For those who can read Tamil and have not read my post in எண்ண அலைகள். நல்லதையே பேசுவோம்! ஒரு முறை மூவர் தவமிருந்து, இறைவனை ஒரு வரம் கேட்க மிகவும் விழைந்தனர். அந்த பக்தியை மெச்சி, இறைவன் தரிசனம் தந்திட, யுக்தியுடன் ஒரு சேர, ஒரே வரம் கேட்டனர். எதிரில் உள்ள குளம், தாம் எண்ணுவதாகவே, அதனுள் குதித்ததும் மாறிட வேண்டிக் கொள்ள, 'அவ்வாறே ஆகட்டும்' என இறைவன் மறைய, அப்போதே தமது சோதனையை ஆரம்பித்தனர். முதல் மனிதன், குளம் ஆடைகளாகிட வேண்டி, அதில் குதிக்க, பல வண்ண ஆடைகள் நிரம்பின! ஆடைப் பிரியனான அவன், அத்தனையும் தானே ஆவலுடன் அணிய எடுத்துச் செல்ல, அடுத்தவன் மனைவி அணிகலன்களை வேண்டுவதால், தன் மனைவிக்கு நகைகள் வேண்டுமென்று குதித்திட, கண்ணைப் பறித்து மனம் மயக்கும் நகைகள், தன் எண்ணப்படி வர, அள்ளிக் கொண்டு செல்ல, பின் மூன்றாமவன் வைரங்களாக வேண்டி, செல்வம் மூன்று தலைமுறைக்குச் சேர்த்திட நினைத்தபடி, ஆவலாதிபோல ஓடி வர, காலில் ஒரு கல் தடுக்க, ஆங்காரத்துடன் Bull shit என்று கத்தி குதித்தான்! அவன் நிலைமை என்னவென எண்ணினால், நாம் அவனைப் போலப் பேசாது இருக்கவும் பழகுவோம்!