View Single Post
Old 02-14-2012, 04:13 AM   #2
Jannet.K

Join Date
Oct 2005
Posts
517
Senior Member
Default
ஆராயாமல் சிவ பக்தனை சிவ பக்தனே ஆனாலும் கொல்வது பாவமே. ( உம் : ராமாயணத்தில் ராவணவதம் முடிந்தபின் ஸ்ரீ ராமன் அதனால் தான் ராவணன் சிவபக்தன் என்பதாலும்,பிராமணன் என்பதாலும் ராமேஸ்வரத்தில் ஈசனை வழிபட்டதாக புராண்ம் கூறுகிறது....).

சிலந்தியின் சிவ சேவையை முழுமையாக அறிந்துகொள்ளாமல் முன் யோசனை இன்றி கொன்றதால் யானைக்கு மொட்சம் அளித்தார் சிவபிறான். மாறாக சிலந்தி மறு பிறவியில் சோழ பேரரசனாக பிறக்கும் பாக்கியத்தை அளிக்கிறார் சிவ பெருமான்)....

மறு பிறவி...... செங்கண்ணச் சோழன்....

( இவன் 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்றும் 1ம் நூற்றாண்டைச் சார்ந்தவன் என்போரும் உண்டு. எனினும் முழுமையான தகவல்கள் இல்லை....)

இவனது தாயும் தந்தையும் அரச குலத்திற்க்கு ஆண் வாரிசு வேண்டி,சிதம்பரம் நடராச பெருமானை மன்றாடி மனமுறுக வேண்டுகின்றனர். அதன்படியே அரசியும் கர்பமுற்றாள்.பிரசவ காலமும் வந்தது.இப்பவோ அப்பவோ என்று குழந்தை பிறக்கும் வேளை நெருங்கியது. அரண்மனை ஜோதிடர்களும், ஆன்மீக குருமார்களும் குழந்தை பிறக்கும் நல்ல வேளையை கணிக்க காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மன்னன் ஜோதிடர்களை குழந்தை பிறக்கும் வேளையை கணிக்க கட்டளையிடுகிறான். நீண்ட மவுனதிற்க்குபின் ஜோதிடர் கூறுகிறார்... அரசியார் சோழ குலதிற்க்கு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுப்பார்.ஆனால்......

என்ன ஆனால் ? தயங்காமல் மேற்கொண்டு கூறுங்கள்...

அரசே இதில் இரண்டு அம்சங்கள் இருக்கிறது... 1) குழந்தை பிறக்கும் வேளை அரசியார் இறந்துவிடுவார். 2) ஒரு நாழிகை குழந்தை கழித்து பிறந்தால் இந்த சோழ குலம் மேன்மேலும் விருத்தியாகும்..... இந்த இரண்டும் இந்த குழந்தையின் ஜனன கால பலன்கள்... என்றனர்....

இதை கேட்டுக்கொண்டிருந்த அரசியார் மன்னனிடம் ," எப்படியும் குழந்தை பிறக்கும்போது தான் இறக்கப்போகிறேன்.அதனால் எனது கால் கட்டை விரல் இறண்டையும் கட்டி தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள்.ஜோதிடர் சொன்னதுபோல் ஒரு நாழிகை கழித்து இறக்கி விட்டால் குழந்தை ஒரு நாழிகை கழித்து பிறக்கும் அப்படியாவது நமது சோழ வம்சம் தழைக்கட்டும் " என்று கேட்டுக்கொள்கிறாள்.

அவளது ஆசைப்படியே கட்டைவிரல் இரண்டையும் கட்டி தலைகீழாக தொங்க விடுகின்றனர். ஒரு நாழிகை கழித்து அரசியாரை இறக்கி விடவும்,அவள் உயிர் பிரியவும்,குழந்தை பிறக்கவும் சரியாக இருந்தது.

ஆனால் குழந்தை ஒரு நாழிகை கூடுதலாக,இயற்கைக்கு மாறாக தாயின் கருவறையில் இருந்ததால் பனிக்குட நீர் அவன் கண்களில் புகுந்து பிறக்கும் போதே கண்கள் சிவப்பாக பிறந்து விடுகிறது. அதனால் அவனுக்கு செங்கண்ணன் என்று பெயரிடுகின்றனர். நாளடைவில் செங்கண்ண சோழன் என்று பெயர் பெருகிறான்.


http://en.wikipedia.org/wiki/Kocengannan
Jannet.K is offline


 

All times are GMT +1. The time now is 03:15 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity