Reply to Thread New Thread |
06-17-2010, 08:53 AM | #22 |
|
ராஜபார்ட் ரங்கதுரையை 37 வருடங்களுக்கு முன்பே வரவேற்றிருந்த போதிலும் மீண்டும் அதே ஆரவாரத்துடன் காண நேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்த முறை ஞாயிறு மாலை அரங்கிற்கு செல்ல நேரம் ஆகிவிட்டதால் வாசலில் நடந்த கோலாகலங்களை பார்க்க முடியவில்லை.
உள்ளே நுழையும் போது காயாத கானகத்தே டி.எம்.எஸ் குரலில் ஒலிக்க ஆரம்பித்தது. உயர்ந்த மனிதனுக்கு வந்ததை விட மிக அதிக கூட்டம் என்பதும் அது போல் அலப்பறையும் அதை விட அதிகம் என்பதும் பார்த்தவுடன் புரிந்து போனது. மேயாத மான் என்ற வரிகளுடன் நடிகர் திலகம் முகம் திரையில் தோன்ற இங்கே ஆவேசம் அணை உடைந்தது. யாரும் பாட்டை கேட்கவோ காட்சியை பார்த்திருக்கவோ முடியாது. அப்படி ஒரு கொண்டாட்டம். அந்நேரம் மேலும் மேலும் ஆட்கள் உள்ளே வர கொண்டாட்டத்தின் அளவு கூடியது. இந்த காட்சியை பார்க்கும் போதே நான் சந்தேகப்பட்டது போல படம் நிறுத்தப்பட்டு போலீசார் உள்ளே நுழைந்தனர். போலீசார் ஒருவர் ரசிகர் ஒருவரை வெளியே கூட்டி செல்ல இன்னொரு போலீஸ் திரைக்கு அருகில் வரை சென்று அங்கே இருந்தவர்களை விரட்டினார். படம் மீண்டும் தொடங்கப்பட்டது. சிறிது நேரம் உள்ளே இருந்தனர் காவல் துறையினர். ஆனால் யார் இருந்தால் என்ன மீண்டும் படம் ஆரம்பித்து நாளை நான் போகாமல் இருப்பேனோ என்று நடிகர் திலகம் நந்தனாராக மாறிப் பாடிய போது மீண்டும் அதிர ஆரம்பித்தது அரங்கம். இந்த காட்சியில் க்ளோஸ்-அப்பில் நடிகர் திலகம் வாயசைக்கும் காட்சி சுமார் இரண்டு நிமிடம் வரும், ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார்கள். கண்ணில் நீர் கட்டி நிற்க அது கன்னத்தில் வழியாமல் அவர் "பாடும்" திறன் இருக்கிறதே அதற்கு விழுந்தது தொடர்ச்சியான அப்ளாஸ். தங்கையின் திருமண நிச்சயம், தம்பிக்கு உஷா நந்தினியை பேசி முடிப்பது, ஸ்ரீகாந்த் வந்து கல்யாணம் என்று தெரிந்தவுடன் ஊரை விட்டு ஓடுவது, தங்கை ஜெயா கல்யாணம் என்று காட்சிகள் வேகமாக சென்றன. அடுத்த மிகப்பெரிய ஆரவாரம் ஒரு வசனக் காட்சிக்கு எழுந்தது. தங்கையின் கல்யாணத்திற்கு வாங்கின பணத்திற்காக நம்பியார் முன் தலை குனிந்து நின்று விட்டு கூடிய சீக்கிரம் தந்து விடுகிறேன் என வெளியேறும் சிவாஜியிடம் பணம் கொடுக்கலைன்னா கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்று சொல்லும் நம்பியாரிடம் எங்க குடும்பமே கம்பி எண்ணியிருக்கு. ஆனா அது இந்த தேசத்துக்காக என்று நடிகர் திலகம் சொல்லும் இடத்தில் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டர் கூரையில் எதிரொலித்தது. மதன மாளிகையில் பாடல் - சொல்லவும் வேண்டுமா? ஹம்மிங் ஆரம்பித்த உடன் எழுந்து விட்டனர் பிள்ளைகள். சுசீலா பல்லவி முடிக்க டி.எம்.எஸ் பல்லவி எடுக்கும் காட்சி. க்ளோஸ்-அப்பில் நடிகர் திலகம் புருவத்தை ஏற்றி கண்களை ஒரு சுழட்டு சுழற்றி பாட ஆரம்பிப்பார். காதை அடைக்கும் கைதட்டல். ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு போஸிற்கும் அதிலும் குறிப்பாக உஷா நந்தினி பாடிக் கொண்டிருக்க சற்றும் அசையாமல் ஆலிவ் கிரீன் சூட்-ல் சிலை போல் நிற்கும் நடிகர் திலகம், அப்படியே ஒரு ஸ்டைல் நடை நடந்து வந்து பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி என்று பாடும் போதெல்லாம் இங்கே உற்சாகம் பெருக்கெடுத்து ஓடியது. பாடல் முடியும் போது ஒரு பெருங்கூட்டமே திரைக்கு முன்னால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என குழுமி விட்டது. திரைக்கு முன்னால் பூமாரி பொழிந்தனர். நாடகக் கொட்டகை தீ வைத்து எரிக்கப்பட மீண்டும் அதே இடத்தில் நடத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடும் சிவாஜி வி.கே.ஆரிடம் மீண்டும் கொட்டகையை கட்டச் சொல்லுவர். அப்போது வி.கே.ஆர் நம்ம பட்டளாங்கள்ட்ட சொன்னா கொட்டகையை என்ன கோட்டையையே கட்டிடுவாங்க என சொல்லும் போதும் ஆரவாரம். [ஆனால் இதே வசனத்திற்கு 1973-ல் கிடைத்த வரவேற்பே தனி]. நாடக லைசன்ஸ் ரத்து, ரங்கதுரை கலக்டரிடம் அனுமதி வாங்குவது என்று காட்சிகள் போனது. தங்கை அண்ணன் வீட்டிற்கே திரும்பி வர ரங்கதுரையின் நண்பர் மகளுக்கே தங்கை கணவன் மணமகனாக போவது, அந்த திருமணத்திற்கு சிவாஜி செல்லும் காட்சி. நடிகர் திலகம் இந்தக் காட்சியில் பேசவே மாட்டார். சேரில் அமர்ந்து சசிகுமாரையே பார்த்துக் கொண்டிருப்பார். அந்த பார்வையின் தீட்சண்யம் திரையில் பார்பவர்களுக்கே மனதை துளைக்கும் என்றால் நேருக்கு நேர் அந்த கண்ணை பார்த்த சசிகுமார் எப்படி தவித்திருப்பார் என புரிந்துக் கொள்ளலாம். இதற்கும் பயங்கரமான வரவேற்பு. காத்திருந்து காத்திருந்த காட்சியும் வந்தது. சின்ன அண்ணனை பார்க்க வேண்டும் என்கிற தங்கை, அதற்காக தம்பியை தேடி வரும் அண்ணன், இவரை யாரென்றே தெரியாது என்று சொல்லும் தம்பி, சூழ்நிலை புரியாமல் அவரை பாட்டு பாடச் சொல்லும் தம்பியின் மாமனார், உள்ளம் தீப்பற்றி எரிய அதை மறைத்துக் கொண்டு டேபிள் டென்னிஸ் bat -ஐயே தாளக்கருவியாக்கி பாடும் ரங்கதுரை. கவியரசருக்கும், மெல்லிசை மன்னருக்கும், டி.எம்.எஸ்சிற்கும் இது அல்வா சாப்பிடுவது போல. நடிகர் திலகம் மட்டும் விட்டுக் கொடுப்பாரா என்ன? பல்லவியில் சோகத்தின் சாறு எடுப்பவர் சரணத்திற்கு நடுவில் வரும் தொகையறாவில் அதை கலப்பார். கையில் வைத்து காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றிமிக்க நாய்கள் உள்ள நாடு அந்நேரம் அந்த முகபாவம், அதில் தெரியும் சோகம் எப்படி சொல்வது? பார்வையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சிவசப்பட தொடங்குவர். சரணம் சட்டென்று வேகம் பிடிக்கும். ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே இங்கே உணர்ச்சி வேகம் பலமடங்காகியது. இரண்டாவது தொகையறா தங்கை என்னும் இளைய கன்று தாய் வீடு வந்ததென்று இப்போது ரசிகர்கள் எல்லாம் மறந்து திரையில் ஒன்றி போய் ஆரவாரிக்கிறார்கள். சரணம் ஆரம்பிக்கிறது. கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் தெரிகிறது. இந்த வரிகளின் போது ஸ்ரீகாந்த் மாடியில் நிற்க, மாடிப்படிகளில் குமாரி பத்மினி நிற்க அவருக்கு எதிராக நடிகர் திலகம். இடது பக்க முகம் மட்டும் தெரியும்படியான profile இங்கேயும் ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார்கள். ரசிகர்கள் தன்னை மறந்து ஆராவரிக்கிறார்கள். அது பாசமன்றோ இது வேஷமன்றோ என்று பாடி விட்டு மாடியில் நிற்கும் ஸ்ரீகாந்தை காண்பிக்க அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ என்ற வரிகளுக்கு பிறகு காமிரா கீழே இறங்கி வந்து நடிகர் திலகம் முகத்தில் வந்து நிற்க இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழையல்லவா என்று உச்சரிக்கும் போது அந்த முகத்தில் மின்னி மறையும் சோகமும் வருத்தமும் இயலாமையும் எல்லாவற்றையும் மீறி வரும் அழுகையையும் துண்டை வாயில் வைத்து அடக்கிக் கொண்டு மேற்கொண்டு பாட முடியாமல் தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான் என்று bat -ஐ வைத்து விட்டு அவர் ஓட்டமும் நடையுமாக செல்ல உணர்ச்சிக் கொந்தளிப்பு என்று சொல்வார்களே அதை அன்று நேரில் பார்த்தோம். அனுபவித்தோம். ஒரு சில நிமிடங்களுக்கு அரங்கம் ஆவேசத்தின் பிடியிலேயே இருந்தது. ஊருக்கு வந்து தங்கையிடம் பொய் சொல்லி விட்டு ஆனால் மனைவியிடம் உண்மையை மறைக்க முடியாமல் அவன் என்னை அவமானப்படுத்தியிருந்தாக் கூட பரவாயில்லை அலமேல்! ஆனால் யாருனே தெரியாதுன்னு சொல்லிட்டான் என்று குலுங்கும் ரங்கதுரை. உன்னதமான நடிப்பின் உச்சக்கட்டத்தை பார்த்த நிறைந்த மனதுடன் நாங்கள் அரங்கை விட்டு வெளியே வந்தோம். ஹாம்லெட்யும் பகத்சிங்கையும் திருப்பூர் குமரனையும் பார்க்க வேண்டும் என்று மனது ஆசைப்பட்டாலும் சூழ்நிலை காரணமாக வந்து விட்டோம். மீண்டும் ஒரு மறக்க முடியாத அனுபவம். அன்புடன் |
|
06-18-2010, 06:37 AM | #23 |
|
முரளி சார் சொன்னா அந்த முக்கண்ணன் - இங்கே சிவாஜி என பொருள் கொள்க - சொன்ன மாதிரி. நம் அனைவரையும் இலவசமாக பாலாஜி திரையரங்கிற்கு அழைத்துச் சென்று விட்டார். சூப்பர் முரளி சார், எங்கிருந்து தான் தங்கள் பேனாவிற்கு மட்டும் இவ்வளவு சக்தி வருகிறதோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
அனைத்து ரசிகர்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கலைஞருக்குப் பாராட்டு விழாவும் பங்கேற்கும் அறிஞருக்குப் பாராட்டு விழாவும் சென்னை ருஷ்யக் கலாச்சார மையம் சார்பில் 21.06.2010 அன்று மாலை 6.00 மணியளவில் சோவியத் கலாச்சார அரங்கில் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்க உள்ள ருஷ்ய அறிஞர் அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி மற்றும் லீனா ஆகியோர் பாராட்டப் பெற உள்ளனர். பாராட்டும் மேதகையோர் முனைவர் டி.எஸ். நாராயணசாமி மற்றும் முனைவர் ராஜலக்ஷ்மி ஆகியோர். விழாவில் நடிகர் திலகத்தின் நினைவலைகள் என்ற தொகுப்புப் படம் திரையிடப்படும். இதில் பல்வேறு வகையான தமிழ் நடைகளில் நடிகர் திலகத்தின் உரையாடல் இடம் பெற்ற காட்சிகள் திரையிடப் படும். திரைப்படத்தினைத் தொகுத்து வழங்குபவர் இயக்குநர் கா. பரத் அவர்கள். இவர் நடிகர் திலகத்தை தொலைக்காட்சிக்காக இயக்கிய ஒரே இயக்குநர் ஆவார். நிகழ்ச்சி 6.15 முதல் 8.30 வரை அனைத்து ரசிகர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்சசி இது. ராகவேந்திரன். |
|
06-18-2010, 09:52 AM | #24 |
|
திருப்பூருக்கு அருகே உள்ள வெள்ளக்கோவில் என்கின்ற ஊரில் இருக்கும் வீரகுமார் திரையரங்கில், நேற்று 16.6.2010 புதன்கிழமை முதல், தினசரி 4 காட்சிகளாக, காலத்தை வென்ற காதல் காவியமான வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை" வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.
இந்த இனிய தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.வி.நாகராஜன் அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள்! அன்புடன், பம்மலார். |
|
06-19-2010, 10:32 PM | #26 |
|
A News Clipping from The Times Of India, Chennai Edition Dated 17.6.2010.
http://pammalar.webs.com/apps/photos...otoid=87318865 Clipping Courtesy : Hubber Mr.K.Chandrasekaran, President, Nadigar Thilagam Sivaji Samooganala Peravai. Regards, Pammalar. |
|
06-20-2010, 12:22 AM | #27 |
|
கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக, கோவை மாவட்ட சிவாஜி பறக்கும் படையும், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையும் இணைந்து ஒரு சிவாஜி சிறப்பு மலரை வெளியிட உள்ளனர். அதனைப் பற்றிய ஒரு அறிவிப்பாக கொடுககப்பட்டுள்ள Publicity Pamphlet (பப்ளிசிடி ஃபாம்ஃப்லெட்/விளம்பரப் பிரசுரம்):
http://pammalar.webs.com/apps/photos...otoid=87327869 இதனை எமக்கு அனுப்பிய எமது இனிய நண்பரும், கோவை மாவட்ட சிவாஜி பறக்கும் படைத் தலைவரும், கோவை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவருமான திரு.எம்.ராஜ்குமார் அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்! நடிகர் திலகம் சிறப்பு மலர், சிறந்த முறையில் இனிதே மலர, நமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! அன்புடன், பம்மலார். |
|
06-20-2010, 02:16 AM | #28 |
|
அன்னை இல்லத்தின் வரசித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேகம் : புகைப்பட ஆல்பம்
http://www.cinefundas.com/2010/06/18...hoto-gallery-2 அன்புடன், பம்மலார். |
|
06-21-2010, 06:30 PM | #29 |
|
I think this separate thread's name should be change instead of Nadigarthilagam's current screening films - something like Nadigarthilagam's current news or current info is suitable. Because, other than current screening films, so many news are came here under the thread. This is my humble suggestion. Thanks to Pammalar for posted TOI, Kovai news and Annai Illam Vinayagar Temple Kumbabishekam coverage.
|
|
06-28-2010, 05:08 AM | #30 |
|
|
|
07-03-2010, 11:53 AM | #31 |
|
"ஹரிச்சந்திரா" அசுர சாதனை படைத்த தாராசுரம் சூரியகாந்தி டூரிங் டாக்கீஸில், இன்று 2.7.2010 வெள்ளி முதல், தினசரி 2 காட்சிகளாக, தங்கத்தமிழ்ப் பெருமகனின் "தங்கப்பதுமை" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகிறது.
தித்திக்கும் இச்செய்தியை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு கற்கண்டு நன்றிகள்! அன்புடன், பம்மலார். |
|
07-07-2010, 04:34 AM | #32 |
|
ஹரிச்சந்திராவை மிஞ்சி தங்கப்பதுமை தன்னிகரற்ற சாதனை
தாராசுரத்தில் உள்ள சூரியகாந்தி டூரிங்கில், தங்கத்தமிழ்ப் பெருமகனின் "தங்கப்பதுமை" திரைக்காவியம், "ஹரிச்சந்திரா"வின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. தங்கப்பதுமை திரைக்காவியத்தை 2.7.2010 வெள்ளியன்று, மாலை மற்றும் இரவு காட்சிகளில் சற்றேறக்குறைய 250 பேர் கண்டு களித்தனர். 3.7.2010 சனிக்கிழமையன்றும், இந்த இரண்டு காட்சிகளில் இதே போல் சற்றேறக்குறைய 250 நபர்கள் தரிசித்து மகிழ்ந்தனர். இந்த இரு நாட்களிலும் தங்கப்பதுமை அள்ளித் தந்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம்). [ஒரு டிக்கெட்டின் விலை பத்து ரூபாய்] 4.7.2010 ஞாயிறு மாலைக் காட்சி சாதனையின் உச்சம். அந்த ஒரு காட்சியில் மட்டும் சற்றேறக்குறைய 500 பேர் இக்காவியத்தைக் கண்டு களித்துள்ளனர். அந்த ஒரு காட்சி மட்டும் அள்ளி அளித்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம்). அன்று இரவுக் காட்சியையும் சற்றேறக்குறைய் 100 நபர்கள் கண்டு களித்துள்ளனர். இரவுக் காட்சி மொத்த வசூல் சற்றேறக்குறைய ஓராயிரம் ரூபாய். வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புடன் வெளியான தங்கப்பதுமை, பெயரில் மட்டுமன்றி வசூலிலும் தங்கப்பதுமையே எனக் கட்டியம் கூறியதால், நேற்று 5.7.2010 திங்களன்றும் நான்காவது நாளாக இமாலய சாதனை படைத்தது. மாலைக் காட்சியை சற்றேறக்குறைய 400 பேர் கண்டு களித்தனர். இரவுக் காட்சிக்கும் சற்றேறக்குறைய 100 பேர் இருந்திருக்கின்றனர். நான்கு நாட்களில், தாராசுரம் சூரியகாந்தி டூரிங்கில், தங்கப்பதுமை அள்ளித் தந்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ. 16,000/- (ரூபாய் பதினாறாயிரம்). ஐந்தாவது நாளாக, இன்று 6.7.2010 செவ்வாய்க்கிழமையும் தங்கப்பதுமை வெற்றி நடை போட்டு விண்ணை முட்டுகின்ற சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே! இச்சாதனைத் தகவல்களை அளித்த ரசிக நல்லிதயம் திரு.குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு பற்பல நன்றிகள்! பெருமிதத்துடன், பம்மலார். |
|
07-07-2010, 06:44 AM | #33 |
|
சுவாமி,
மிக அருமையான செய்தி. காலம் காலமாக சில வகை பேச்சுக்கள் உண்டு. நடிகர் திலகத்தின் படங்கள் ஓடுவதை,ஓடியதை சிலர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அப்படியே ஒப்புக் கொண்டாலும் A சென்டர்களில் மட்டுமே ஓடும் என்பார்கள். நடிகர் திலகத்தின் படங்களுக்கு இது போன்ற A B C சென்டர்கள் வரம்பு கிடையாது. மாநகர, நகர, கிராமிய எல்லைகளை தாண்டிய வெற்றி அவருடையது என்பதற்கு அந்த காலத்தில் டூரிங் டாக்கீஸில் 100 நாட்கள் ஓடிய பாவ மன்னிப்பு உதாரணம் என்றால், இன்றும் அவர் சாதனை மன்னன் என்பதற்கு ஹரிச்சந்திரா, தங்கப்பதுமை போன்ற படங்களின் வெற்றி ஒரு எடுத்துக்காட்டு. தாராசுரம் மக்களுக்கும் நன்றி, தங்களுக்கும் நன்றி. அன்புடன் |
|
07-17-2010, 04:43 AM | #35 |
|
VINTAGE HERITAGE, a film club to promote vintage Tamil cinema and music, is screening Nadigar Thilagam's ever green movie, "Koteeswaran", on Sunday 25th July, 2010, at Vivekananda Hall, P.S. High School, Ramakrishna Mutt Road, Mylapore, Chennai-4. Time: 6.30 p.m. For details contact: 9444047714.
Raghavendran |
|
07-18-2010, 09:35 AM | #36 |
|
தங்கப்பதுமையின் தொடர் வெற்றி பவனி
தாராசுரம் சூரியகாந்தி டூரிங்கில், "தங்கப்பதுமை" திரைக்காவியம், 2.7.2010 வெள்ளி முதல் 5.7.2010 திங்கள் வரை, 4 நாட்களில், தினசரி 2 காட்சிகளாக, ரூ.21,000/- (ரூபாய் இருபத்து ஒன்றாயிரம்) மொத்த வசூல் செய்து இமாலய வெற்றி அடைந்ததையும், 6.7.2010 செவ்வாயன்று 5வது நாளாக தொடர்ந்து வெற்றி நடை போட்டு விண்ணை முட்டும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்ததையும் யாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். ஐந்தாவது நாளான 6.7.2010 செவ்வாயன்று 300 நபர்களும், ஆறாவது கடைசி நாளான 7.7.2010 புதனன்று 200 நபர்களும் தங்கப்பதுமையை தரிசித்துள்ளனர். ஆக மொத்தம் 6 நாட்களில், தாராசுரம் சூரியகாந்தி டூரிங்கில், தங்கப்பதுமை, மொத்தம் ரூ.26,000/- (ரூபாய் இருபத்து ஆறாயிரம்) கலெக்ஷன் செய்து, தங்க மழை போல் வசூல் மழை பொழிந்துள்ளது. இந்நிகழ்வு விண்ணைத் தொடும் சாதனை. இதன் பின்னர், இதே தங்கப்பதுமை திரைக்காவியம், 8.7.2010 வியாழன் முதல் அருகிலுள்ள மயிலாடுதுறை (மாயவரம்) சுந்தரம் திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு, 14.7.2010 புதன் வரை ஒரு வாரம் ஓஹோவென்று ஓடி வெற்றி வாகை சூடியுள்ளது. [மயிலாடுதுறை சுந்தரம் அரங்கில் டிக்கெட் விலை ரூ.15/- மற்றும் ரூ.20/-] விரைவில், தாராசுரம் சூரியகாந்தி டூரிங்கில், தங்கத்தமிழ்ப்பெருமகனின் "என் மகன்". இத்தகவல்களை அள்ளி வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள்! பெருமிதத்துடன், பம்மலார். |
|
07-21-2010, 04:31 AM | #37 |
|
|
|
07-22-2010, 03:10 AM | #38 |
|
பொன் விழாக் காணும் சென்னை சாந்தி திரையரங்கில் வரும் 23.7.2010 வெள்ளி முதல், புதுமை வேந்தரின் "புதிய பறவை". Paying homage to our Nadigar Thilagam on his 9th anniversary can never get better than this. Heart felt thanks to the organizers and to the good souls who have made this happen. |
|
07-26-2010, 09:35 AM | #39 |
|
தன்னிகரற்ற சாதனை, சாந்தியில் புதிய பறவை வெற்றி முழக்கம்.
இன்று மாலை 25.07.2010 சென்னை சாந்தியில் அரங்கு நிறைவு HOUSE FULL . காணக் கண்கோடி வேண்டும் என்ற மொழிக்கு இன்றைய சாந்தி திரையரங்கின் நிகழ்வுகளே சரியான சான்று. பெங்களூரு ரசிகர்கள் அசத்தி விட்டார்கள். மாலை என்றால் அப்படி யொரு மாலை. விரைவில் காட்சிப் படங்கள் பதிவேற்றப்படும் போது காணுங்கள். நாடி நரம்பெல்லாம் புகுந்து ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார் நடிகர் திலகம். உணர்ச்சி மயமாகாத ரசிகர்கள் இல்லை எனலாம். பகல் காட்சியில் கிட்டத் தட்ட 500 இருக்கைகளும் மாலைக் காட்சியில் அனைத்து இருக்கைகளும் நிறையும் அளவுக்கு ரசிகர்கள் திரண்டது மட்டுமல்ல. மேள தாளத்துடன் ஊர்வலமாய் மாலையை எடுத்துச் சென்று அண்ணாசாலையே குலுங்கும் அளவிற்கு ஆர்ப்பரிப்பு செய்து விட்டனர். காவல் துறையினர் வந்து குவியும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம், பேருந்து உட்பட அனைத்து வாகனங்களில் பயணித்தோர், சாலையில் சென்றோர் அனைவரும் வியந்து சொன்ன வார்த்தை - "சிவாஜி படத்துக்கு கூட்டம் பாரேன், அதுவும் பழைய படத்துக்கு" என்பதே அனைவரின் உதடுகளும் உள்ளமும் உச்சரித்த வார்த்தைகள். சாந்தியில் உள்ளே வைக்கப் பட்டிருந்த கட்அவுட்டுக்கு செலுத்தப் பட்ட மாலைகளின் எண்ணிக்கை கிடடத்தட்ட 15க்கும் மேல். பிரம்மாண்டமான பெரிய மாலையை மேலே ஏற்ற தேவைப்பட்ட கரங்களின் எண்ணிக்கை மட்டுமே 100க்கும் மேல் இருக்கும். பாண்டு வாத்தியம் முழங்க பெங்களூரு, புதுவை, கடலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து திரண்ட ரசிகர்களின் ஆரவாரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கண்களில் நிழலாடும். உள்ளேயோ கேட்கவே வேண்டாம். அதுவும் எங்கே நிம்மதி பாடலுக்கு எழுப்பப் பட்ட உணர்ச்சி மயமான கரவொலிகளும் கோஷங்களும் படம் இன்று தான் புதியதாக வெளியானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தியது. தொடரும் பதிவுகளில் விரிவாக நம் அனுபவங்கள்... அன்புடன் ராகவேந்திரன் |
|
07-28-2010, 01:03 AM | #40 |
|
PUDHIYA PARAVAI @ SHANTHI
Nadigar Thilagam Dr. Chevalier Sivaji Ganesan reversed the needles of the clock in his inimitable style and took each and every one of us who were present there @ Shanthi theatre last Sunday evening, back to 1964. In the recent past, I have gone to see the re-releases of Thangappadakkam, Engal Thanga Raja and Pasa Malar and I’ve enjoyed it immensely, as I’ve said here already. But this event was an entirely amazing experience for me. It was non-stop excitement, fun and emotional outburst all the way. It was very much heart-warming and touching to see the hard core, die-hard elderly fans, most of them in their late 50’s and early 60’s, dancing, jumping, hugging each other, getting emotional now and then and shouting slogans. a BIG SALUTE to all of them Group of fans, in fairly large numbers, came down all the way from Bangalore and Pondicherry in vans, exclusively for this great occasion. Pammalar introduced a person who has come from Cuddalore only to take part in this historic event. The theatre wore a festive look with lots and lots of posters, banners & cut-outs of NT all over the place. In the main entrance there was a huge cut-out which was beautifully decorated with garlands ( thanks to Pammalar sir & Raghavendra sir for the clippings and links ). On Sunday, I went to the theatre at about 4.30 p.m. and it was at that time the Bangalore fan group was bringing in the huge garland in a sort of procession style, accompanied by a local band group. The garland is said to weigh around 300 kgs and the length would approximately be 35-45 feet. While the fans enthusiastically began to tie the huge garland around the big cut-out, the band was playing NT’s hit songs (mostly Ennadi Rakamma) while another fan group was bursting 10,000 wallah’s. Around 6 pm, “ SHANTHI HOUSE FULL “ board was kept near the main entrance. The fans felt very proud and you can see a very contended smile of their face. (to be continued ) |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 4 (0 members and 4 guests) | |
|