Reply to Thread New Thread |
06-30-2010, 12:39 AM | #21 |
|
|
|
06-30-2010, 02:01 AM | #22 |
|
|
|
06-30-2010, 08:03 AM | #23 |
|
|
|
07-01-2010, 07:17 AM | #24 |
|
Originally Posted by Siv.S Originally Posted by Sourav watched it today... liked it... nice movie...enga district-la edutha padam. good response in theatre, hope it turns out as a hit movie. Mannargudi pakkam eduthatha director sollirunthappla nyabagam. |
|
07-01-2010, 09:19 AM | #25 |
|
Kumudam Review
கிராமத்துக் கதை. ஆனால் தற்போதைய தமிழ்த் திரையுலக தலையெழுத்தைப் போல் மதுரையில் நடக்கும் கதை கிடையாது. மன்னார்குடி பக்கம் நடக்கிறது. மன்னார்குடி என்பதால் ஏகப்பட்ட சொத்தும் செல்வச்செழிப்பும் கிடையாது. எளிமைதான் படத்தின் அடிப்படை. படத்தில் ரிக்கார்ட் டான்ஸ் இருக்கிறது. ஆனால் நடன நடிகையின் உடலை மோப்பம் பிடிக்கும் கேமரா கிடையாது. அருவாள் இருக்கிறது, கிராமங்களுக்கிடையே பகை இருக்கிறது. ஆனால் அதிர்ச்சியில் கண்களை மூட வைக்கும் ரத்தம் தெறிக்கும் வன்முறை கிடையாது. அப்புறம் படத்தில் என்ன இருக்கிறது? யதார்த்தமான கதாபாத்திரங்கள். படம் முழுவதும் சிரிப்புடன் நம்மை உட்கார வைக்கும் திரைக்கதை. பகையிலிருக்கும் பக்கத்து கிராமத்துப் பள்ளிக்கூடப் பெண்ணைக் காதலிக்கும் ஹீரோ, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதுதான் கதை. ஹீரோவாக ‘பசங்க’ விமல். நடிப்பு இயல்பாய் வருகிறது. கிராமத்து தறுதலையை கண் முன் கொண்டு வருகிறார். அவரது நண்பர்களும் அப்படியே. ஹீரோயின் மலையாளத்து இறக்குமதி ஓவியா.குழந்தைத்தனமாய் இருக்கிறார். எல்லோரும் கிராமத்து முகங்களுடன் இருக்க, இவரிடம் மட்டும் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகியின் நடிப்பு வந்துவிட்டது. மகனை பாசத்துடனும் பயத்துடனும் பார்க்கும் பரிதாப அம்மா சரண்யா. ‘ஆவணி தாண்டுனா ‘டாப்’பா வந்துருவான்’ என்ற ஜோதிட நம்பிக்கையில் மகனுக்கு செல்லம் கொடுப்பதும் துபாயிலிருந்து திரும்பும் கணவனிடம் மகனுக்காக நாடகமாடுவதும் கலகலப்பு. துபாய் அப்பாவாக இளவரசு. படத்துக்குப் படம் நடிப்பில் மெருகேற்றிக்கொண்டே இருக்கிறார். பரிதாப பஞ்சாயத்தாக கஞ்சா கருப்பு. அவரை வைத்து கிராமத்து இளைஞர்கள் செய்யும் காமெடி தியேட்டரை அதிர வைக்கிறது. அண்ணனாக வரும் புதுமுகம் திருமுருகனை இனி பல படங்களில் வில்லனாகப் பார்க்கலாம். கேமரா ஓம் பிரகாஷும் இசை எஸ்.எஸ்.குமரனும் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் விட படத்தின் நிஜ ஹீரோ இயக்குநர் சற்குணம். முதல் படமாம். நம்ப இயலவில்லை. அதிக செலவு இல்லாமல் பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் கதை சொல்லும் விதத்தை மட்டுமே நம்பிப் படமெடுத்திருக்கிறார். நம்பினோர் நலிவதில்லை. பருத்தி வீரன், பசங்க திரைப்படங்களை நினைவுபடுத்தும் காட்சியமைப்புகள், படத்தில் இருக்கும் லாஜிக் ஓட்டைகள். பள்ளி மாணவி வெட்டி இளைஞனைக் காதலிப்பது, குடிப்பதும் பெண்ணைக் கடத்துவதும் சாதாரண செயல்கள்போல் காட்டுவது போன்ற உறுத்தல்கள் இருந்தாலும், களவாணி, களவாடிவிட்டான் இதயத்தை.. |
|
07-02-2010, 04:35 AM | #26 |
|
Vikatan Review
துறுதுறு, விறுவிறு, கலகலவென, குறும்புக் 'களவாணி'! டுடோரியல் காலேஜ் ப்ளஸ் டூ 'மாணவன்' விமல். அப்பாவின் துபாய் சம்பாத்தியத்தை அம்மாவிடம் இருந்தே மிரட்டிப் பிடுங்கி, கூட்டுறவு சொசைட்டிக்குப் போகும் உர மூட்டையை லவட்டி, ஊருக்குள் களவாணித்தனம் செய்கிறார். அவரது மனதைக் கொள்ளை அடிக்கிறார் பக்கத்து ஊர் பள்ளி மாணவி ஓவியா (அறிமுகம்). ஒரு குறுவைக்கும், தாழடிக்கும் இடையில் விமலுக்கும் ஓவியாவுக்கும் இடையே காதல் பூக்கிறது. ஓவியாவின் அண்ணன் திருமுருகனுக்கும் (அறிமுகம்), விமலுக்கும் ஏற்கெனவே பழைய பஞ்சாயத்துகள் பாக்கி. ஓவியாவுக்கு வேறு ஒருவரோடு ரகசியத் திருமணம் செய்துவைக்கும் ஏற்பாடுகளை முறியடித்து அவரை விமல் எப்படிக் கைப் பிடிக்கிறார் என்பதே களவாணி வியூகம்! கிராமத்துப் படம் என்றாலே மதுரைதான் என்ற க்ளிஷேவை உடைத்து, கதைக் களத்தை தஞ்சா வூருக்குக் கடத்தி இருக்கிறார், அறிமுக இயக்குநர் ஏ.சற்குணம். உர மூட்டைகள், உழவு மாடு, விதை நெல், கூட்டுறவு சொசைட்டி, பூச்சி மருந்து, நெற்கதிர் என்று மருத நிலம் அப்படியே திரையில். 'அங்க நெருதுளி ஆவுது', 'ஆயி' என்பதாக அசல் வட்டார வழக்கும் ஆங்காங்கே ஈர்க்கிறது. யமஹா, பல்சர், வெள்ளைச் சட்டை வேட்டி, பீர் குடி இளைஞர்கள், கிரிக்கெட் சிறுவர்கள், துபாய் சம்பாத்தியப் பெற்றோர் கள், கிராமத்துத் திருவிழா 'ரீட்டா' டான்ஸ், மாட்டு வண்டி என சமகாலக் கிராமம் அச்சு அசலாக! கிராமத்து உதார் சண்டியராக விமல். முன் பின் இருக்கை பேருந்துப் பெண்களிடம் அடுத்தடுத்து 'சைன்' போட்டு மயக்கி, பார்க்கும் பெண்களிடம் எல்லாம் 'கட்டிக்கிறேன்னு சொல்லு!' என்று காதலாகிக் கசிந்துருகி, ஃபுல் மப்பில் 'ஆங்... ஃப்ரைட் ரைஸ் ஒண்ணு, ஆம்லேட் ஒண்ணு!' என்று டாஸ்மாக் பார் சைட் டிஷ் காசை அமுக்கி.... தமிழ் சினிமாவின் தற்போதைய ஹீரோக்கள் எவரும் பிரயோகிக்காத அஸ்திரங்களால் மனதைக் கொள்ளைகொள்கிறார். பாக்கெட் பேனா சீப்பும், பவுடர் கர்ச்சீப்புமாக 'வெள்ளுடை வேந்தன்' விமல் நடிப்பில் அத்தனை யதார்த்தம். ஸ்கூல் பொண்ணுபோலவே குட்டிப் பெண்ணாக இருக்கும் ஓவியா ஓவிய அழகு ப்ளஸ் குறும்பு. விமலிடம் சிரித்துவிட்டு, "சிரிச்சே ஸீன் போட்டேன்... விட்டுட்டான்!" என்று தோழிகளிடம் 'களுக்'கும்போதும், பாவாடையைத் தூக்கிச் செருகி நாற்று நடும்போதும் இயல்பும் நேர்த்தியுமான வார்ப்பு. 'களவாணி'யின் மிகப் பெரிய பலம் சரண்யாவும் இளவரசுவும். "ஆடி போயி ஆவணி வரட்டும்... அவன் டாப்பா வருவான்" என்று சரண்யா கண்கள் விரியச் சொல்லும்போது எல்லாம் கை தட்டல் அள்ளுகிறது. துபாய் ரிட்டர்ன் அப்பாவாக 'களவாணி' மகனைச் சமாளிக்க முடியாமல் திண்டாடி தியேட்டரில் தீபாவளிப் பட்டாசு கொளுத்துகிறார் இளவரசு. மிரட்டல் வில்லன் உடல் மொழி திருமுருகனிடம் கனகச்சிதம்! 'கோர்ட் வாசலையே மிதிக்காம சொந்தக் காசு 200 ரூபா போட்டு எனக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுக்குறதுல உங்களுக்கு என்னடா சந்தோஷம்!' என்று புலம்புவதும் 'உங்க கால்ல விழுந்து கும்புடுதேன்... அந்தப் பொண்ணு பாலிடாயில் குடிக்கலை!' என்று கதறிச் சிதறுவதுமாகக் காமெடி போதை ஊட்டுகிறார் கஞ்சா கருப்பு. 'அறிக்கி LC 112 கூட்டு' அசத்தல் ஐடியா. அதை வெறுமனே காமெடிக்கு மட்டும் பயன்படுத்தாமல், திருப்புமுனைக்கும் பயன்படுத்தியது க்ளாஸ். சைக்கிளோடு ஃபுட்போர்டு அடிப்பது, வயலில் ஓவியா நட்ட நாற்றுகள் மட்டும் செழித்து வளர்ந்திருப்பது, டிக்கி ஸ்பீக்கரை காரில் கட்டிக்கொண்டு பஞ்சாயத்தை வீர மரணம் எய்தவைப்பது, மாப்பிள்ளையைக் கடத்தி 'நல்ல புத்தி' சொல்வது எனப் படம் முழுக்க ரசனை ஐடியாக்கள். எஸ்.எஸ்.குமரனின் இசையில் 'டம்மா டம்மா', 'ஊர் உறங்கும் சாமத்துல' பாடல்களில் மட்டும் வயல்வெளி வாசம். ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு கிராமத்துப் பசுமையை அப்படியே ஆசையாய் அள்ளி இருக்கிறது. ரத்தம் காட்டுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ள கதை. யதார்த்தம் மீறாமல் அசல் கிராமத்துப் படத்தைக் கொடுத்த வகையில் நம் மனதைக் கொள்ளையடிக்கும் 'களவாணி'! 46/100 Positive reviews everywhere .. waiting for the movie online |
|
07-02-2010, 04:37 AM | #27 |
|
|
|
07-03-2010, 04:24 AM | #29 |
|
விமர்சனம்-களவாணி
உரம், விவசாயம், ஊடால காதல்னு அழகான கதையும் அற்புதமான பிரசன்டேஷனுமாக வந்திருக்கிறார் புது இயக்குனர் சற்குணம்! இதுவரைக்கும் எங்கெங்கேயோ சறுக்குன தயாரிப்பாளர்கள் இனி இவர் பக்கம் மைய(ல்)ம் கொள்ளலாம். துபாய்க்கார அப்பாவுக்கு துடுக்கான பிள்ளை விமல். வெட்டி வேலை, வீம்பு சண்டை, சாயங்கால சரக்கு என்று ஊதாரியாக திரிகிறவருக்கு, பக்கத்து கிராமத்திலிருந்து பள்ளிக்கு வரும் ஓவியா மீது காதல். ஆனால் ஓவியாவின் அண்ணனுக்கும் விமலுக்கும் ஜென்ம பகை. சந்தர்ப சூழ்நிலை விமலை மேலும் கெட்டவனாக்க, வெட்டு குத்தாகிறார்கள் வருங்கால மச்சான்கள். இவ்வளவையும் மீறி இணைந்தார்களா ஜோடி என்பது க்ளைமாக்ஸ். ஏ.வெங்டேஷ், பேரரசுகளுக்கு இப்படி ஒரு கதை கிடைத்தால் தியேட்டர் கேண்டீனில் கூட பிளாஸ்திரியும், டெட்டாலும்தான் விற்று தொலைந்திருக்கும். ஆனால் சற்குணத்தின் ட்ரீட்மென்ட்டே தனியாக இருக்கிறது. LC 112 என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு இவர் எழுதியிருக்கும் புதுக்கவிதை இன்னும் கொஞ்ச நாளைக்கு தஞ்சாவூர் பக்கம் தண்ணீராக ஓடினாலும் ஆச்சர்யமில்லை. ஊர் முழுக்க இதை எழுதி போட்ருவேன் என்று மிரட்டியே ஓவியாவை 'கட்டிக்கிறேன்'னு சொல்ல வைக்கிற விமல், அப்படியே ஒரு நடை ஓவியாவின் அப்பாவிடமே போய் 'மேற்படி ரக நெல்லு இருக்கா' என்று சதாய்ப்பது செம கரைச்சல். காரின் பின் சீட்டில் இருப்பது அப்பா என்பது தெரியாமலே தனது வீர தீர கதையை சொல்லி மாட்டிக் கொள்வதும், ஓவியா நட்டுவிட்டு போன நாலு கொத்து நாற்றை மட்டும் செம்மையாக 'கவனித்து' அதன் வளர்ச்சியில் தன் காதலை வளர்ப்பதுமாக பின்னி எடுத்திருக்கிறார் விமல். இதே இந்த கதைக்காகவே பெத்து போட்ட மாதிரி இருக்கிறார் ஓவியாவும். போதையில் தன் கண்ணெதிரிலேயே அத்தை மகளை கடத்திப் போகும் விமலை பார்த்து பேஸ்த் அடித்துப் போய் நிற்கிற காட்சியில் சூடு பிடிக்குது கதை. இளசுகளின் 'கடலைக்கு' இடையூறாக வரும் சிறுவனுக்கு கண்ணை கட்டி கண்ணாமூச்சு ஆட விடுவதெல்லாம் கலகலப்பான காதல் பொதுமறை! அவ்வப்போது விமல் கோஷ்டியின் அரவையில் சிக்கி 'நொந்தாமிர்தம்' ஆகிறார் கஞ்சா கருப்பு. இவரது காதுபடவே 'பஞ்சாயத்து காலமாகிவிட்டார்' என்று மைக்கில் அறிவிப்பதை கேட்டு திடுக்கிடுகிற போதெல்லாம் கைதட்டல்களால் திடுதிடுக்கிறது தியேட்டரும். அகன்ற கண்களில் ஆச்சர்யம் கோபம் பரிதாபம் என்று ஏகப்பட்ட படங்களை ஓட்டுகிறார் சரண்யா. 'என் புள்ளைக்கு கிரகம் சரியில்ல. ஆவணி வந்தா டாப்புல போய்டுவான்' என்று நம்பிக்கை காட்டுகிறாரே, அற்புதம்! பிள்ளைக்காக துபாயிலிருந்து வாங்கி வந்த லேப் டாப்பை வேஸ்ட்டா போச்சே என்று கோபத்தோடு விற்க முயலும் இளவரசுவிடம், சூழ்நிலை தெரியாமல் விமல் மாடு மேய்க்க போவதை சொல்லி சரண்யா சிலாகிக்கிற காட்சி கலகலப்பு கலவரம்ப்ப்பா வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கும் திருமுருகனின் ஓங்கு தாங்கான உடம்பு ஒன்றே போதும். அதையும் மீறி நடிப்பும் வருவதால் புதுமுக வரவில் தனிமுகம் காட்டுவார். காட்சிகளுக்கு தோதாக துண்டு துண்டாக எஸ்.எஸ்.குமரன் போட்டிருக்கும் சின்னஞ்சிறு பாடல்களும் பின்னணி இசையும் டாப் என்றால், டம்மா டம்மா பாடல் தனி அட்ராக்ஷன்! விருந்துக்கு பேர் போன தஞ்சையையே தலைவாழை இலையில் வைத்து பரிமாறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ். பாக்யராஜூக்கு பிறகு திரைக்கதையில் சென்ட்டம் அடித்திருக்கிற டைரக்டர் சற்குணத்தை 'மனசை திருடிய களவாணியே' என்று பாராட்டலாம். தப்பேயில்லை! -ஆர்.எஸ்.அந்தணன் http://www.tamilcinema.com/CINENEWS/...0/kalavani.asp |
|
07-03-2010, 03:33 PM | #31 |
|
|
|
07-03-2010, 09:15 PM | #32 |
|
Originally Posted by gurusaravanan Originally Posted by Sourav great... |
|
07-04-2010, 02:25 AM | #33 |
|
|
|
07-04-2010, 03:04 AM | #34 |
|
|
|
07-04-2010, 03:20 AM | #35 |
|
|
|
07-04-2010, 03:52 AM | #36 |
|
Kalavani Goes Topper Over Charts
When the most expected biggies disappoint us, we really keep ourselves away from the medium-and-low budget films. In all likelihood, the previous Friday’s release ‘Kalavani’ has made it through a similar way. The film opened up with lukewarm response with distributors not really jumping with joy over the collections during first weekend. But with film reviews and audiences’ feedback getting on more favorable, the crowds have gradually started thronging more for this film. In most of the theatres, the film was screened for a single show and from Monday onwards, they have been increased due to more crowds. Previously, it had happened with Vikram Kumar’s ‘Yaavarum Nalam’, Sasikumar’s ‘Nadodigal’ and Shankar’s ‘Eeram’. These films never had such intense expectations and got through slow picks at box office. Let’s hope the film makes through a commendable phase, thereby insisting producer Naseer to often make good quality films. http://www.top10cinema.com/news/5287...er-over-charts |
|
07-04-2010, 05:22 PM | #37 |
|
Kalavani Goes Topper Over Charts planning to watch this tomorrow |
|
07-05-2010, 06:38 AM | #39 |
|
|
|
07-05-2010, 06:42 AM | #40 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 2 (0 members and 2 guests) | |
|