Thread: TFM Lyricist
View Single Post
Old 03-11-2009, 08:40 PM   #1
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default TFM Lyricist
கவிஞர் வைரமுத்துவுக்கு ‘சாதனா சம்மான்' விருது

சென்னை, மார்ச் 22: கவிஞர் வைரமுத்துவுக்கு அகில இந்திய அளவில் வழங்கப்படும் இலக்கிய விருதான சாதனா சம்மான் தேசிய விருதை பாரதிய பாஷா பரிஷத் வழங்குகிறது.

கோல்கத்தாவில் இயங்கி வரும் பாரதிய பாஷா பரிஷத் என்ற இந்திய மொழிக் கழகம், தேசிய அளவில் 14 மொழிகளின் சிறந்த படைப்பாளிகளைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப் பணிகளுக்காக இந்த ஆண்டின் விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இலக்கியம்-நாவல்-திரைப்பாட்டு மூலமாக அவர் இந்திய இலக்கியத்திற்கு செய்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுவதாக பாரதிய பாஷா பரிஷத் அறிவித்திருக்கிறது.

ஜெயகாந்தன், சிவசங்கரி, இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் இந்த விருதை ஏற்கெனவே பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 18-ம் தேதி கோல்கத்தாவில் நடைபெறும் விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு 51,000 ரூபாய் பொற்கிழியும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படுகிறது.

வைரமுத்துவின் படைப்புகளைப் பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்த்துப்பரப்பும் பொறுப்பையும் பாரதிய பாஷா பரிஷத் ஏற்றுக் கொள்கிறது.

சாதனா சம்மான் விருதுக்கு தேர்வாகியுள்ளது குறித்து வைரமுத்து கூறியது:

முதலமைச்சர் கருணாநிதி தமிழுக்கு செம்மொழிப் பெருமை பெற்றுத் தந்திருக்கும் காலத்தில் வங்க மண் இந்த விருதைத் தமிழ் படைப்பாளிக்கு வழங்கியிருக்கிறது. மகாகவி தாகூர் பிறந்த மண்ணில் இந்த விருதைப் பெறுவதில் பெருமைப்படுகிறேன்.

எனக்குத் தமிழும் வாழ்க்கையும் சொல்லிக் கொடுத்த முன்னோடிகளுக்கு நன்றி சொல்லி இந்த விருதைத் தமிழ் மண்ணுக்கே காணிக்கையாக்குகிறேன். ‘இலக்கியம் நேற்று இன்று நாளை' என்ற தலைப்பில் விருது பெறும் மேடையில் ஏற்புரையாற்றுகிறேன் என்றார் வைரமுத்து.
MannoFr is offline


 

All times are GMT +1. The time now is 06:33 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity