Reply to Thread New Thread |
10-29-2005, 08:00 AM | #1 |
|
|
|
11-30-2005, 08:00 AM | #2 |
|
முரளி சார்!
வாங்க! உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக தமிழ் சினிமா பல்வேறு காலகட்டங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருகிறது என்பதை எங்களை விட அதிகம் அறிந்தவர் நீங்கள். சுதந்திரத்துக்கு முந்தைய தமிழ் சினிமா , திரைப்படத்துறையில் திராவிட இயக்கங்களின் ஆதிக்கம் ,ஆன்மீகம் , பெண்ணுரிமை ,தேசபக்தி , சாதி மதக் கூறுகள் ,குடும்ப உறவுகள் ,தனிமனித உணர்வுகள் ,சமுதாய பார்வை ,காதல் ,வீரம் போன்றவற்றில் தமிழ் சினிமா ஏற்படுத்திய தாக்கம் குறித்து உங்கள் கருத்துக்களை தாருங்கள் |
|
06-08-2006, 08:00 AM | #3 |
|
|
|
08-22-2006, 08:00 AM | #4 |
|
|
|
02-12-2008, 08:28 PM | #5 |
|
தமிழ் சினிமா பற்றிய இந்த விவாத களத்தில் பொதுவாக நடிகர் ,நடிகைகள் ,இயக்குநர்கள் ,இசையமைப்பாளர்கள் ..அவர் பெரிதா இவர் பெரிதா என்பவை போன்ற விவாதங்களே நடக்கின்றன ..ஒட்டுமொத்த தமிழ் சினிமா குறித்த விவாதங்கள் அரிதாகவே இருக்கிறது.
பொதுவாக சினிமா என்பதே ஒரு பொழுது போக்கு ஊடகம் .அதற்கு எந்த அளவு சமுதாய பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்ற பொதுவான விவாதம் தேவையான ஒன்று. * தமிழ் சினிமா என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமே ,எனவே அதற்கு சமுதாயப் பொறுப்பு தேவையில்லை என யார் கருதுகிறீர்கள்? * இல்லை ,பொழுது போக்காக இருந்தாலும் அதற்கு குறைந்த பட்ச சமுதாய பொறுப்பு இருக்க வேண்டும் என யார் கருதுகிறீர்கள் ? * அவ்வாறு சமுதாய பொறுப்பு தேவையென்றால் பொழுதுபோக்கும் சமுதாய பொறுப்பும் எந்த விகிதத்தில் இருக்க வேண்டும் ? * இதுவரை தமிழ்சினிமாவில் சமூக மாற்றம் ,மதம் ,அரசியல் ,பெண்ணுரிமை ,குடும்பம் ,உறவுமுறைகள் ,சமுதாய பொறுப்பு குறித்து சொல்லப்பட்ட கருத்துக்கள் எவை ..அவை தேவையா ? போதுமான அளவு உள்ளதா அல்லது தேவைக்கு அதிகமாக உள்ளதா ? * தமிழ் சினிமா தமிழ் மக்களின் சமூக வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது ? இது பற்றி விவாதிக்கலாமா? |
|
02-12-2008, 08:53 PM | #9 |
|
மிக நல்ல தலைப்பு ஜோ.
அவசியம் விவாதிக்கப் படவேண்டிய தலைப்பு. பொதுவாக பொறுப்பு கலைக்கு அவசியமில்லை (பொறுப்பு இருப்பதால் பாதகமில்லை) என்பதே என் கருத்து. ஆனால் இந்த கருத்து கதை, கவிதையை பற்றி என்னால் சொல்ல முடிகிறதே தவிற, தமிழ் சினிமா பற்றி அவ்வளவு எளிதாக சொல்ல முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதற்கு காரணம் அதன் அபாரமான வீச்சு. சமூகம், அரசியல் என்று பல தளங்களில் இதன் வீச்சு பல சமயம் பிரமிப்பூட்டுவதாகவும், பல சமயம் கூச்சப்பட வைப்பதாகவும் இருக்கிறது. (இந்த மையத்தில் நடக்கும் பல தீவிரமான விவாதங்களே இதற்கு சான்று !) தாக்கம் அதிகமாக இருக்கும் ஊடகம் என்பதாலேயே அதை கையாள்பவர்களிடத்தில் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக இருக்கிறது. நமது புரிதல்களும், தேடல்களும், ரசனையும் பெரும்பாலும் சினிமாவால் செதுக்கப்படுகிறது. அவற்றைத் தாண்டி வருவதைற்கு ஒரு முயற்சியே செய்ய வேண்டி இருக்கிறது. அதனால், எனது அபிப்ராயத்தில், விவாதத்துக்கு முன்னால் நாம் பதில் தேட வேண்டிய ஒரு கேள்வி. தமிழ் சினிமாவில் வீச்சு இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதே. உலகத்தில் எந்த இடத்திலும் இந்த அளவு இல்லை என்றே நான் நினைக்கிறேன். நிச்சயமாக சினிமாவின் தரத்தினால் அல்ல இரு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் பத்து நிமிடத்தில் சினிமா பக்கம் பேச்சு திரும்புவது ஏன் ? வேறு கலை இலக்கிய தேடல்கள் இல்லாமல் வெற்றிடமாக இருக்கின்றனவா. (சமீபத்தில் ஒரு திரியில் நீங்கள் சொன்னது போல, அருகில் உள்ள கேரளாவில் 'படிப்பவர்கள்' இருக்கிறார்கள்). ஆரம்பத்திலிருந்தே இவ்வாறு தான் இருந்ததா ? இடையில் ஏற்பட்ட மாற்றமா ? இதைப் பற்றி பேசுபவர்கள்/எழுதுபவர்கள் எல்லாருமே ஒரு கீழ்நோக்குப் பார்வையுடன் பேசுகிறார்கள். "ஏ பூச்சிகளே....நீங்கள் எல்லாம் புறநானூறு படிக்காமல் பில்லா பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்ற ஒரு அறிவுஜீவி தொனியில். அது இல்லாமல் விவாதிக்க இது சரியான தளமக இருக்கும் என்று நினைக்கிறேன். இது நம்மைப் பற்றி புரிந்துகொள்வத்ற்கான முயற்சி. |
|
02-12-2008, 09:22 PM | #11 |
|
தமிழ் சினிமாவில் வீச்சு இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதே. தமிழ் மொழிக்கு ஒரு சிறப்பு உண்டு ..வெகுகாலமாக தமிழர்கள் மொழியையே மூன்றாக பிரித்து இயல் ,இசை ,நாடகம் என முத்தமிழ் என வழங்கி வருகிறார்கள் . பல்வேறு இனக்கூறுகளுக்கும் தொன்று தொட்ட கலைவடீவம் இருப்பது போல ,தமிழர்களுக்கு கூத்துக்கலை அமைந்திருக்கிறது ..தமிழகத்தின் கோவில் நிகழ்ச்சிகளில் கூட தொன்று தொட்டு கூத்து ஒரு முக்கிய அங்கமாக இருந்திருக்கிறது ..எதையும் கதை வடிவில் கலையாக வெளிப்படித்தியிருக்கிறார்கள் தமிழர்கள் ..கூத்து கால மாற்றத்தில் நாடகம் ஆகி இப்போது விஞ்ஞான வளர்ச்சி காலத்தில்ல் சினிமாவாக வந்து நிற்கிறது. ஆக இந்த கலைவடிவத்தில் பங்கு கொண்டவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த கலையை வெளிப்படுத்தி (இலக்கியம் போலல்லாமல்) மக்களிடையே பரிச்சையமும் புகழும் பெற்றார்கள் ..பின்னர் நாடகம் வந்த போதும் நாடகக் கலைஞர்களை அவர்கள் புகழுக்குரியவர்களாக கருதினார்கள் .. அதுவே இன்று திரைப்படம் வரை நீள்கிறது என நினைக்கிறேன். |
|
02-12-2008, 09:33 PM | #13 |
|
இதைப் பற்றி பேசுபவர்கள்/எழுதுபவர்கள் எல்லாருமே ஒரு கீழ்நோக்குப் பார்வையுடன் பேசுகிறார்கள். "ஏ பூச்சிகளே....நீங்கள் எல்லாம் புறநானூறு படிக்காமல் பில்லா பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்ற ஒரு அறிவுஜீவி தொனியில். |
|
02-12-2008, 10:03 PM | #14 |
|
தமிழ் சினிமா அல்லது எந்த சினிமாவும் மக்களுக்கு அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு ஊடகமே. அந்த ஊடகத்தின் வீச்சு அதன் ஆரம்ப காலங்களில் மிகவும் அதிகம். அந்த காலத்தில் சமூகக் கருத்துக்களைச் சொல்லும் போது அது நன்றாக மக்களை சென்றடைந்தது. கலைஞர்களும் புராண காலத்து சினிமாவில் இருந்து விலகி, சுதந்திர போராட்டம், சமூக கொடுமைகள், பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை இவற்றை, பொழுதுபோக்கு அல்லாமலும் கொடுத்து வெற்றியடைய முடிந்தது. மக்களுக்கு சினிமா பார்ப்பது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது. பார்த்த படத்தையே திரும்ப திரும்ப பார்க்கும் பழக்கம் அன்று நடிகர்களின் ரசிகர்களை தவிர, வெகுஜன மக்களிடமும் பெரிதும் ஓங்கி இருந்தது. ஆனால், இன்று அது மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது.
இன்று சினிமாவை விட மிகுந்த தாக்கத்தை தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது. அதன் வீச்சு நம்மை மலைக்க வைக்கிறது. சினிமாவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு, தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியை மக்கள் தொடர்ந்து கண் கொட்டாமல் பார்ப்பது அதன் ஆற்றலுக்கு நல்ல சான்று. சினிமா கூட தொலைக்காட்சியின் வழியாக வந்தால் தான் இன்று மிகுந்த வரவேற்ப்பைப் பெறுகிறது. இதனால், சமூகக் கருத்துக்களை மட்டுமே வைத்து பின்னப்படும் படங்களும், அல்லது மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுக்கப் படும் திரைப்படங்களின் வெற்றியும், அதன் பொழுதுபோக்கு அம்சத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது. மக்களின் ரசனையும், சினிமா குறித்த எண்ணங்களும் மாறிவிட்டன. ஒரு கருத்து கூட நேரடியாகச் சொல்லப்படாமல், கதையின் ஓட்டத்துடன் சொன்னால்தான் எடுபடுகிறது அல்லது எதிர்பார்த்த தாக்கத்தைப் பெறுகிறது. இவை இல்லை என்றால், வெறும் ஆவணப்படங்களாக சித்தரிக்கப்பட்டு அவை ஒடுக்கப்படுகின்றன. மக்களை சென்றடைவதில் சினிமாவும், தொலைக்காட்சியும் பின்னிப் பிணைந்து சென்றாலும், இறுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமே தாக்கத்தை ஏற்படித்துகின்றன அல்லது மக்களைக் கட்டிப்போடுகின்றன. எனவே, சினிமாவில் சொல்லவரும் கருத்து, வெறும் பொழுதுபோக்காக ஒதுக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், ஏற்படும் பாதிப்புகள் மற்ற ஊடகங்களை விட குறைவே என்பது எனது கருத்து. ஆனால், குறைந்த பட்ச பொறுப்புண்ர்வு தமிழ் சினிமாவுக்குத் தேவை. ஆனால், அதை இதில் எதிர்பார்ப்பது *கானல் நீரைப் பார்த்து* தாகம் தீர்ப்பது போன்றது. சினிமாவை விட, இன்று தொலைக்காட்சிக்கு சமூகப் பொறுப்புணர்வு தேவை என்பது எனது கருத்து. |
|
02-12-2008, 10:07 PM | #15 |
|
இன்று சினிமாவை விட மிகுந்த தாக்கத்தை தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது. அதன் வீச்சு நம்மை மலைக்க வைக்கிறது. சினிமாவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு, தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியை மக்கள் தொடர்ந்து கண் கொட்டாமல் பார்ப்பது அதன் ஆற்றலுக்கு நல்ல சான்று. So, where are we going? What are we gonna do about ftv, mtv, and other channel oriented rubbish which we watch? We cant stop them. The solution is to STOP EXPECTING ethics from media |
|
02-12-2008, 10:10 PM | #16 |
|
|
|
02-12-2008, 10:10 PM | #17 |
|
//தமிழ் சினிமா அல்லது எந்த சினிமாவும் மக்களுக்கு அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு ஊடகமே. அந்த ஊடகத்தின் வீச்சு அதன் ஆரம்ப காலங்களில் மிகவும் அதிகம்.//
செல்வா, வெறெங்கும் இல்லாத அளவுக்கு ஒரு பொழுது போக்கு ஊடகம் 4 அல்லது 5 முதல்வர்களை தந்திருக்கிறது என்பதை கணக்கிலெடுத்துக்கொண்டால் ,மக்கள் இதை வெறும் பொழுது போக்காக கருதுகிறார்கள் என நினைக்கிறீர்களா ? அல்லது முன்பு மக்கள் அதை வெறும் பொழுது போக்கு என கருதவில்லை ,ஆனால் இப்போது நிலமை மாறிவிட்டது என கருதுகிறீர்களா?? |
|
02-12-2008, 10:14 PM | #19 |
|
Originally Posted by selvakumar இன்று சினிமாவை விட மிகுந்த தாக்கத்தை தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது. அதன் வீச்சு நம்மை மலைக்க வைக்கிறது. சினிமாவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு, தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியை மக்கள் தொடர்ந்து கண் கொட்டாமல் பார்ப்பது அதன் ஆற்றலுக்கு நல்ல சான்று. So, where are we going? What are we gonna do about ftv, mtv, and other channel oriented rubbish which we watch? We cant stop them. The solution is to STOP EXPECTING ethics from media FTV, MTV endru podhuvaga English channels mattum kurippidadheenga .... plz include Manada mayilada, mastana mastana, jodi no. 1 pondra thamizh kalacharavadhigalin tholaikkatchi nigalchigalayum serthukkunga |
|
02-12-2008, 10:17 PM | #20 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 2 (0 members and 2 guests) | |
|