|
![]() |
#1 |
|
Suryavamsam - Title song
சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி என பல வெற்றித் தொடர்களை தந்த ராடான் நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடர், சூர்யவம்சம். இது சன்டிவியில் வருகிற திங்கள் முதல் தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. நகரத்து இளைஞன் ஒருவனால் ஏமாற்றப்படும் கிராமத்துப் பெண், வீட்டை விட்டு வெளியேறி தன்னை ஏமாற்றிய இளைஞனைத் தேடி நகருக்கு வருகிறாள். அங்கு அவள் படும் இன்னல்களைத்தாண்டி அந்த இளைஞனை அவள் கண்டுபிடித்தாளா என்பதுதான் கதை. கதையில் வரும் கிராமத்து பகுதிகளை தற்போது பொள்ளாச்சி பகுதியில் வெகு வேகமாக படம்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஸ்ரீபிரியாவின் கதைக்கு ராஜ்பிரபு திரைக்கதை அமைக்க, சுரேஷ் கிரிஸ் வசனம் எழுதுகிறார். இந்த தொடரை ஏ.பி.ராஜேந்திரன் இயக்குகிறார், இசை மணிசர்மா. நடிகர்கள்: வின்சன்ட் ராய், மீரா வாசுதேவன், ஸ்ரீனிவாஸ், கண்ணன், சாந்தி ஆனந்த். |
![]() |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|