் போல போராடிக் கொண்டிருந்தன. வேட்டி விவாக ரத்து செய்துவிடப் போகிறதே என்ற பயத்தில் அவர் அடிக்கடி அதைக் கையால் பிடித்தபடி இருந்தார். வடுவிற்கு பசிக்கப் போகிறதே என்ற கரிசனத்தோடு அத்தைகளும் சித்திகளும் அவனுக்கு அடிக்கடி பால், ஜூஸ் முதலானவற்றைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

என் அருகில் பேண்ட் டீ ஷர்ட் அணிந்த மீசை வைத்த மூத்த குடிமகன் ஒருவர் இருந்தார். (அமெரிக்க) நாடாறு மாதம், (இந்தியக்) காடாறு மாதம் வாழ்பவர் என்று அவர் நெற்றியில் ஒட்டியிருந்தது. அவர் முன் வரிசையில் பிட்ஸ் பிலானி என்று அச்சிட்ட டீ ஷர்ட் அணிந்திருந்த ஒரு பையனிடம் ஸாஸ்திரிகள் சொல்லிக் கொண்டிருந்த மந்திரங்களுக்கு அவ்வப்போது ரன்னிங் காமெண்ட்டரி கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு தடவை என் பக்கம் திரும்பி இதை எல்லாம் நாம தான் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லணும். ஒண்ணுமே தெரியாமல் வளர்றதுகள் என்று சொன்னார்.
ஆசீர்வதிக்க வந்த மக்கள் பல குழுக்களாகப் பிரிந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு குழுவின் பேச்சு பலமாக ஒலித்ததால் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் காதில் விழுந்தது.

* * * * * * * *
ஏன் மாமி, இந்தப் புடவை பிரசாந்தியா? அதில் தான் நிறைய வெரைட்டி வருகிறது. நன்றாக இருக்கிறது.

* * * * * * * *
எதுக்கு மாமா கல் மேலே நிக்கறான்?
கல்லைப் போல உறுதியா இருக்கணும்னு உபதேசம் பண்றார் குரு, அதாவது அவன் அப்பா. குழந்தாய், இந்தக் கல் மீது நில். அதைப் போல் அசையாமல் இருந்து உன் எதிரிகளை வெற்றி கொள் அப்படின்னு அர்த்தம் இப்போ சொல்ற மந்திரத்துக்கு.

* * * * * * * *
சென்னை சூபர் கிங்க்ஸ் இந்தத் தடவை ஜெயிக்காதுன்னு முன்னாடியே தெரிஞ்சு போச்சு.

* * * * * * * *
எதுக்கு மாமா கயறு கட்டறா? கயறு இல்லேடா. அதுக்குப் பேரு மௌஞ்ஜி. முஞ்ஜிங்கிற புல்லினால் செய்யணும். இப்போ தர்ப்பையாலே முறுக்கிப் பண்றா. இந்த மௌஞ்ஜி வீட்டைத் தூய்மைப்படுத்துகிறது. பிராண அபானங்களுக்கு பலம் தருகிறது. ஸத்யத்தைக் காப்பது. பகைவரைக் கொல்வது. இதனால் நாம் நலம் பெறுவோம்னு அந்த மந்திரத்துக்கு அர்த்தம்.

* * * * * * * *
வாண்டுகள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன. சுரிதார்கள் ஒரு ஓரமாக நின்று கிளுகிளுத்தன. ஒரு எட்டு வயதுப் பட்டுப் பாவாடை மாம்பழ ஜூஸ் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தது. குடித்துவிட்டு எல்லோரும் பிளாஸ்டிக் கப்புகளை நாற்காலியின் கீழ் போட்டுவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தனர்.

* * * * * * * *
தக்ஷிணை எவ்வளவு?
இருபதாயிரம்.
அடேயப்பா. இருந்தாலும் இந்த வைதீகாளுக்கு இவ்வளவு பேராசை ஆகாது.
இதெல்லாம் டிமாண்ட் அண்ட சப்ளையை பொறுத்த விஷயம் ஸ்வாமி. நல்ல வைதீகா கிடைக்கிறதில்லே. அதனாலே தான் இந்த டிமாண்ட்.
இருந்தாலும் வேதத்தை அத்தியயனம் செய்துவிட்டு தர்மத்துக்கு வழி காட்ட வேண்டியவா இப்படி அக்கிரமம் பண்ணினா ஜனங்களுக்கு வைதீக சிரத்தையே போயிடும் ஸ்வாமி.

* * * * * * * *
குருவே, நான் வேதம் பயிலத் தகுதி அடைந்து விட்டேன். என்னை அருகே அழைத்துக் கொள்ளும்னு பையன் சொல்றதாக அர்த்தம்

* * * * * * * *
காலம்பர டிபன் நன்னா இருந்தது. யார் கேட்டரிங்
அடுத்த தெருவிலே தான் இருக்கார். அவா கிட்ட எப்பவுமே சாப்பாடு ஐட்டம் டேஸ்ட்டாகத் தான் இருக்கும். ரேட்டும் மாடரேட்டா இருக்கும்.
ஜனவரிலே பொண்ணு கல்யாணம் வெச்சிருக்கேன். இவாளையே சொல்லிடலாம்னு பார்க்கறேன். மத்தியான்னம் லஞ்ச்சையும் சாப்பிட்டுப் பார்த்துட்டுத் தான் சொல்லணும்.

* * * * * * * *
வேதம் காயத்திரி, பரப்ரும்ம்ம் இவ்றில் எதை நாடுகிறாய் அப்படின்னு குரு கேட்கிறார். பரப்ரும்மமே எனது லட்சியம், மற்றவை சாதனம்னு பையன் சொல்றான். இவா ரெண்டு பேருமே வாயைத் திறக்கல்லே. ஸாஸ்திரிகள் தான் கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லிண்டிருக்கார்.

* * * * * * * *
மேடையில் ஒரு ஸாஸ்திரிகள் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்கோண்ணா. வேன்காரனே கீத்து, கழி, சட்டி, நெய் ஜாடா சாமானும் கொண்டு வந்துடுவான். நான் இன்னும் அரை மணிலே வரேன்.

* * * * * * * *
இந்த்த் தடவை புதுக்கோட்டைலே ஏடிஎம்கே தான்.
சொல்லமுடியாது. ஆன்டி- இன்கம்பன்சி பாக்டர் தான் கடுமையா இருக்குன்னு ஒரு பேப்பர்லே எழுதியிருக்கான்.

* * * * * * * *
எதுக்கு மாமா மரக்கிளையைக் கையிலே வெச்சிண்டிருக்கான்?
பொரச மரம்னு ஒரு மரம். அதோட கிளை இது. பலாச தண்டம்னு ஸம்ஸ்கிருதத்திலே சொல்லுவா. பலாச தண்டமே, நீ எப்படி தேவர்களது நிதியைக் காக்கிறாயோ அப்படியே நான் பிராமண நிதியான வேதத்தைக் காக்கணும்னு பையன் சொல்லணும்.

* * * * * * * *
நாளைக்கு நீர் ப்ரீயா?
நான் நாளைக்கு துரோந்தோவிலே டெல்லி போறேன். உபாத்தியாயக்காரா ஆத்திலே கல்யாணம். வர நாலு நாளாகும்
லகாரத்தோட திரும்பி வருவீர்?
அப்படிப்பட்ட எடம் இல்லே. கொடுத்ததை வாங்கிக்க வேண்டியது தான்.
நாலு நாளைக்கு ஊரை விட்டுப் போறதுன்னா தக்ஷிணை கணிசமா இல்லாட்டா நீர் போமாட்டீரே. சிஷ்யனை அனுப்பிப் பண்ணி வைக்கச் சொல்லிடுவீரே. எனக்குத் தெரியாதா?

* * * * * * * *
பாடம்னு சொல்லு, பாடம்னு சொல்லுங்கிறாரே ஸாஸ்திரிகள். எதுக்கு மாமா?
குரு சொல்றதுக்கெல்லாம் சரி சரின்னு பையன் சொல்லணும்.
.நீ பிரம்மசரிய ஆசிரமத்தை அடைஞ்சுட்டாய்.
நான் சொன்ன பிறகே உணவு சாப்பிடணும். ஆனா தண்ணீர் மட்டும கேட்காமல் பருகலாம்
.பணிவிடைகளைச் செய்
பகலில் தூங்காதே
பிட்சை எடு.
ஆசிரியருக்கு அடங்கி இரு
இப்படி ஒவ்வொண்ணா குரு சொல்லச் சொல்ல பையன் சரி சரின்னு சொல்றதாக அர்த்தம்.

* * * * * * * *
இது தான் கடைசி மந்திரம். பையனுக்கு சந்தியாவநதனம் செய்யறதிலே சிரத்தை உண்டாகணுங்கிறதுக்காக சொல்றது. சௌபாக்யம் உண்டாக்கும் சிரத்தா தேவியே, உலகில் இன்பம் தேடும் அனைவருக்கும் இன்பம் தருக. உன்னை நான் மூன்று வேளைகளிலும் அழைக்கிறேன். எனக்கு சிரத்தை உண்டாகும்படி செய். இந்த மந்திரத்தையாவது பையனை ஒழுங்கா சொல்ல வெச்சு அர்த்தம் சொல்லி இருக்கலாம். ஸாஸ்திரிகளுக்கே அர்த்தம் தெரியுமோ தெரியாதோ!

* * * * * * * *

ஒரு பிளாஸ்டிக் வாளி நிறைய அரிசி வைக்கப்பட்டிருந்தது. பையன் வெள்ளித் தட்டைக் கையில் ஏந்தியபடி, அம்மணி, பிச்சை போடுங்கள் என்று பரிதாபமாக வேண்டிக் கொண்டிருந்தான். வித்யார்த்திகளுக்கு உதவ வேண்டும் என்ற பாரம்பரியம் தவறாத பட்டுப் புடவை மாமிகள் க்யூ வரிசையில் நின்று அந்த ஏழை மாணவனின் பசி தீர்ப்பதற்காக வெள்ளிக் கிண்ணத்தால் அரிசி மொண்டு மிகுந்த பரிவுடனும் சிரத்தையுடனும் தட்டில் போட்டனர். கூடவே ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நாணயங்களையும் போட்டனர். அரிசியையும் காசையும் அவன் வேறு ஒரு வாளியில் கொட்டிக் கொண்டிருந்தான்.

அவன் எல்லா அரிசியையும் காசையும் தின்று அஜீரணத்துக்கு உள்ளாகிவிடப் போகிறானே என்ற கவலையால் ஸாஸ்திரிகள் எல்லாவற்றையும் ஒரு மூட்டையாகக் கட்டி வைத்தார்.

தன் சிஷ்யனைக் கூப்பிட்டு டேய் இதை எடுத்துக்கோடா என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்த தேங்காய்களைத் தன் பையில் போடத் தொடங்கினார். அவர் கிளம்புவதைக் கண்ட பையனின் தகப்பனார், ஸாஸ்திரிகளே, மாத்தியான்னிகம் பண்ணி வைக்கணுமே என்று பவ்யமாகக் கேட்டார்.

எனக்கு நேரமாகி விட்டது. இன்னிக்கு ஏகப்பட்ட வேலை. உமக்காக வந்தேன். நீங்களே மாத்தியான்னிகம் பண்ணி வெச்சுருங்கோ. நான் வரேன்.

பையனின் தகப்பனார் எழுந்து பஞ்சகச்சம் விழாமல் பிடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்து ஒவ்வொருவரிடமும் மாத்தியான்னிகம் பண்ணி வெக்கறேளா என்று வேண்டிக் கொண்டிருந்தார். ஒருவரும் சம்மதிக்கவில்லை. என் பக்கத்தில் இருந்த அரை அமெரிக்கரிடம் கேட்டபோது அவர் நான் பேண்ட் போட்டுக் கொண்டு வந்திருக்கிறேன். மந்திரம் சொல்லணும்னா அதுக்குள்ள வேஷத்தோட இருக்கணும் என்று சொல்லி மறுத்து விட்டார்.

என்னிடம் வந்தார். நீங்கள் சந்தியா வந்தனம் செய்வதில்லை. உங்கள் பையனும் செய்யப் போவதில்லை. நாளை முதல் நிறுத்துவதை இன்றைக்கே நிறுத்தி விடலாம் என்று சொல்ல நினைத்தேன். அதைத் தான் சொல்வானேன் வாய் தான் நோவானேன் என்று நினைத்து மௌனமாகத் தலையாட்டி மறுத்தேன்.

பையனின் குடும்பத்தாரின் பிராமண அப்பிராமண உறவினர்களும் நண்பர்களும் கியூ வரிசையில் சென்று ஒவ்வொருவராகக் கவரைக் கொடுத்துப் போட்டோ பிடித்துக் கொண்டார்கள். போட்டோ செஷன் ஒரு மணி நேரம் நடந்தது.

பையனுக்கு வேத அத்தியயனம் செய்யத் தகுதி வந்து விட்டது. வரும் ஆவணி அவிட்டத்து அன்று அவன் வியாச ஹோமம் செய்து வேதத்தைக் கற்கத் தொடங்கி விடுவான் என்ற நம்பிக்கையுடனும், தன் மேல் சுமத்தப்பட்ட வேத ரக்ஷணம் என்ற மிகப் பெரிய பொறுப்பைப் பிராமண சமூகம் இன்று வரை நிறைவேற்றிவிட்டது என்ற திருப்தியுடனும் எல்லோரும் சாப்பிட்டுவிட்டுக் கலைந்தனர்.

இப்படியாக உபநயனம் சிறப்பாக நடந்தேறியது
வாஷிங்டனில் திருமணம் எழுதிய "சாவி" யின் வாசனை அடிக்கிறது!!
Ifroham4 is offline


Old 06-05-2012, 06:58 AM   #24
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
மந்திரங்கள் புனிதமானவை, அவற்றிற்கு அர்த்தம் பார்க்கக்கூடாது என்று சொல்லி, கடமைக்கு மம்போ-ஜம்போ என்று உளறிவிட்டுப் போகிறார் புரோகிதர்.

That is because of the presumption by the priest that the customers do not care for it at all and that they are going through the rituals for the sake of keeping up the tradition. Mutual distrust!

ஐயரு நெறைய மந்திரம் சொல்லி நல்லா செஞ்சு வெச்சாரு என்று சொல்லி பேசியதை விட அதிகமாகத் தட்சிணை கொடுத்தார் என் நண்பர்

Once a friend of mine was in the same situation when he was in college. His father was a temple priest and he went away on some assignment. My friend was at home at that time (during vacation). Some farmer wanted to do an abhishekham to the deity (Shiva) and came to the priest's house with rice, fruits, coconut etc. My friend told him his father was out of town. The farmer did not mind and he wanted the son to do the pUjA. My friend was in a quandry. He did not know any pUjA mantrams. However he did not want to admit his ignorance. He took all the materials with him and recited the whole Vishnu Sahasranamam (that was the only slokham he memorized as a student) in Shiva temple. The farmer was pleased that the son did the pUjA for a longer time than the father did ever.

போலித்தனத்தை விட்டெறிந்து மந்திரங்களைத் தமிழில் சொல்வது என்று வைத்துக் கொள்வோம். ஸாஸ்திரிகள் தேவை இல்லை. நம்மில் வயதான, விவரம் தெரிந்த ஒருவரைத் தலைமை தாங்கி நடத்தித் தரச் சொல்வோம்

That takes you to the route of the rationalists (paguttarivu vAdikaL) --doesn't it? At least both the parties will be sincere in their motive and efforts as well.
NeroASERCH is offline


Old 06-05-2012, 03:03 PM   #25
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
1997 இல் என் பெண் கல்யாணத்தின்போது விவாஹ மந்திரங்களின் பொருள் என்ற சிறு கையேடு ஒன்றை அச்சிட்டேன். விவாஹத்துக்கு வந்த பிராமணர்களுக்கெல்லாம் 400 பிரதிகள் நானே என் கைப்பட விநியோகித்தேன். ஸாஸ்திரிகள் உள்பட. மறுநாள் மண்டபத்தைக் காலி செய்யும் போது நாற்காலிகளின் கீழிருந்தும், ஜன்னல்கள், கதவு இடுக்குகளிலிருந்தும் கசங்கிய நிலையிலும் புத்தம் புதிதாகவும் கிடைத்த கையேடுகளின் எண்ணிக்கை 390. மீதிப் பத்துப் பேராவது படித்திருப்பார்கள் என்ற நம்பிக்கை தான் என்னை தளரவிடாமல் காப்பாற்றியது.
hi vikrama sir,
உங்கள் ஆதங்கம் புரியறது,,,ஆனால் இதற்க்கு எல்லோருக்கும் பொறுப்பு உண்டு....யஜமனருக்கும் புரோகிதருக்கும் மட்டும் நம்ம சமுதயதிர்க்கும் பொறுப்பு
உண்டு...ஆனால் யாரும் தங்கள் தவறுகளை ஒத்து கொள்வதில்லை....இன்னும் ஒரு விஷயம் ....என்னவென்றால் எல்லோரும் தெரிந்து தவறு செய்கிறோம்...
மனசாட்சி மட்டும் தான் உண்மை தெரியும்.....we are all hypocrates......வறட்டு கெளரவம்...நம்ம கூட பொறந்த குணம்.....இன்றைக்கு 90 % வெறும் சமுதாய சடங்கு தான்...இதில் வேதம் பாவம்...उदर निम्मिथं बहु कृत वेषं........
அவ்வளவு தான்.....
Beerinkol is offline


Old 06-05-2012, 03:18 PM   #26
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
வாஷிங்டனில் திருமணம் எழுதிய "சாவி" யின் வாசனை அடிக்கிறது!!
hi iyyarooran,
வாஷிங்டனில் திருமணம் நடத்தியவன் அடியேனும் கூட....
LottiFurmann is offline


Old 06-05-2012, 03:37 PM   #27
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
Ref: Post # 24.

I was taken aback for a moment when I saw so many lines in RED INK!!
Sri. Mahakavi is yet to know that ONLY the moderators can use that color!!
Beerinkol is offline


Old 06-05-2012, 03:48 PM   #28
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
10 out of 400 is not bad. If you invited 4000 people 100 of the printouts would have been taken. That is 2.5%. In general if you get 5-10% response (without any incentive) for any survey that is considered good. The survey takers project the general response from that small sample. I used to run the local branch of the American Chemical Society in South Bend, Indiana. For the meetings I organized only 5-10% of the membership would show up. Keep in mind that most of the members had Masters and Ph.D degrees. That was considered a successful meeting. The whole population's behavior can be picturised on a probability curve. The majority of the people fit into the central band comprising 80% whom we can characterize as just neutral or apathetic. 10% at one extreme are extremely mindful of issues important to them. The 10% at the other extreme would not care if the sky caved in in their front yard. It is a rough modification of Pareto's rule (Pareto invented the 80:20 ratio in most human endeavors--20% of people do 80% of the work and so on). 80% apathy, 10% empathy, 10% antipathy (which amounts to hatred and even ridicule of anything you say or do) fits the general pattern.
NeroASERCH is offline


Old 06-05-2012, 03:51 PM   #29
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
Ref: Post # 24.

I was taken aback for a moment when I saw so many lines in RED INK!!
Sri. Mahakavi is yet to know that ONLY the moderators can use that color!!
Sorry! It is corrected now. I was used to answering questions in email using red to answer specific points raised in the email. I know the standard here now.
Thanks.
doctorzlo is offline


Old 06-05-2012, 03:54 PM   #30
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
Sorry! I was used to answering questions in email using red to answer specific points raised in the email. I know the standard here now.
Thanks.
You are new to this forum, sir. Not a big problem. You can edit it even now to some other color!

Editing is possible within 24 hours, if I remember correct.

PS: Any thread started will be shocked to see RED ink in his / her thread!!
NeroASERCH is offline


Old 06-05-2012, 08:01 PM   #31
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default
1997 இல் என் பெண் கல்யாணத்தின்போது விவாஹ மந்திரங்களின் பொருள் என்ற சிறு கையேடு ஒன்றை அச்சிட்டேன். விவாஹத்துக்கு வந்த பிராமணர்களுக்கெல்லாம் 400 பிரதிகள் நானே என் கைப்பட விநியோகித்தேன். ஸாஸ்திரிகள் உள்பட. மறுநாள் மண்டபத்தைக் காலி செய்யும் போது நாற்காலிகளின் கீழிருந்தும், ஜன்னல்கள், கதவு இடுக்குகளிலிருந்தும் கசங்கிய நிலையிலும் புத்தம் புதிதாகவும் கிடைத்த கையேடுகளின் எண்ணிக்கை 390. மீதிப் பத்துப் பேராவது படித்திருப்பார்கள் என்ற நம்பிக்கை தான் என்னை தளரவிடாமல் காப்பாற்றியது.
நண்பர் திரு விக்ரமன் அவர்களுக்கு வணக்கம் ,
இலவசமாக கிடைத்த நல்லதொரு பொருளின் அருமை தெரியாதது ஒரு துரதிருஷ்டமே .

கர்நாடக மாநிலத்தில் (பழைய மைசூர் பக்கம் ) ஓர் பழக்கம் நிலவுகிறது. விவாஹத்தின் போது சாஸ்த்ரிகள் வேத மந்திர சடங்குகளை ஆரம்பிப்பதற்கு முன் அந்த சடங்கின் முக்கியத்தையும் மந்திரங்களின் அர்த்தத்தையும் கன்னடத்தில் விளக்கிகூறுகிரார்கள். இது வைதீக முறையை பின்பற்றும் எல்லா வகுப்பினர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. இப்பொழுது இந்த முறையை பின்பற்றுவதை தமிழ் நாட்டிலும் காண்கின்றேன் . நல்லதொரு முயற்சி.
நலம் கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களுரு
Peptobismol is offline


Old 06-07-2012, 01:20 AM   #32
PhillipHer

Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
Default
கர்நாடக மாநிலத்தில் .......விவாஹத்தின் போது சாஸ்த்ரிகள் வேத மந்திர சடங்குகளை ஆரம்பிப்பதற்கு முன் அந்த சடங்கின் முக்கியத்தையும் மந்திரங்களின் அர்த்தத்தையும் கன்னடத்தில் விளக்கிகூறுகிரார்கள். ....... இப்பொழுது இந்த முறையை பின்பற்றுவதை தமிழ் நாட்டிலும் காண்கின்றேன் . நல்லதொரு முயற்சி.
.....
அஸ்ய தர்மஸ்ய உத்தரோத்தரம் வ்ருத்திரஸ்து.
PhillipHer is offline


Old 06-07-2012, 01:48 AM   #33
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default
உயிருள்ள சமுதாயத்தின் அடையாளம் பற்றி ஆர்னால்ட் டாயன்பீ கூறுகிறார்- யாரேனும் ஒருவர் துணிந்து ஒரு புதுமை செய்தால் பத்துப் பேர் அவரைப் பின்பற்றுவார்கள். பத்துப் பேர் அவரைக் கடுமயாக எதிர்ப்பார்கள். மீதி 80 பேர் மதில் மேல் பூனையாக நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். புது முயற்சி வெற்றி பெற்றுவிட்டால் இந்த 80 பேரில் பெரும்பாலானோர் புதுமையை ஏற்றுக் கொள்வார்கள்.தாழ்த்தப்பட்ட சமுதாயங்களில் தலைவன் சொன்னது தான் சட்டம். அதை மீறி எவனும் புதுமை செய்ய முடியாது.

பிராமண சமுதாயத்தை முற்கூறிய இலக்கணப்படி ஒரு உயிருள்ள சமுதாயம் என்று ஏற்றுக் கொள்ளலாம். நம்மில் யாரேனும் ஒருவர் துணிந்து உபநயனம் விவாஹம் போன்றவற்றை எளிமையாக, கேளிக்கைத் தன்மை இல்லாமல், அதன் வைதிகத் தன்மை கெட்டுப் போகாமல், நடத்தினால் சிறுகச் சிறுக சமுதாயம் முழுவதும் மாற வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்?

உங்களுக்கு உபநயன வயதில் பையன் இருந்து, அவனுக்கு நீங்கள் இது போன்று வைதிகத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முறையில் உபநயனம் செய்து வைக்கத் தீர்மானித்தால் முத்ல எதிர்ப்பு உங்கள் இல்லாளிடமிருந்து தான் வரும்.

நன்னா...இருக்கு. நமக்கு இருக்கறது ஒரே புள்ளை. விமரிசையாகச் செய்யாவிட்டால் எப்படி?இதைச் சாக்கிட்டுத் தானே நம் வீட்டுக்கு நாலு பந்துக்கள் சினேகிதாள் வருவா. அவாளுக்கெல்லாம் மரியாதை பண்ணி புடவை வேஷ்டி வாங்கித் தர வேண்டாமா. எல்லாரும் வந்தா இந்த வீடு போறுமா? உங்க கஞ்சத்தனத்தை எல்லாம் இப்போ தான் காட்டறதா ................. என்று நீட்டி முழக்குவார். நீங்கள் சொல்ல வந்ததையே முழுவதுமாகச் சொல்ல விடமாட்டார்.

சமஷ்டி உபநயனங்களில் செலவு குறைகிறதே அன்றி ஆடம்பரங்கள் குறைவதில்லை.

நம் வீடுகளில் எல்லாம் மதுரை மாடல் நிர்வாகம் தான். (எல்லாருக்கும் தெரிஞ்ச ரகசியத்தை வெளிப்படையாகச் சொல்வதில் என்ன வெட்கம்?)

எனவே எந்த சீர்திருத்தமும் தாய்மார்களிடமிருந்து தான் ஆரம்பிக்கவேண்டும். உபநயனத்தை ஆயுஷ்ஹோமம், மங்கல நீராடட்ல் போன்று வீட்டளவில் செய்ய வேண்டும். பையன் தொடர்ந்து சந்தியா வந்தனம் செய்யக் கூடிய வகையில் வைதிகத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மந்திரங்களை அர்த்தம் சொல்லி நிதானமாகச் சொல்ல வேண்டும். பையன், தகப்பனார் அந்த மந்திரத்தைத் திரும்பச் சொல்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். இது தாய்மார்களால் தான் முடியும்.

தாயக் குலம் என்ன நினைக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
Ifroham4 is offline


Old 06-07-2012, 03:08 AM   #34
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
............ தாயக் குலம் என்ன நினைக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
அறுபதுகளை எட்டும் தாய்க்குலம் இப்படிச் சொன்னாலும், இருபதுகளில் உள்ள தாய்க்குலம் ஒப்புக்கொள்ள வேண்டுமே!!

ஏன் இப்படிச் சொல்லுகிறேன் தெரியுமா?


சமீபத்தில் அமெரிக்க வாழ் மகன், மருமகள் தங்கள் மகளின் ஆயுஷ் ஹோமத்தை இந்தியாவில் நடத்தத் தீர்மானித்தார்கள்.

சுற்றமும், நட்பும் சிறிய வட்டத்தில் வந்தால், எங்கள் முதல் மாடிப் பகுதி (1500 சதுர அடி) போதும்! இதைச் சொன்னவுடன்,

வாழைப் பூவாக மாறியது இளைய தாய்க்குலத்தின் முகம்! விளைவு:



அருகிலுள்ள கல்யாண மண்டபம் ஏற்பாடு!


சாஸ்திரிகள் நால்வருக்கு எட்டாயிரம் தக்ஷிணை.


எல்லோருக்கும் தாம்பூலத்துடன் முறுக்கு, லட்டு.


சுற்றத்தாருக்கு, புடவை-வேஷ்டிகள்.


சம்பந்தி மரியாதை ஸ்பெஷல் புடவை-வேஷ்டி.


மற்ற மகளிருக்கெல்லாம் ரவிக்கைத் துணி.



நல்ல வேளை! எல்லோரிடமும் கணினி இருப்பதால், பத்திரிக்கை மட்டும் அடிக்கவில்லை! ஆகச் செலவு
ஒண்ணரை

லகரம்!
'டாலரில் சம்பாதிச்சா ஏன் பண்ணக் கூடாது?' என்று விமர்சனம் வேறு!! என்ன செய்வது?


பின் குறிப்பு:
பெங்களூர் திருமணம் ஒன்றில், வரவேற்புப் பூ அலங்காரத்திற்கு மட்டும், ஐந்து லகரம் செலவு செய்தார்களாம்!!

MannoFr is offline


Old 06-07-2012, 03:43 AM   #35
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
one and a half lakh for an ayushomam? my goodness!

iruppavargalukku laddu murukku taruvadai vida illaathavargalukku saatham sambar kodukkalaame? Just a suggestion - not specific to the instance quoted by Smt.RR.
Slonopotam845 is offline


Old 06-07-2012, 04:32 AM   #36
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default
one and a half lakh for an ayushomam? my goodness!

iruppavargalukku laddu murukku taruvadai vida illaathavargalukku saatham sambar kodukkalaame? Just a suggestion - not specific to the instance quoted by Smt.RR.
​Donation was given also!!
Peptobismol is offline


Old 06-07-2012, 05:44 AM   #37
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
e must not forget that vivaham and upanayanam are social events as well, in addition to the religious part, when we willingly invite near and distant relatives. Many make the effort to attend the function; we also get the pleasure of meeting familiar and unfamiliar relatives. In fact I meet most of the relatives only in such functions.

I find it difficult to accept the argument that money spent on festivities can be given to charity. This argument can be extended to any of our activities - eating out in restaurants, going on holidays or such luxuries.

A better approach may to be to spend equivalent amount on veda parayanam, sponsoring prasadams in temples for distribution or donation to other noble causes.
Lillie_Steins is offline


Old 06-07-2012, 06:02 AM   #38
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
வடிவேலு பாஷைலே சொல்லப்போனா இந்த மந்திரங்களும் சம்பிரதாயங்களும் இப்போது லௌகீகம் ஆகிவிட்டது. ஏனென்றால் சினிமாவிலும் சீரியலிலும் காட்டுகிறார்களே. நாமும் செய்வோம். வேதங்கள் என்ன சொன்னாலும், மந்திரங்கள் என்ன சொன்னாலும் நாம் ஆத்மார்த்தமாக எந்த பாஷைலே வேண்டிக்கிறோம். அதைதான் ஆண்டவன் ஏற்றுக்கொள்கிறான்.
tgs is offline


Old 06-07-2012, 06:17 AM   #39
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default
I find it difficult to accept the argument that money spent on festivities can be given to charity. This argument can be extended to any of our activities - eating out in restaurants, going on holidays or such luxuries.

A better approach may to be to spend equivalent amount on veda parayanam, sponsoring prasadams in temples for distribution or donation to other noble causes.

Easier said than done. Everybody has a budget for such functions. Usually it gets stretched beyond limits due to various factors. If so where is the extra money to spend on other charitable functions---especially equal amount?
Drugmachine is offline


Old 06-07-2012, 07:08 AM   #40
9mm_fan

Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
Default
உயிருள்ள சமுதாயத்தின் அடையாளம் பற்றி ஆர்னால்ட் டாயன்பீ கூறுகிறார்- யாரேனும் ஒருவர் துணிந்து ஒரு புதுமை செய்தால் பத்துப் பேர் அவரைப் பின்பற்றுவார்கள். பத்துப் பேர் அவரைக் கடுமயாக எதிர்ப்பார்கள். மீதி 80 பேர் மதில் மேல் பூனையாக நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். புது முயற்சி வெற்றி பெற்றுவிட்டால் இந்த 80 பேரில் பெரும்பாலானோர் புதுமையை ஏற்றுக் கொள்வார்கள்.தாழ்த்தப்பட்ட சமுதாயங்களில் தலைவன் சொன்னது தான் சட்டம். அதை மீறி எவனும் புதுமை செய்ய முடியாது.

பிராமண சமுதாயத்தை முற்கூறிய இலக்கணப்படி ஒரு உயிருள்ள சமுதாயம் என்று ஏற்றுக் கொள்ளலாம். நம்மில் யாரேனும் ஒருவர் துணிந்து உபநயனம் விவாஹம் போன்றவற்றை எளிமையாக, கேளிக்கைத் தன்மை இல்லாமல், அதன் வைதிகத் தன்மை கெட்டுப் போகாமல், நடத்தினால் சிறுகச் சிறுக சமுதாயம் முழுவதும் மாற வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்?

உங்களுக்கு உபநயன வயதில் பையன் இருந்து, அவனுக்கு நீங்கள் இது போன்று வைதிகத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முறையில் உபநயனம் செய்து வைக்கத் தீர்மானித்தால் முத்ல எதிர்ப்பு உங்கள் இல்லாளிடமிருந்து தான் வரும்.

நன்னா...இருக்கு. நமக்கு இருக்கறது ஒரே புள்ளை. விமரிசையாகச் செய்யாவிட்டால் எப்படி?இதைச் சாக்கிட்டுத் தானே நம் வீட்டுக்கு நாலு பந்துக்கள் சினேகிதாள் வருவா. அவாளுக்கெல்லாம் மரியாதை பண்ணி புடவை வேஷ்டி வாங்கித் தர வேண்டாமா. எல்லாரும் வந்தா இந்த வீடு போறுமா? உங்க கஞ்சத்தனத்தை எல்லாம் இப்போ தான் காட்டறதா ................. என்று நீட்டி முழக்குவார். நீங்கள் சொல்ல வந்ததையே முழுவதுமாகச் சொல்ல விடமாட்டார்.

சமஷ்டி உபநயனங்களில் செலவு குறைகிறதே அன்றி ஆடம்பரங்கள் குறைவதில்லை.

நம் வீடுகளில் எல்லாம் மதுரை மாடல் நிர்வாகம் தான். (எல்லாருக்கும் தெரிஞ்ச ரகசியத்தை வெளிப்படையாகச் சொல்வதில் என்ன வெட்கம்?)

எனவே எந்த சீர்திருத்தமும் தாய்மார்களிடமிருந்து தான் ஆரம்பிக்கவேண்டும். உபநயனத்தை ஆயுஷ்ஹோமம், மங்கல நீராடட்ல் போன்று வீட்டளவில் செய்ய வேண்டும். பையன் தொடர்ந்து சந்தியா வந்தனம் செய்யக் கூடிய வகையில் வைதிகத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மந்திரங்களை அர்த்தம் சொல்லி நிதானமாகச் சொல்ல வேண்டும். பையன், தகப்பனார் அந்த மந்திரத்தைத் திரும்பச் சொல்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். இது தாய்மார்களால் தான் முடியும்.

தாயக் குலம் என்ன நினைக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
hi vikraman sir,
just for information....நான் என் பையனுக்கு ஒன்பது வயதில் சமஷ்டி உபநயனம் தான் செயேதேன்..அமெரிக்காவில் இருந்து வந்து சென்னையில் செய்தேன்.....வெறும் என் தாய்
மற்றும் மனைவி மட்டும்.....மாமியார் அழைக்கவில்லை...கொஞ்சம் தாய் குலத்திற்கு வருத்தம் தான்....வைதிக செலவு மட்டும் தான்....அடாம்பர செலவு
இல்லை.....மாமியார் சொன்னார்....வசதி இருந்தும் சமஷ்டி உபநயனம் செய்வார்களோ? .....என்னுடைய பதில் இது தான்...என் மகன் உபநயனம் ....என் இஷ்டம் தான்.....கொஞ்சம் கஷ்டம் தான்...கொஞ்சம் துணிச்சல் வேண்டும்....இது மாதிரி என் மகள்
திருமணம் எளிமையாக செய்ய விரும்புகிறேன் ....even without மாமியார்...
அதற்க்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டும்.....பெரியோர்கள் ஆசிர்வாதம் தேவை....ஆனால் அவர்களின் இன்வோல்வேமென்ட் தேவை இல்லை....
\
9mm_fan is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 12:41 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity