DiscussWorldIssues - Socio-Economic Religion and Political Uncensored Debate

DiscussWorldIssues - Socio-Economic Religion and Political Uncensored Debate (http://www.discussworldissues.com/forums/)
-   Bollywood (http://www.discussworldissues.com/forums/bollywood/)
-   -   Jayabharathy's puthran (http://www.discussworldissues.com/forums/bollywood/127570-jayabharathys-puthran.html)

TorryJens 05-03-2011 02:09 AM

Jayabharathy's puthran
 
சமீபத்தில் ஜெயபாரதி அவர்களின் புத்ரன் படம் காணும் வாய்ப்பு கிடைத்தது. பல ஆண்டுகளாக திரைப்படங்களை பார்க்காமல் இருந்தவன் நான். நடிகர் திலகத்தின் பழைய படங்களை மட்டும் திரையரங்குகளில் கண்டு வந்தேன்.
சமுதாயத்தில் நிலவும் பிரச்னைகளில் ஒன்றான குழந்தை கடத்தலைப் பற்றிய கருவை எடுத்துக் கொண்டு மிகவும் உணர்ச்சிமயமாகவும் அதே சமயம் நேரடியாகவும் கதையை விளக்கி இருந்தார் இயக்குநர். 2010லேயே தயாரான படம் இன்னும் திரையரங்கினைக் காணவில்லை. ஆனால் உள்ளத்தை நெகிழ வைக்கும் வகையில் சங்கீதா அவர்கள் தாய்மையை சித்தரித்திருந்தார்கள். அதே சமயம் தாயையும் சமாளித்து தனயனைத் தேடும் போராட்டத்திலும் ஈடுபட்டு அத்தனை பிரச்சினைகளிலும் சமுதாயத்தின் மேல் அக்கறையும் கொண்ட கடமையுணர்வுள்ள தந்தையாக திரு ஒய்.ஜி. மகேந்திரா அவர்கள் திறம்பட நடித்துள்ளார். நடிகர் திலகத்தின் பாதிப்பு அவருக்குள் ஆழமாய் ஊடுருவியுள்ளதால் மிகவும் எளிதாக அதே சமயம் ஆழமாய் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அவருடைய நடிப்பு அமைந்துள்ளது. அவர்களின் மகனாக வரும் மாஸ்டர் வருண் தன் முகத்தை நம்முள் ஆழப் பதித்து விடுகிறான்.
நீண்ட நாட்களுக்குப் பின் சிறந்த படத்தைப் பார்த்த நிம்மதி மனதுக்கு ஏற்பட்டது.
அப்படத்தினைப் பற்றிய ஓர் ஒளிக்காட்சி.



அன்புடன்
ராகவேந்திரன்


All times are GMT +1. The time now is 06:28 PM.

Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2025, vBulletin Solutions, Inc.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2