|
![]() |
#1 |
|
S.Janaki is my favorite singer. Please use this thread to post only S.Janaki Amma's lyrics of your favorite songs.
பாடல்: கண்ணிலே என்ன உண்டு திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர்: எஸ்.ஜானகி கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும் கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும் நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும் நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும் நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும் நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும் கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி ஞானியின் மனமும் ஆசையில் தேனீ ஞானியின் மனமும் ஆசையில் தேனீ நானொரு ராணி பெண்களில் ஞானி என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும் கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும் கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும் காலங்களாலே காரியம் பிறக்கும் காலங்களாலே காரியம் பிறக்கும் காரியம் பிறந்தால் காரணம் விளங்கும் என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும் கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும் Please click on the link below for the list of links to the songs in this thread: Janaki song lyrics in this thread |
![]() |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|