|
![]() |
#1 |
|
பெண்ணே உனக்காக
பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பெண்களுக்கான நிகழ்ச்சி "பெண்ணே உனக்காக.'' ஒரு பெண் வாழ்க்கையில் பல வகையில் பரிணமிக்கிறாள். அதோடு அவள் உடல் நலத்தோடு திகழும்போது அப்பெண் மட்டும் நலமாக இருக்கிறாள் என்றில்லை. அந்தப் பெண்ணை சார்ந்திருக்கும் சுற்றத்துக்கும் அது பயனுள்ளதாக அமைகிறது. பெண்களுடைய உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே உடல்நலக்குறைவு வராமல் காத்துக்கொள்ள முடியும். அதை உறுதிப்படுத்தும் விதத்தில் பிரபல மகப்பேறு மருத்துவர் `ஜெயம்' கண்ணன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளக்கம் அளிக்கிறார். |
![]() |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|