Thread
:
பழைய பாடல் மேடை நிகழ்ச்சிகள்
View Single Post
01-07-2012, 05:13 AM
#
1
Paul Bunyan
Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
பழைய பாடல் மேடை நிகழ்ச்சிகள்
உலகெங்கும் தமிழர்கள் வாழும் இடங்களில் ஆண்டு முழுதும் அவ்வப்பொழுது பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கான மேடை நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டுள்ளன. வாய்ப்புக் கிடைக்கக் கூடிய நமது ஹப்பர்கள் அந்தத் தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். நிகழ்ச்சிகளின் அறிவிப்புகள், நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகள், உட்பட பலவகையான தகவல் பரிமாற்றங்களுக்கு இது ஒரு தளமாக அமையட்டும்.
தொடக்கப் பதிவாக இன்றைய 06.01.2012 தேதி மாலை சென்னை அண்ணா சாலை ராணி சீதை ஹாலில் நடைபெற்ற தமிழ்த்திரை இசை சாதனையாளர்களுக்கான பாராட்டு விழாவினைப் பற்றிய சிறு தகவல் குறிப்பு.
இன்று 06.01.2012 மாலை மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். பல அந்நாளைய பாடகர்கள் மெல்லிசை மன்னருடன் ஒரு சேர மேடையில் தோன்றிய சிறப்பு வாய்ந்த நாள். வசந்த் தொலைக்காட்சியின் தேனருவி நிகழ்ச்சியின் சார்பாக இசை சாதனையாளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்
1. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
2. பி.பி.ஸ்ரீநிவாஸ்
3. ஏ.எல்.ராகவன்
4. கே.ஜமுனா ராணி
5. எம்.எஸ்.ராஜேஸ்வரி
6. எல்.ஆர்.ஈஸ்வரி
மற்றும் எம்.என்.ராஜம்
இந்த அபூர்வ நிகழ்ச்சியில் அடியேனால் எடுக்கப் பட்ட புகைப்படம் நம் பார்வைக்கு. புகைப்படத்தினை முடிந்த வரையில் நன்றாக எடுக்க முயன்றுள்ளேன். குறை இருப்பின் மன்னித்தருளவும்.
மேடையில் உள்ளோர் - இடமிருந்து வலமாக
1. ஜமுனா ராணி
2. திருமதி வசந்த் குமார்
3. எல்.ஆர்.ஈஸ்வரி
4. திரு வசந்த் குமார்
5. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
6. மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி
7. பி.பி.ஸ்ரீநிவாஸ்
8. ஏ.எல்.ராகவன்
9. எம்.என்.ராஜம்
10. எம்.எஸ்.ராஜேஸ்வரி
நிகழ்ச்சியில் பேசிய அனைத்துப் பாடகர்களுமே மெல்லிசை மன்னருக்குத் தங்கள் குருபக்தியை அளித்து பேசியது நெகிழ்வுடன் இருந்தது.
நிகழ்ச்சியினை ஸ்ரீதரின் நவராக்ஸ் குழுவின் ஸ்ரீதர் தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து அவருடைய குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்புடன்
Quote
Paul Bunyan
View Public Profile
Find More Posts by Paul Bunyan
All times are GMT +1. The time now is
02:24 PM
.