![]() |
பாடல்: வானம் நிறம் மாறும்
திரைப்படம்: தாவணிக் கனவுகள் இசை: இளையராஜா பாடியவர்கள்; எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை நாள்தோறும் வேதங்கள் பாடாதோ தேகங்கள் வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை மன்மதக்கலை எங்கு விற்பனை மங்கை இவள் தேகம் எங்கும் முத்திரை அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை மன்னவன் தோளோரம் என் இதழ் ரீங்காரம் பஞ்சணை பூபாளம் பாடிடுமே இனி தேவன் கோயில் பூஜை நேரம் காதல் தீபம் நாணும் வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை அள்ளித்தர வேண்டும் அன்புக்கட்டளை சங்கதி ஏராளம் என் மனம் தாராளம் மன்மதன் தேவாரம் பாடிடுவேன் இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும் மோகம் காவல் மீறும் வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை நாள்தோறும் வேதங்கள் பாடாதோ தேகங்கள் வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை |
Kaatrukella veli song's lyrics pl...........
|
பாடல்: என்னை அழைத்தது யாரடி
திரைப்படம்: ஒருவனுக்கு ஒருத்தி இசை: வி.குமார் பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அறியாமலே என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அறியாமலே வண்ணக்கிளியே என்னைக் காக்கும் எண்ணம் ஏன் வந்ததோ ஒரு விழி அழுதால் மறு விழி சிரிக்காது உணர்வு ஒன்றல்லவோ ஆயிரம் ஜென்மங்கள் பார்த்த நினைவாக அன்பு மலர்கின்றதோ என்னை அழைத்தது யாரது கண்ணா என்னை அறியாமலே என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே வெள்ளி நிலவைக் கையில் பிடிக்க உள்ளம் நினைக்கின்றதே பூமியில் வந்து சந்திர கிரணங்கள் பூவை அணைக்கின்றதே மாளிகை தனைத்தேடி வாசல் வரும் போது வாசல் திறக்கின்றதே என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அறியாமலே என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே |
பாடல்: கொத்தமல்லிப்பூவே
திரைப்படம்: கல்லுக்குள் ஈரம் இசை: இளையராஜா பாடியவர்: எஸ்.ஜானகி கொத்தமல்லிப்பூவே...ஏஏஏ ஏஏஏ ஏஏ கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு...அரே ரரே கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு ஆத்தோரம் கொட்டிவச்ச மல்லி பூ வாசத்துல அள்ளி ஆகாசம் தூவிவிட்ட வெள்ளி எம் மாமன் வச்ச புள்ளி நெனைச்சேனே எளைச்சேனே நானு என் நெஞ்சுக்குள்ள தேனு வட்டமிடும் பூங்காத்து வந்து வந்து மோதும் தொட்டுத்தொட்டு சூடாக சொந்தக்கத பேசும் சொந்தத்தில பந்தத்தில சந்தோஷம் கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு சேத்தோட ஒட்டிக்கிட்ட நாத்து அத சேத்துக்கிட்ட காத்து கூத்தாடும் எம்மனசு பாத்து அது தென்னை இளங்கீத்து வெத போட்டேன் ஒனக்காக நேத்து நான் கண்ட சுகம் சேத்து தொட்டுவிட்ட பின்னாலே தூக்கம் இல்ல மாமா தொட்டுக்கிட்டு ஒன்னோட தூங்கவேணும் ஆமா சொர்க்கத்தில பக்கத்தில நின்னேனே கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு...அரே ரரே கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு |
S.Janaki - Lyrics
S.Janaki is my favorite singer. Please use this thread to post only S.Janaki Amma's lyrics of your favorite songs.
பாடல்: கண்ணிலே என்ன உண்டு திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர்: எஸ்.ஜானகி கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும் கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும் நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும் நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும் நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும் நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும் கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி ஞானியின் மனமும் ஆசையில் தேனீ ஞானியின் மனமும் ஆசையில் தேனீ நானொரு ராணி பெண்களில் ஞானி என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும் கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும் கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும் காலங்களாலே காரியம் பிறக்கும் காலங்களாலே காரியம் பிறக்கும் காரியம் பிறந்தால் காரணம் விளங்கும் என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும் கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும் Please click on the link below for the list of links to the songs in this thread: Janaki song lyrics in this thread |
பாடல்: காற்றுக்கென்ன வேலி
திரைப்படம்: அவர்கள் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர்: எஸ்.ஜானகி காற்றுக்கென்ன வேலி...கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது தேர் கொண்டு வா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன் சீர் கொண்டு வா சொந்தமே இன்று தான் பெண்மை கொண்டேன் பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசிப்பேசி கிள்ளை ஆனேன் கோவில்விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக்கொள்வேன் காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது |
thank u priya...
pl u conitune your choices. disturb pannalai.. |
பாடல்: கனவு ஒன்று தோன்றுதே
திரைப்படம்: ஒரு ஓடை நதியாகிறது இசை: இளையராஜா பாடியவர்: எஸ்.ஜானகி கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல பூமகள் மேலாடை...நெளியுமோ நகர்ந்திடுமோ...நழுவிடுமோ...ஓ காமனே வாராதே...காமனே வாராதே மனமே பகையா...மலரும் சுமையா உறக்கம் கலைக்க உறுதி குலைக்க கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல பார்வைகள் பார்த்தானே...இருதயம் இடம் பெயர்ந்து...கிறங்கிடுதே...ஏ கேள்விகள் கேட்டானே...கேள்விகள் கேட்டானே புனிதம் இனிமேல் புதிதாய் கெடுமோ சிறையை உடைக்க பறவை நினைக்க கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல லல லால லாலலா...ல லாலா லா லாலா லல லால லாலலா...ல லாலா லா லாலா |
பாடல்: வசந்த கால கோலங்கள்
படம் : தியாகம் பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன் இசை : இசைஞானி இளையராஜா பாடியவர் : எஸ்.ஜானகி நடித்தவர் : லட்சுமி வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் அலையிலாடும் காகிதம்...ம்...ம்...ம்...ம்...ம்.. அலையிலாடும் காகிதம் அதிலும் இந்த காவியம் நிலையில்லாத மனிதர்கள் அவர்க்கும் இந்த உறவுகள் உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவா கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் வசந்த கால கோலங்கள் தேரில் ஏறும் முன்னரே தேவன் உள்ளம் தெரிந்தது நல்லவேளை திருவுள்ளம் நடக்கவில்லை திருமணம் நன்றி.. நன்றி.. தேவா உன்னை மறக்க முடியுமா கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோலங்கள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் |
One old no of SJ
Sollamal theriya vendumae - lyric venumae..... |
பாடல்: சொல்லாமல் தெரிய வேண்டுமே
திரைப்படம்: விளையாட்டுப் பிள்ளை இசை: மகாதேவன் பாடியவர்: எஸ்.ஜானகி சொல்லாமல் தெரிய வேண்டுமே சொல்லவும் தனிமை வேண்டுமே கண் ஜாடை புரிய வேண்டுமே யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே சொல்லாமல் தெரிய வேண்டுமே ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது மறு முறை காணவே மனமும் சென்றது மறு முறை காணவே மனமும் சென்றது மங்கையின் ஆசையை நாணம் வென்றது சொல்லாமல் தெரிய வேண்டுமே ஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது ஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது மனதில் இருப்பது மறைமுகம் ஆனது மனதில் இருப்பது மறைமுகம் ஆனது மௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது சொல்லாமல் தெரிய வேண்டுமே தேடிய செல்வம் கைகளில் கிடைத்தது திருநாள் போலவே ஒரு நாள் மலர்ந்தது பாடிய யாவையும் கவிதையில் படித்தது பாவை ஒருத்தி எழுத்தினில் வடித்தது சொல்லாமல் தெரிய வேண்டுமே சொல்லவும் தனிமை வேண்டுமே கண் ஜாடை புரிய வேண்டுமே யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே சொல்லாமல் தெரிய வேண்டுமே |
பாடல்: ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
திரைப்படம்: வண்டிச்சக்கரம் இசை: ஷங்கர் கணேஷ் பாடியவர்: எஸ்.ஜானகி ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேர்த்து கெட்டி மேளம் கொட்டும் நேரம் சுப லாலி சொல்ல வாடி வரும் காலம் நல்ல காலமின்னு கும்மி கொட்டுங்கடி ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேர்த்து கெட்டி மேளம் கொட்டும் நேரம் சுப லாலி சொல்ல வாடி வரும் காலம் நல்ல காலமின்னு கும்மி கொட்டுங்கடி மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி மைபோட்ட கண்ணுக்கு சுகம் இருக்குதடி மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி மைபோட்ட கண்ணுக்கு சுகம் இருக்குதடி வெள்ளிக்கொலுசு துள்ளாதோ அள்ளி அணைக்க சொல்லாதோ வெள்ளிக்கொலுசு துள்ளாதோ அள்ளி அணைக்க சொல்லாதோ அணைச்ச பக்கம் சிலிர்க்குதுன்னு மயக்கம் கொள்ளாதோ...ஓ ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேர்த்து கெட்டி மேளம் கொட்டும் நேரம் சுப லாலி சொல்ல வாடி வரும் காலம் நல்ல காலமின்னு கும்மி கொட்டுங்கடி ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேர்த்து மச்சான கைகாரி மயக்கி வச்சுக்கிட்டா மாராப்பு சேலையிலே இழுத்து கட்டிக்கிட்டா மச்சான கைகாரி மயக்கி வச்சுக்கிட்டா மாராப்பு சேலையிலே இழுத்து கட்டிக்கிட்டா புது ரவிக்கை தந்தானா அதை ரசிக்க வந்தானா புது ரவிக்கை தந்தானா அதை ரசிக்க வந்தானா ரவிக்கை தந்த ரகசித்தை உனக்கு சொன்னானா...ஆ ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேர்த்து கெட்டி மேளம் கொட்டும் நேரம் சுப லாலி சொல்ல வாடி வரும் காலம் நல்ல காலமின்னு கும்மி கொட்டுங்கடி ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேர்த்து |
பாடல்: அடி அம்மாடி சின்னப் பொண்ணு
திரைப்படம்: கன்னிப் பருவத்திலே இசை: ஷங்கர் கணேஷ் பாடியவர்: எஸ்.ஜானகி அடி அம்மாடி சின்னப் பொண்ணு ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி அடி அம்மாடி சின்னப் பொண்ணு ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு வாடாத மல்லியப்பூ நான் வச்சிருந்தேன் என் கொண்டையில வண்டு ஒண்ணு வட்டமிட வந்திருச்சு என்ன சொல்ல மேலாட தான் விலகி காத்து மேனியெல்லாம் கொஞ்சம் தொட்டுவிட குளிரடிச்சு சிலுசிலுத்து குமரி என்னை வாட்டுதடி ம்...தானன னன்னா தானன னன்னா தன்ன னான்னா தானன னன்னா தனன னன்னா...தானன னன்னா அடி அம்மாடி சின்னப் பொண்ணு ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு ஓஹோ...பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி நான் கல்யாணம் ஆகாத கன்னிப் பொண்ணு செல்லக் கண்ணு தெனம் காணாத கனவில்ல எல்லாம் ஒண்ணு நான் கல்யாணம் ஆகாத கன்னிப் பொண்ணு செல்லக் கண்ணு தெனம் காணாத கனவில்ல எல்லாம் ஒண்ணு என் கனவு நெனவாச்சி அம்மன் அருளாலதான் என் கனவு நெனவாச்சி அம்மன் அருளாலதான் அடி அம்மாடி சின்னப் பொண்ணு ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி ஆத்துல நான் குளிக்கையிலே அஞ்சாறு மீன் வந்து கடிக்குதடி தேகமெல்லாம் கிளுகிளுத்து திண்டாடுறேன் குறுகுறுத்து காதோடு சொல்லட்டுமா நான் கண்ணாலே கண்ட ரகசியத்த யாருக்குமே சொல்லாதே நீ ஆச வெக்கம் அறியாதடி ஹோய்...தானன னன்னா தானன னன்னா தன்ன னான்னா தானன னன்னா தனன னன்னா...தானன னன்னா அடி அம்மாடி சின்னப் பொண்ணு ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு ஹே...பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி |
பாடல் : பாடவா உன் பாடலை
படம் : நான் பாடும் பாடல் பாடலாசிரியர் : வைரமுத்து இசை : இளையராஜா பல்லவி : பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை என் வாழ்விலே ஓர் பொன்வேளை ஹோ என் வாழ்விலே ஓர் பொன்வேளை ஹோ பாடவா உன் பாடலை சரணம் 1 : வாடைப்பூங்காற்று என்னைத்தீண்டும் வாழ்க்கை யாவும் நீ வேண்டும் வாடைப்பூங்காற்று என்னைத்தீண்டும் வாழ்க்கை யாவும் நீ வேண்டும் நதியோடு அலை போல உறவாட வேண்டும் இலை மூடும் மலர் போல எனை மூட வேண்டும் என் தேகம் எங்கும் உன் கானம் தங்கும் நீ வந்து கேளாமல் ஏங்கும் தமிழ்ச்சங்கம் சரணம் 2 : உன்னைக்காணாமல் கண்கள் பொங்கும் அதுவே நெஞ்சின் ஆதங்கம் உன்னைக்காணாமல் கண்கள் பொங்கும் அதுவே நெஞ்சின் ஆதங்கம் உனக்காக என் பாடல் அரங்கேறும் வேளை நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை பூ மேகம் இங்கே ஆகாயம் எங்கே நீ சென்ற வழி பார்த்து வாடும் உன் பூ இங்கே |
பாடல்: என் தேகம் அமுதம்
திரைப்படம்: ஒரு ஓடை நதியாகிறது பாடியவர்: எஸ்.ஜானகி இசை: இளையராஜா என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம் மார்கழி ராத்திரி பிரிவது பாவம் மார்கழி ராத்திரி பிரிவது பாவம் என் தேகம் அமுதம்...ம்...ம்...ம் முல்லை மலர் வாசம் வீசவில்லையா பெண் மனசின் ஆசை பேசவில்லையா பூத்திருப்பவள் தாரமல்லவா காத்திருப்பதே பாரமில்லையா துள்ளி எழும் பிள்ளை பிஞ்சு சத்தம் இன்றி முத்தம் கொஞ்சு விளக்கை அணைத்துவிடு என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம் மார்கழி மார்கழி மார்கழி ராத்திரி பிரிவது பாவம் என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்...ஆ ஆ ஆ வீணைகளின் மௌனம் ஒட வேண்டுமே ஆளுக்கொரு ராகம் பாட வேண்டுமே கூந்தல் இருக்கு போர்வை எதற்கு காலை வரைக்கும் காமன் வழக்கு நெஞ்சம் எங்கும் மின்னல் அலை பஞ்சம் இல்லை பன்னீர் மழை எனக்கு பொறுக்கவில்லை என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம் மார்கழி மார்கழி மார்கழி ராத்திரி பிரிவது பாவம் என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்...ம்ம்...ஆ ஆ |
பாடல்: செங்கமலம் சிரிக்குது
திரைப்படம்: தாவணிக்கனவுகள் இசை: இளையராஜா பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது கூ கூ...குக்குக் கூ கூ...கூ கூ எனக் கூவும் குயில் சின்னச் சின்ன சந்தத்தில் அந்திப்போர் நடத்தும் செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது கூ கூ...குக்குக் கூ கூ...கூ கூ எனக் கூவும் குயில் சின்னச் சின்ன சந்தத்தில் அந்திப்போர் நடத்தும் செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது முத்தம் இடும் மாலை...வேளை...மூடுவிழா நாடகமோ நித்தம் இதழ் தேடும்...நேரம்...நாணம் எனும் நோய் வருமோ பூமாலை சூடாது போய் தேடக் கூடாது எல்லைதனைத் தாண்டாது பிள்ளை எனத் தாலாட்டு மஞ்சள் தரும் நாள் கூறு வஞ்சம் இல்லை தாழ் போடு காமன் கணை ஏவல் எனை காவல் மீறத் தூண்டுதே செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது மங்கை இவள் தேகம்...நோகும்...மோஹனமாய் தாளமிடு கங்கை நதி பாயும்...நேரம்...காதிலொரு சேதி கொடு நாள்தோறும் ராக்காலம் ஏதிங்கே பூபாளம் இன்பம் கரை காணாது கண்கள் இமை மூடாது உன்னைக்கரை சேர்க்காது எந்தன் அலை ஓயாது சேவல் அது கூவும்வரை நாணம் ஓய்வு காணுமே செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது கூ கூ...குக்குக் கூ கூ...கூ கூ எனக் கூவும் குயில் சின்னச் சின்ன சந்தத்தில் அந்திப்போர் நடத்தும் செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது |
Please click on the link below for the list of links to the songs in this thread:
Janaki song lyrics in this thread Quote:
|
பாடல்: அழகிய செந்நிற வானம்
திரைப்படம்: காஷ்மீர் காதலி இசை: ஜி.கே.வெங்கடேஷ் பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ...ஓஓ ஓ அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து கண்ணோடு நின்ற அழகோ...ஓஓ ஓ கண்கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம் கண்கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம் காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம் காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம் என்னென்னதான்...நாணமோ...பாவமோ...ஓஓ ஓ அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ...ஓஓ ஓ ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது அந்தாதி நான்...பாடவோ...கூடவோ...ஓஓ ஓ அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து கண்ணோடு நின்ற அழகோ...ஓஓ ஓ |
பாடல்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
திரைப்படம்: அவளுக்கென்று ஒரு மனம் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர்: எஸ்.ஜானகி உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் உறவினில் விளையாடி வரும் கனவுகள் பலகோடி உறவினில் விளையாடி வரும் கனவுகள் பலகோடி உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு நினைத்தால் போதும் வருவேன் ஆஆ ஆஆ தடுத்தால் கூட தருவேன் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது இனியொரு பிரிவேது அந்த நினைவுக்கு முடிவேது இரவும் பகலும் கலையே ஆஆ ஆஆ இருவர் நிலையும் சிலையே உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழிகேட்டு ஆசையில் விழுந்தேன் அங்கே ஆஆ ஆஆ காலையில் கனவுகள் எங்கே உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் உறவினில் விளையாடி வரும் கனவுகள் பலகோடி உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் |
பாடல்: தேவன் தந்த வீணை
திரைப்படம்: உன்னை நான் சந்தித்தேன் இசை: இளையராஜா பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் மேகம் பாடும்...மேகம்...பாடும் மேகம் பாடும் பாடல் கேட்டேன் நானும் பாடிப் பார்க்கிறேன் மேகம் பாடும் பாடல் கேட்டேன் நானும் பாடிப் பார்க்கிறேன் மோகமோ...ஓஓ ஓஓ ஓ மோகமோ சோகமோ இனியும் நெஞ்சம் தூங்குமோ நாளும் நாளும் தேடுவேன் தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் வானம் எந்தன் மாளிகை வையம் எந்தன் மேடையே வானம் எந்தன் மாளிகை வையம் எந்தன் மேடையே வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள் எங்கிருந்தோ இங்கு வந்தேன் இசையினிலே எனை மறந்தேன் இறைவன் சபையில் கலைஞன் நான் தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் |
All times are GMT +1. The time now is 06:58 AM. |
Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2025, vBulletin Solutions, Inc.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2