Thread
:
Lyricist Naa. Muthukumar
View Single Post
01-30-2009, 09:00 PM
#
9
MannoFr
Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
பட்டு நெய்யும் ஊரிலிருந்து பாட்டு நெய்பவன்!
சந்திப்பு: ஜி.அசோக்
காஞ்சிபுரம் அருகே இருக்கும் கன்னிகாபுரம் என் ஊர். என் நினைவுகளில் மட்டுமே வாத்துகள் நீந்தும் வேகவதி ஆற்றங்கரையில் இருக்கும் ஊர். இன்று அந்த ஆற்றை சாயக் கழிவுகள் தின்றுவிட்டன.
பொன்வண்டுகளை பிடித்து தீப்பெட்டிச் சிறையில் அடைத்ததும், தண்டவாளத்தில் தாமிரக் காசுகளை வைத்து ரயில் ஏறியதும் காந்தமாக மாறும் எனக் காந்திருந்து காசையும் காலத்தையும் தொலைத்ததும், சிவபெருமானுக்கு அடுத்தபடியாக மூன்று கண்ணுடன் இருக்கும் பனை நுங்கில் வண்டி செய்து, பம்பாய்க்குப் போகிறேன் என்று சொல்லி பசுமாட்டுத் தொழுவத்தைச் சுற்றி வந்ததும் அந்த ஊரில்தான்.
நெசவுதான் எங்கள் ஊர் தொழில். என் பால்யத்தின் பகல் பொழுதுகளில் என்னை தூங்க வைத்த தாய். என்னோடு படித்தவர்கள் எல்லாம் பட்டுத்தறி நெய்ய போய் விட்டார்கள். நான் பாட்டெழுத வந்து விட்டேன்.
எங்கள் ஊரின் வழி நெடுகிலும் சின்னதும், பெரியதுமாய் ஏரி கரைகளில் அணிவகுத்து நிற்கும் பனைமரங்கள்.
‘‘ஏரி கரையில் ராணுவ வரிசை கிராப் வெட்டிய பனை மரங்கள்'' என என்னை ஹைக்கூ எழுத வைத்தவை அந்த பனை மரங்கள்தான்.
சாலையோரத்தில் மண்டி கிடக்கும் சீமை ஆடுதொடாச் செடிகள்.
வேலி ஓரத்தில் கிராமஃபோன் குழல்கள் ஆடுதொடா பூக்கள் என எழுத வைத்தது.
இப்படி என் மண்ணில் உள்ள அனைத்துமே என்னை கவிஞனாக மாற்றியிருக்கிறது. அல்லது நான் மாறியிருக்கிறேன்.
எல்லா ஊரையும் போலவே எங்கள் ஊரிலும் ஓர் ஆறு இருந்தது. காஞ்சிபுரத்து பாலாற்றில் இருந்து கிளை பிரிந்து, ஓர் இளம் பெண்ணின் சேலை போல நீண்டு நெளிந்து எங்கள் கன்னிகாபுரத்தைச் சுற்றி வளைந்து செல்லும் ஆற்றுக்கு வேகவதி ஆறு என்று பெயர். இன்று சாய கழிவுகளால் முதியவளின் சேலை போல் கிழிந்து கிடக்கிறது.
என் பால்யத்தின் ஒவ்வொரு ரகசியத்தையும் அந்த ஆறு அறிந்திருக்கிறது. ஊர் அந்நியப்பட்டது போல் பூக்கள் மிதந்த ஆறும் பிளாஸ்டிக் பைகளைச் சுமந்தபடி அந்நியப்பட்டு நிற்கிறது.
வேகவதி ஆற்றங்கரையில்தான் கிரிக்கெட் ஆடுவோம். தென்னை மட்டையில் பேட், சைக்கில் டியூபில் பந்து, ஆடுதொடா குச்சிதான் ஸ்டம்ப். அப்போதெல்லாம் ஆறு எங்களுக்கு அம்பயராக இருந்தது. ஊர்ந்து வந்து தன்னை தொடும் பந்துக்கு அது நான்கு ரன் கொடுத்தது. அந்தரத்தில் பறந்து வந்து தன் மேல் மிதக்கும் பந்துக்கு ஆறு ரன் கொடுத்தது. ஆயினும் ஆறு கொடுக்கும் ஆறு ரன்களைப் பெறும் பாக்கியம் கடைசி வரை எனக்குக் கிட்டியதே இல்லை. வாத்துகளை வேடிக்கை பார்ப்பவன் என்பதால் நான் ‘டக்' அடித்து விட்டு பந்து பொறுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வேன்.
வாத்துகளிடம் என்னைக் கவர்ந்தது அவற்றின் காலடிகள். ஈர மண்ணில் வாத்துகளின் காலடிகள் கடவுளால் வரையப்பட்ட நட்சத்திரங்கள். அந்த சின்ன வயது வாத்துகளின் காலடியோடுதான் என் முதல் பாடலுக்குள் நுழைந்தேன்.
எனக்கு பாம்புகள் என்றால் பயம். படையே நடுங்கும் போது நான் எம்மாத்திரம்? வயல் காடுகளில், கரும்புத் தோட்டங்களில், வைக்கோல் போர்களில் என எத்தனையோ பாம்புகள் படம் எடுத்து முடித்து என் பயத்தையும் எடுத்து ஓடியிருக்கின்றன. தண்ணீர் பாம்புகள் சாதுவானவை. என் நண்பர்கள் தண்ணீர்ப் பாம்பைப் பிடித்து கால்சட்டைப் பையில் போட்டுக் கொண்டு வகுப்பில் வெளியே விட்டு பயமுறுத்துவார்கள். நான் தண்ணீர்ப் பாம்பை பார்த்ததும் தலைதெறிக்க ஒடுகிற ஆள். நூறு பாம்புகள் இருந்தும் கிராமத்தில் வாழ்க்கை சுகமாயிருந்தது. பாம்புகளற்ற நகரத்தில் பயமாயிருக்கிறது.
உயரங்கள் மீதான என்னுடைய காதலை என் கிராமத்து மரங்களே நிறைவேற்றி வைத்தன. கிராமத்தில் மண்ணில் மீது இருந்ததை விட மரங்களின் மீது இருந்த நேரமே அதிகம். என்னைத் தேடிக் கொண்டு வீட்டில் இருந்து வருபவர்கள் தோட்டங்களுக்கும், தோப்புகளுக்குமே வருவார்கள். இலைகளுக்கு நடுவில் ஒளிந்து கொண்டு ஆந்தைகள் மாதிரி குரல் கொடுத்து அவர்களை அலற வைப்பது அப்போதைய விளையாட்டுகளில் ஒன்று.
காலையில் இரண்டு, மூன்று புத்தகங்களுடன் மரம் ஏறிவிட்டால், மதியப் பசிக்குதான் கீழே இறங்குவேன்.
என் கிராமத்திற்கு டூரிங் டாக்கீஸ் வந்தது. கூண்டு வண்டிகளில் இரு புறமும் போஸ்டர் ஒட்டி, ரேடியோ ஸ்பீக்கர்களில் இன்றே கடைசி என்று திரையிடப்படும் படத்தின் சிறப்புகளை சொல்லி, சிறுவர்கள் நாங்கள் பின் தொடர, நோட்டீஸ் கொடுத்துச் சென்றார்கள். மறக்காமல் ஒவ்வொரு தடவையும் கடைசியாக ஒளி ஒலி அமைப்பு ஈஸ்வரி சவுண்ட் சர்வீஸ் என்ற முகவரியோடும் காது குத்து, கல்யாணம், மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் அணுகச் சொன்னார்கள். ஆடு தொடா பூக்கள் வடிவத்தில் சாயம் போயிருந்த அந்த ஸ்பீக்கர்களின் வசீகரத்தில், நாங்கள் ஊரின் எல்லை வரை சென்று வழியனுப்புவோம். இப்படியாகத்தான் மாட்டு வண்டிகளின் ஸ்பீக்கர் உதவியுடன் சினிமாவின் விதை என்னிலும், எங்கள் ஊரிலும் விழத் தொடங்கியது.
மருதமலை மாமணியே முருகய்யா... என்றழைத்து டிக்கெட் கொடுத்து டூரிங் டாக்கீஸ் படம் காட்டியது. கிராமத்தின் ஒரே பொழுதுபோக்கு அதுதான். ஆற்று மணலில் அமர்ந்தபடி, சாம்பல் நிறத்தில் சாயம் போன திரையில் பொரி உருண்டை சாப்பிட்டபடி படம் பார்ப்போம்.
காஞ்சியின் ஆண்டர்சன் மேல் நிலைப் பள்ளியில்தான், எனக்கு உயர் நிலைக் கல்வி. பக்கத்தில் இருக்கும் ஏகாம்பரநாதர் ஆலயத்தின் ஆயிரங்கால் மண்டபம்தான், என் தனிமை வாழ்வின் அடையாளம். என் தேர்வுகள், என் இலக்கிய தாகம் இரண்டுக்காகவும் இங்கே நிறைய படித்திருக்கிறேன்.
பூவரசம் இலையிலே
பீப்பி செய்து ஊதினோம்
பள்ளிக்கூட பாடம் மறந்து
பட்டாம்பூச்சி தேடினோம்
தண்ணீப் பாம்பு வரப்பில் வர
தலைதெறிக்க ஓடினோம்
பனங்காயின் வண்டியில்
பசுமாட்டுத் தொழுவத்தைச்
சுற்றி வந்து பம்பாய்க்குப் போனதாகச்
சொல்லினோம்
அடடா வசந்தம், அதுதான் வசந்தம்
மீண்டும் அந்தக் காலம் வந்து மழலையாக மாற்றுமா? [/tscii][tscii]
Quote
MannoFr
View Public Profile
Find More Posts by MannoFr
All times are GMT +1. The time now is
02:48 AM
.