View Single Post
Old 01-09-2009, 02:29 AM   #14
S.T.D.

Join Date
May 2008
Age
43
Posts
5,220
Senior Member
Default
in fact Murugan is not originally even Indian.... the name SKANDA should give some hints...

BUT.... rishi moolam nadhi moolam aaraya koodaadhu enbaargal...
ஸ்கந்தன் என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு "ஒளிக்கீற்றுப் போல பளீரென்று உதித்தவன்" என்று பொருளாம். அதுவே தமிழில் கந்தன் என்று ஆனது.

புனே நகரில் இருக்கும் பார்வதி ஹில்ஸ் கோவிலில் கார்த்திகேயன் பிரம்மச்சாரியாய் இருப்பதால் பெண்கள் தரிசனம் செய்ய சிலகாலம் தடை இருந்ததாம். ஆனால் கணபதியோ ரித்தி, சித்தி என்று இரு மனைவியருடன் இருக்கிறார்.

நம்ம ஊர்ல பிள்ளையார் இன்னும் பெண் தேடிக் கொண்டிருக்க தம்பி இரண்டு கல்யாணம் முடித்து விட்டார்.

ஆறு என்பது முருகனுடன் சம்பந்தப்பட்ட எண்ணாகும். முருகனின் மந்திரம் "சரவணபவ" எனும் ஷடாட்சரம், நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படையில் பழனி இல்லை. ஆவினன்குடியே அறுபடை வீடாகக் கருதப்படுகிறது. ( அது பழனி மலையடிவாரத்தில் இருக்கிறது). அதுபோலவே திருத்தணிகை மலையும் அதில் இல்லை. குன்றுதோறாடல் என்று எல்லா மலைகளுமே கும்ரனின் இருப்பிடமாகக் கருதப்பட்டு அதன் அடையாளமாக திருத்தணி கொள்ளப்பட்டுள்ளது.

முருகனைப் பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் எழுதியுள்ள புத்தகங்களும், கல்கியில் பரமாச்சார்யர் எழுதிய முருகன் பற்றிய தொடரும் சில விவரங்களைக் கூறும். ( அவை என்னிடம் கிடைத்தால் நான் இங்கு பதிவு செய்கிறேன்)
S.T.D. is offline


 

All times are GMT +1. The time now is 12:09 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity