|
![]() |
#1 |
|
தேனினும் இனிய நம் தமிழ் மொழியினை செவியில் பருகும் இன்பத்தை இன்றைய இளைய தலைமுறையினர் பலர் உணராத இந்த காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேச்சுக் கலைக்கொரு களத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்கள்.
இளைய தலைமுறை ஆண்களும் பெண்களும் அருந்தமிழில் தங்கள் பேச்சுத் திறமையை வெளிக்காட்ட போட்டி போட்டுக் கொண்டு வந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கும் செய்தி. நெல்லைக் கண்ணன் மற்றும் கவிஞர் அறிவுமதி ஆகிய தகுதியான தமிழறிஞர்கள் நடுவர்களாக இருக்கிறார்கள். வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளே எடுபடும் என்ற பரவலான கூற்றை பொய்யாக்கி இந்த நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். விஜய் தொலைக்காட்சிக்கு பாராட்டுக்களும் நன்றியும்! ![]() |
![]() |
Currently Active Users Viewing This Thread: 3 (0 members and 3 guests) | |
|